Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - சுஷ்ருதா – 01 - சித்ரா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - சுஷ்ருதா – 01 - சித்ரா

sushrutha

குனிந்து தன்  ஷூ  லேஸ்  கட்டும்  அந்த நேரத்தில் ,இனி தன்னை  வெளியே அழைத்து போவான் என்ற குஷியில்  நின்ற இடத்திலேயே  ஒரு சின்ன ஸ்டெப்  டான்ஸ் ஆடியது ' மின்டி'  என்ற பெயர் கொண்ட  டாபர்மன்  வகையை சேர்ந்த நாய் .

நிமிர்ந்து வாஞ்சையுடன் அதன் தலையை தடவிவிட்டு  அதன் கழுத்தில் ,கயிறை  மாட்டினான் சசிகுமார் ,வெறும் சசிகுமார்  இல்லை ..'.டாக்டர்  சசிகுமார்  ஜெனரல்  பிசிசியன் ',

அவனது  பிஸியான  நாளின் தொடக்கத்தில் ,அவன் செல்லும் இந்த நாயுடனான நடைப்பயிற்சி ,அவன் மிக விரும்பி செய்யும் ஒரு செயல் .

முழு நாளுக்குமான  எனெர்ஜியை  அங்கேதான் பெறுவான் .

    பிரிஸ்க்காக  அவன் வீதியில்  நாயுடன் நடக்கும்  அந்த இடைவெளியில் அவனை பற்றிய ஒரு சின்ன  இன்ட்ரோ ...

 அவனது  குடும்பத்தில் ,அவன் மூன்றாவது தலைமுறை  மருத்துவன் ஆவான் .

தாத்தா  சுந்தரம் ,இப்போது உயிருடன் இல்லை என்றபோதும் அவர் தொடங்கிய ' சுஷ்ருதா  ' இன்றும் இருக்கிறது .

சிறிய அளவில்  தாத்தா ஆரம்பித்த மருத்துவமனை ,அப்போதிருந்த நான்கு படுக்கை ,ஒரு சின்ன கன்சல்டிங் ரூம் என்ற நிலையில் இருந்து மிக பெரிதாய் வளர்ந்துவிட்டது .

தாத்தா காலத்தில் ,வீட்டிலும் சென்று மருத்துவர்  நோயாளியை கவனிக்கும் வழக்கம் இருந்தது ,இருந்தும் தன்  நேரடி  கண்காணிப்பில் ,மருத்துவ வசதியுடன் வைத்து பார்க்கவேண்டிய  சூழ்நிலையில் உள்ள நோயாளிகளை கவனிக்க என்று தொடங்கியது தான் இந்த மருத்துவமனை .

வீட்டுக்கே சென்று பார்ப்பது ஒருபக்கம் தொடர ,இதையும் ஒரு பக்கம்  ஆரம்பித்து  தாத்தா நடத்த ,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தொடர்ந்து அவர் பாதையில் ,மருத்துவம் பயின்று வந்த ,அப்பா  மாணிக்கம் அதை மேலும் தேவைக்கேற்ப விரிவு படுத்த 

இன்று  ஒரு ஐந்து மாடி கட்டிடத்தில் ,இருபத்திநாலுமணி நேரமும் இயங்கும் ,ஒரு மல்டி ஸ்பெசியாலிட்டி  மருத்துவமனையாக  உருவாகி ,கம்பீரமாக மக்கள் பணி  ஆற்றி நிற்கிறது .

ஐந்து  மாடி கட்டிடத்தில் ,தரை தளத்தில்  வரிசையாக  கன்சல்டிங் அறைகள் இருந்தன ,அவற்றில்  மணிக்கொரு  முறை ,ஒருவர் என்ற கணக்கில்  விசிட்டிங் மருத்துவர்கள் வந்து அங்கே சேவை செய்வதை தவிர ,சசி குடும்பமும்  அங்கேயே இருந்து மருத்துவம்  பார்த்தது .

இரண்டாவது  மாடியில் ,மகப்பேறு  பிரிவு ,அதற்கான  படுக்கை  வசதி ,மற்றும் டெலிவரி ரூம் ,ஸ்கேன் ரூம் ,என்று தேவையானது இருக்க 

மூன்றாவது தளத்தில்  ஆபரேஷன் தியேட்டர்  இருந்தது ,

மற்றும் பிசியோ ரூம் ,ஐ  சி யு  வார்டு என்று ஒரு மருத்துவமனைக்கு தேவையான அனைத்தும் இருந்தது .

அங்கே  வேலை செய்யும்  வார்டு பாய் ,நர்ஸ் ,ஆயா  போன்றவர்களுக்கு  வழக்கமான நீல ,மற்றும் வெந்நிற  உடை ,அவர்கள் லோகோவுடன்  வழங்கப்பட்டருந்தது .

எல்லா மருத்துவமனை  போன்றே ,மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது .

காயத்துடனும் ,கட்டுகளுடனும்  ,வலியுடனும் ,கவலையுடன் என்று வகை வகையான மனிதர்கள் ,ஏதோ  கண்ணுக்கு தெரியாத சக்தியின் பேரில் உள்ள  நம்பிக்கையுடன் ,அதை செயலில் காட்டி தங்களை காப்பாற்றும் மருத்துவரின் நேரடி கண்காணிப்பிற்கு என்று தேடி வந்த மக்கள் கூட்டம் 

அவர்களை   முழு அக்கறையுடன் ,படித்த படிப்பின் துணையுடன் கவனிக்கும் மருத்துவர்கள் ,அவர்களுக்கு உதவியாக செவிலியர்கள் ,மற்றும் உதவி மருத்துவர்கள் .

 அதில்  ஒருவராக தாத்தா ,தந்தை வழியில் ,இவனும்  ஜெனரல் மெடிசின் எடுத்து படித்து ,அதில் எம் டி  முடித்து இந்த இருபத்து  எட்டு வயதில் ,மிக திறமையான ,மற்றும் கனிவான மருத்துவன் என்ற பெயருடன்  பணியாற்ற ,அவனது நாள்  இப்படித்தான் செல்ல நாயுடன் தொடங்குகிறது .

அவனுடன் கூட பிறந்த அக்கா பிருந்தா  ,ஒரு மகப்பேறு மருத்துவராக இதே மருத்துவமனையில்  பணியாற்ற ,அவள் கணவர்  ப்ரித்திவி  ஒரு நியூரோ சர்ஜென்  ஆவார் .

அவர்களுக்கு கல்யாணம்  ஆகி  நான்கு  வயதில்  சூர்யா என்று {வருங்கால மருத்துவன் } மகன் இருக்க ,

இவர்கள் அனைவரும் இருப்பது ஒரே இடத்தில் .

தாத்தா  காலத்திலே வாங்கி வசித்த  பெரிய இடத்தில்  ,சசி அவன் தாய் தந்தையுடன் வசிக்க ,அதே  காம்பௌண்டில் மற்றொரு பகுதியில் தனி வீட்டில்  பிருந்தா குடும்பம் வசித்தது .

மகளை  தன்  கண் பார்வையில்  வைத்திருப்பதோடு ,அவர்கள் அனைவரும் ஒரே மருத்துவமனையில்  பணி  செய்வதால் ,ஒரே இடத்தில்  இருந்தது கூடுதல் வசதியாய் இருந்தது .

மருத்துவமனை  இரண்டு தெரு தள்ளி  இருக்க ,அவர் அவர் வசதிக்கு ,கேஸ் போட்ருக்கும்  நேரத்திற்கு தகுந்தாற்போல் கிளம்பி சென்றனர் .

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Chitra

Like Chitra Kailash's stories? Now you can read Chitra Kailash's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
  • Sushrutha (Updated fortnightly on Friday Morning)
Add comment

Comments  
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 01 - சித்ராsaaru 2018-11-24 15:20
Nice start chitra
Starting la ye adrichi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 01 - சித்ராPadmini 2018-11-23 23:24
cute and interesting start Chitra!! :-) eagerly waiting for the next update!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 01 - சித்ராsasi 2018-11-23 15:26
கதை ஆரம்பம் க்யூட்டா இருக்கு மேம். டாக்டர் குடும்பம் அவங்க வரலாறு அசத்தலா இருக்கு எல்லாரும் ஒண்ணா சாப்பிடறது ஒத்துமையா இருக்கறது நல்லாயிருக்கு மருத்துவமனையை பற்றின வர்ணனை சூப்பர். கதை முழுக்க மருத்துவமனையிலேயே நடக்கற மாதிரி 2 பக்கமும் அதையே எழுதியிருக்கீங்களே நிஜமாவே அங்கதான் கதை நடக்குமோ மேம் சுஷ்ருதாங்கறது யாரு யாராவது ஒருத்தரோட நினைவால தாத்தா வைச்ச பேரா? யார் வந்தாங்கன்னு ஒரு ஹின்ட் கொடுத்திருக்கலாமே?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 01 - சித்ராAdharvJo 2018-11-23 14:56
Doc first eppilaye ungalukk appadi ena adhirchi :Q: next epi la therindhu kolgiren but next time nails cut panitu vanga dr :P Cool and interesting kick off chitra ma'am infrastructure landhu hospitals oda spl Dettol fragrance varai perfect aga capture seithu irukinga….. :clap: :clap: including the future dr surya oda intro (y) thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 01 - சித்ராmahinagaraj 2018-11-23 11:18
ரொம்ப நல்ல தொடக்கம் மேம்.. :clap: :clap:
சசி ஹீரோ சூப்பர்..
நல்லகுடும்பம்..
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 01 - சித்ராThenmozhi 2018-11-23 10:01
Periya doctor family-nu sollunga. Nice start Chitra.

Vaathavanga heroine & family-a?

Waiting to read about it.
Reply | Reply with quote | Quote
# Sushrutha nby ChitraSahithyaraj 2018-11-23 08:38
Superb start. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 01 - சித்ராSrivi 2018-11-23 07:48
Sis, aarambame amarkalam.. Awesome..
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top