(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 36 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சுடரொளியோடு அமுதனும் மகி வீட்டிற்கு செல்வதாக முடிவெடுத்திருந்தான். அதற்கு காரணம் அருள்மொழி தான், 

ரெஸ்ட்டாரென்டில் சுடரொளி அருளை பற்றி பேசும்போது, அமுதனுக்கு ஒருவேளை அது அவன் பார்த்த அருள்மொழியாக இருக்குமோ என்று தோன்றினாலும், அப்படி இருக்கவும் முடியுமா என்ன? எத்தனையோ பேர் ஒரே பேர் கொண்டவர்கள் இருப்பார்கள் இல்லையா? அதனால் சுடர் சொன்ன அருள்  வேறு ஆளாகவும் இருக்கலாம் என்று நினைத்து அமைதியாகிவிட்டான்.

அருள்மொழியின் நினைவை தவிர்த்து சுடர் பேசுவதை கவனிக்க ஆரம்பித்திருந்தான். “என்ன சொல்ற சுடர், வீட்ல தானே மகிக்கும் அவனோட அத்தைப் பொண்ணுக்கும் கல்யாணம் பேசலாம்னு முடிவு செஞ்சாங்க.. ஆனா மகி அதுக்கு ஒத்துக்கிட்டானா? இல்லல்ல, ஜஸ்ட் பாட்டியோட அவங்க ஆசையை தானே சொல்லியிருக்காங்க.. அதுக்குள்ள நீ இப்படி பயப்படணுமா?

இன்னைக்கு கூட நீ என்கூட பேசறதை பார்த்து மகி கண்ணுல பொறாமை தெரிஞ்சுது தெரியுமா? நான் சொல்றது போல மகிக்கு உன் மேல காதல் இருக்கு..”

“ஆனா அன்னைக்கு மகிழ் பேசியதை தான் நான் சொன்னேனே, மகிழ்க்கு காதல்னா பிடிக்காது.. அதுவும் பெத்தவங்களை எதிர்த்துக்கிட்டு காதல் கல்யாணமும் பிடிக்காது..”

“இங்கப்பாரு அன்னைக்கு மகிழ் பேசினது தன்னோட ப்ர்ண்டோட காதலைப் பத்தி தானே, அவனோட ப்ரண்ட் மேரேஜ் செஞ்சுக்கிறதான சூழ்நிலையும் மகிழ்க்கு பிடிக்கல.. அதுக்காக மகிழ் காதலே பிடிக்கலைன்னா உன்கிட்ட சொன்னான்..”

“அப்படி சொல்லல.. ஆனா அம்மா, அப்பாவை எதிர்த்து கல்யாணம் செய்யறது பிடிக்காதுன்னு சொன்னான் தானே..”

“சரி மகிழ்க்கு இப்போ அந்த சூழ்நிலை வந்துச்சா..”

“நீ சொல்றது போல மகிழ் என்னை காதலிச்சிருந்தா, அப்போ அருளை கல்யாணம் செஞ்சுக்கிற மாதிரி நிலை வந்தா, அப்போ எனக்காக அவங்க குடும்பத்தை எதிர்க்கிற மாதிரி வராதா?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இப்போ என்ன கல்யாணம் பேசி முடிச்சு நாள் குறிச்சது போல பேசற, எதுவோ பெருசா நடந்துட்ட மாதிரி பயப்பட்ற

எதுவும் நமக்கு வந்தா தான் தெரியும், இப்போ மகிக்கு அவங்க அத்தை பொண்ணுக் கூட கல்யாணம் பேசியிருக்கிறது தெரியல, அப்படியே ஒருவேளை மகிக்கு இப்படி ஒரு பிரச்சனை வரும்னாலும் அதை சமாளிக்க அவனுக்கு தைரியம் இருக்கலாம் இல்ல.. குடும்பத்தை அவன் ஏன் எதிர்த்துக்கிட்டு உன்னை கல்யாணம் செய்யணும்.. நீ யாரோ வா.. ஒருவிதத்துல நீயும் அவனுக்கு அத்தை பொண்ணு முறை தானே வரும்..”

“ஆனா அப்போ அவன் அருளை வேண்டாம்னு சொல்லணும் இல்ல.. அது பாட்டிக்கும் கலை பெரியம்மாவுக்கு பிடிக்காது.. புகழ் மாமாவும் அம்மா, தங்கை பேச்சை தானே கேட்பாரு..”

“ஆனா கல்யாணம் செய்றவங்களுக்கும் பிடிக்கணும்னு இல்ல.. மகியோட விருப்பம் இல்லாம அவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சுடுவாங்களா?”

“அம்மா, அப்பா அருளை கல்யாணம் செய்ய சொன்னா, அவங்க பேச்சை மீறக் கூடாதுன்னு மகி ஓகே சொல்லிட்டா, அப்போ என்ன செய்றது..”

“எனக்கென்னவோ நீ ரொம்ப பயப்பட்றியோன்னு தோனுது சுடர்..”

“உனக்கு தெரியாது சார்லி.. அவங்க பேமிலியே எல்லாவித்திலும் ஒற்றுமையா இருக்காங்க.. ஒருத்தரோட மனசை ஒருத்தர் ஹர்ட் பண்ண ரொம்ப யோசிப்பாங்க.. அருளுக்கு அப்பா இல்ல, அருளுக்கும் அவளோட அக்காக்கும் எல்லாமே புகழ் மாமா தான் பார்க்கிறாரு.. கலை பெரியம்மாவுக்கு அவங்க ஹஸ்பண்ட் கூட இல்லையேன்னோ இல்லை அருளுக்கோ  மணி அக்காக்கோ அப்பா  நம்ம கூட இல்லையேன்னு ஃபீல் வரக் கூடாதுன்னோ எல்லாம் யோசிப்பாங்க.. அவங்களை வருத்தப்பட வைக்கிற மாதிரி நடந்துக்க மாட்டாங்க.. அதனால கலை பெரியம்மாவுக்கு இப்படி ஒரு ஆசை இருக்குன்னா நிறைவேத்த தான் பார்ப்பாங்க..

அதுமட்டுமில்லாம எனக்காக பேச யார் இருக்கா.. அப்பா எனக்காக பேசுவரா? கண்டிப்பா மாட்டாரு.. கலை பெரியம்மாக்கு எதிரா சித்தியும் பேச மாட்டாங்க.. பூங்கொடி அத்தையை சொல்லவே வேண்டாம்.. எல்லோரும் ஒரு விருந்தாளி போல் நினைச்சு தான் என்கிட்ட அக்கறை காமிக்கிறாங்க. அதுக்கு மேல என்னை அவங்க மருமகளா யாரும் யோசிச்சு பார்க்க மாட்டாங்கன்னு தான் தோனுது..”

“சரி நீ ரொம்ப வொர்ரி பண்ணிக்காத, அதான் நான் வந்துட்டேன் இல்ல.. யார்க்கிட்ட பேச முடியுமோ பேசி உனக்கும் மகிக்கும் கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.. தைரியமா இரு சரியா..” என்று அவளை சமாதானப்படுத்தியவன்,

“ஆமாம் மகியோட அத்தைப் பொண்ணு , அதான் பேர் என்ன சொன்ன அருள் அவளுக்கு அப்பா கிடையாதா?” என்றுக் கேட்டான். முன்பு இலக்கியா அருள்மொழிக்கு அப்பா இல்லை என்று அவனிடம் கூறியிருக்கிறாள் இல்லையா? இப்போது சுடரும் அதையே கூறவும் இரண்டு பேரும் ஒருவர் தானோ என்று சந்தேகம் மீண்டும் வரவே கேட்டான்.

“ஆமாம் அருள் குழந்தையா இருக்கும்போதே அவளுக்கு அப்பா இல்லை.. மகி வீட்ல தான் அவ சின்ன வயசுல இருந்தே இருக்கா..” என்று அவள் பதில் கூறவும்,

“ஓ..” என்றுக் கேட்டுக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.