“சரி அருளுக்கும் மகியை கல்யாணம் செஞ்சுக்கறதுல விருப்பம் இருக்கா.. அதாவது சின்ன வயசுல இருந்தே அந்த ஆசை இருக்கா..”
“தெரியல.. ஆனா நான் பார்த்த வரைக்கும் எல்லாம் ஜாலியா ஒரு ப்ரண்ட் போல தான் பழகுறாங்க.. ஆனா மகி கூட நான் பேசினா அருளுக்கு பிடிக்காது.. ஒருவேளை அது காதல் தானோ..” என்று சுடர் பயத்தோடு கேட்டாள்.
இதுவரையிலும் அவன் நினைத்த அருள்மொழி தான் மகியின் அத்தை பெண்ணா என்று தெரியவில்லை, இதில் அவள் மகியை காதலித்தால் அது சுடருக்கு சிக்கலாகிவிடுமே என்று நினைத்தவன்,
“சரி யார் அருள் கூட ரொம்ப நெருக்கம், அவங்களுக்கு தெரியுமில்ல, மகியை அந்த பொண்ணு காதலிக்கிறாளான்னு..” என்று கேட்டான்.
“மகி, அறிவு எல்லோருமே அவளுக்கு நெருக்கம் தான், இருந்தாலும் அறிவோட தங்கை இலக்கியா தான் ரொம்ப நெருக்கம், இங்க சென்னைக்கு வந்தா எப்போதும் அருள் கூடவே இருப்பா.. இப்போக்கூட அவளோட ஸ்டடீஸ் முடிஞ்சு, கொஞ்ச நாள் இங்க இருந்துட்டு போக வந்திருக்கா, நீ முன்ன சென்னை வந்தப்பக் கூட இலக்கியா இங்க தான் இருந்தா, ரெண்டுப்பேரும் ஏதோ ஒரு கம்பெனியில் இண்டர்ன்ஷிப் கூட செஞ்சாங்க..” என்று அவனது சந்தேகத்தை அவளறியாமல் தீர்த்துக் கொண்டு இருந்தாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
இப்போது இரண்டு அருளும் ஒரே ஆள் என்பது தெள்ளத் தெளிவாக புரிந்துவிட்டது. அவனுக்கு தெரிந்த வரையில் அருள் யாரையாவது காதலித்திருப்பாள் என்பது சந்தேகம் தான், எப்போதும் ஒரு டம்ளர் கஞ்சி குடித்தது போல் விறைப்பாக இருப்பாளே,, ஆனாலும் மனதில் மகியை திருமணம் செய்துக் கொள்ளும் ஆசை இருக்கிறதா? என்றும் தெரியவில்லை,
இப்போது தான் மகியோடு சேர்த்து அருள், இலக்கியா என்று அந்த குடும்பத்தில் தெரிந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதே, அதனால் அந்த வீட்டிற்குச் சென்று வர அவன் நினைத்தான்.
“சரி வர்ற சண்டே நாம அங்க போவோம், எல்லாரையும் தெரிஞ்சுக்கிட்டா எனக்கும் உன்னைப்பத்தி யார்க்கிட்ட பேசன்னு ஒரு ஐடியா கிடைக்கும்.. அப்புறம் மகிக்கிட்டயும் நீ எப்பவும் போல இரு, இன்னைக்கு போல மூஞ்சிய தூக்கி வச்சுக்காத..” என்று அவன் கூறவும், அவள் தலையை ஆட்டிக் கொண்டாள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை மகி வீட்டில் 7 மணிக்கே கிரிக்கெட் விளையாட தயாராகிவிட்டனர். சிறிது நாட்களாக அனைவரும் வேலையிலும் படிப்பிலும் மூழ்கிவிட்டதால் கிரிக்கெட் விளையாட நேரமில்லாமல் இருந்தது.
இப்போது அருள், இலக்கியாவிற்கும் பரிட்சைகள் முடிந்து பட்டப்படிப்பையும் முடித்துவிட்டார்கள். அதனால் உடனே இலக்கியா இங்கே அருளோடு இருக்க வந்துவிட்டாள்.
ஊரில் சொந்தக்காரர் ஒருவரின் மரணம் என்பதால் மாணிக்கம் அழைக்கவே அறிவு மட்டும் ஊருக்குச் சென்றிருந்தான். இலக்கியா வர வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறுவிட்டார். அதனால் அவனை தவிர அனைவரும் வீட்டில் இருப்பதால் இன்று கிரிக்கெட் விளையாடலாம் என்று முடிவு எடுத்தனர்.
பொதுவாக இதுபோன்ற சமயங்களில் எழில் சனிக்கிழமையே பிள்ளைகளை கூட்டிக் கொண்டு விட்டுக்கு வந்துவிடுவாள். சுடர் வந்ததிலிருந்து இங்கு தங்குவதில்லை என்றாலும், கதிரோடு அவர்களை சனிக்கிழமையே அனுப்பி வைத்து விடுவாள்.
ஆனால் நேற்று இரவு கதிருக்கு தெரிந்தவர். வீட்டில் விசேஷம் என்பதால், மறுநாள் காலை அழைத்து வருகிறேன். என்று எழில் நேற்றே சொல்லியிருந்தாள்.
பாட்டி அருள், மகி திருமண பேச்சை எடுத்ததிலிருந்தே, சுடர் அவ்வளவாக வீட்டுக்கு வருவதில்லை. ஆனால் அது மகிக்கு தெரியாதே, அவள் ஓவியப் பள்ளியில் வேலை இருப்பதாக சொல்லிவிடுவாள். இதில் இப்போது அமுதன் வேறு வந்திருக்கிறான். அதனால் அவள் வரமாட்டாள் என்று மகி நினைத்துக் கொண்டான்.
அதனால் தமிழ், புவிக்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்க, அவர்கள் இருவரையும் அழைத்து வந்ததோ சுடரொளி, மகி அவள் வருகையை கண்டு மகிழ்ந்தான் என்றால், அவளோடு உடன் வந்தவனை பார்த்த அருள்மொழிக்கும் இலக்கியாவிற்கும் மயக்கம் வராத குறை தான்!!
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.