(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 13 - ஸ்ரீ

Vizhi vazhi uyir kalanthavale

தொடு வானம் தொழுகின்ற நேரம் 

தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும் 

தொடு வானமாய் பக்கமாகிறாய் தொடும் போதிலே தொலைவாகிறாய்

தொடு வானம் தொடுகின்ற நேரம் 

தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும் 

 

இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே 

உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ 

இலை மேலே பனித்துளி போல் இங்குமங்குமாய் உலவுகின்றோம் 

காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே

யங்கி விழுந்தவளை பார்த்தவருக்கு ஒரு நொடி ஒன்றும் ஓடவில்லை.தொலைப்பேசி அழைப்பை அப்படியே நிறுத்திவிட்டு மகளை தூக்கி மடியில் கிடத்திக் கொண்டார்.

டீப்பாயில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க அப்போதும் அவள் கண் திறக்காமல் இருக்கவும் கொஞ்சம் பயந்து தான் போனார்.

சரியாய் அந்நேரம் திவா அவள் மொபைலிற்கு அழைக்க அவனிடம் பேச விருப்பமில்லை எனினும் இதை சொல்லாமல் இருக்க முடியாது என்று உணர்ந்தவர் அழைப்பை ஏற்று காதில் வைத்த நொடி,

“கண்ணம்மா..நல்லாயிருக்க தான..எங்க இருக்க..ஏனோ மனசே சரியில்ல..ஹலோ கேக்குதா..”

“நா சுலோச்னா பேசுறேன்..”

“ஓ..சாரி அத்தை..வெண்பா உங்ககூடதான் இருக்காளா..ஒண்ணுமில்ல ஏதோ மனசு படபடப்பாவே இருக்கு அதான் அவ நல்லாயிருக்காளானு..அவ பக்கத்துல இருந்தா ஒரு நிமிஷம் போனை கொடுங்களேன்..”

அத்தனை பதட்டத்திலும் சுலோச்சனாவிற்கு அவனை எண்ணி அதிசயமாகத் தான் இருந்தது.அதேநேரம் இத்தனை அன்பிருப்பவன் எதற்க்காக மனைவியிடம் எதையோ மறைக்க வேண்டும் என்றும் தோன்றியது.

“ஹலோ அத்தை..”

“ஆங்ங் அது வந்து வெண்பா..என்னனு தெரில நல்லா தான் இருந்தா திடீர்னு மயங்கிட்டா..தண்ணி தெளிச்சு கூட பாத்துட்டேன்..”

“என்ன!!!என்ன சொல்றீங்க..இதை தான நீங்க முதல்ல சொல்லிருக்கனும்..சரி டென்ஷன் ஆகாதீங்க நா ஒரு பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்..”

போனை வைத்தவருக்கே ஒரு நொடி தலை சுற்றியது இருந்தும் அடுத்த நிமிடம் தன்னை சீர்படுத்தியவர் ஏசி டெம்பரேச்சரை சரி செய்து அவளருகிலேயே அமர்ந்திருந்தார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சொன்னபடியே பத்து நிமிடத்தில் வந்தவன் கதவை திறந்தவரிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.நேரே வெண்பாவின் அருகில் ஓடியவன் அவளை எழுப்ப முயற்ச்சிக்க கண் விழித்தாளில்லை.

“என்னாச்சு சடனா?எதோ ஷாக்ல மயங்கிருக்க மாதிரி இருக்கு என்னாச்சு..”

“அது..வந்து..”

அவர் அடுத்து பேசுவதற்குள் வெண்பா கண்விழிக்க திவாவின் கவனம் அவள்புறம் திரும்பியது..

“கண்ணம்மா..”அவன் முடிப்பதற்குள் அவளின் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

“என்னடா”,என அவள் முகம் பற்ற போனவனை தவிர்த்து மெதுவாய் எழுந்து அமர்ந்தாள்.

அவள் பின் சாய்ந்து அமர்ந்து தன் விரல்களிலேயே பார்வையை பதித்திருக்க இந்த வெண்பா அவனுக்கு பரிட்சையமில்லாதவள் நிச்சயமாய்.

“ஒண்ணுமில்ல..மார்னிங் சாப்பிடல மதியானமும் கம்மியாதான் சாப்ட்டேன் அதான் மயக்கம் வந்துருச்சு..”

“மார்னிங் தான சொல்லி அனுப்பினேன்..மே பி டீஹைட்ரேட் ஆயிருப்ப தண்ணீர் சாப்டியா இல்லையா..கொஞ்சமா சாப்டு”,என டம்ளரை அவளருகில் எடுத்துச் செல்ல அதை அப்படியே கையில் வாங்கியவள் அவளே பருகினாள்.

தன்னை ஒதுக்குகிறாள் என்பது அப்பட்டமாய் தெரிந்தாலும் காரணம் புரிபடாமல் உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருந்தான் திவ்யாந்த்.சரி எதுவாயினும் வீட்டிற்குச் சென்று பேசிக் கொள்ளலாம் என அவன் சில நிமிடங்கள் அமைதி காத்தான்.

“இப்போ பெட்டரா கண்ணம்மா..கிளம்பலாமா?”

“எங்க??”

“என்ன கேள்வி இது நம்ம வீட்டுக்கு தான்…”

“இல்ல நா ஒரு ரெண்டு நாள் அம்மாவோட இருந்துட்டு வரேன்..”,அவனை பார்க்காமல் சுரத்தே இல்லாத குரலில் அவள் கூற அவனுக்கோ சொல்ல முடியா வலி அவளின் இந்த பதிலால்.

“சரிடா மார்னிங் கொண்டு வந்து விட்றேன்.சிந்தாம்மாகிட்ட வேற ஒண்ணும் சொல்லல..”

“ஏன் எங்கம்மாவோட இரண்டு நாள் இருக்கணும்னா கூட அத்தனை பேர் பெர்மிஷன் வேணுமா எனக்கு..அம்மாவோட தான இருக்கேன்..இல்ல வேற யாரா..”

“கண்ணம்மா போதும்..”,அந்த வார்த்தையை கேட்ட பின்பும் அவனின் குரல் சாதாரணமாகவே ஒலித்தது.ஆனாலும் இழுத்துப் பிடித்த பொறுமை வெண்பாவை ஒரு நொடி அவன் முகம் பார்க்க வைத்தது.இருந்தும் அமைதியாய் இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.