(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 09 - அனிதா சங்கர்

Kathal kathalitha kathaliyai kathalikkum

“மனம் படைத்தேன்

        உன்னை நினைப்பதற்கு...

நானும் வடிவெடுத்தேன்

        உன்னை மணப்பதற்கு...”

வள் அவர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்ப்பார்க்கவில்லை...மதிவேந்தனே சம்மதித்த பிறகு  திருமணம் பற்றி அவளுக்கு எழுந்த  நம்பிக்கையை தங்களது எதிர்ப்பின் மூலம் உடைத்தெரிந்தனர் அவளது அண்ணனும்,தந்தையும்...

அங்கு இருந்த அனைவருக்கும் இது அதிர்ச்சி தான்...அவர்கள் எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தத இடத்தில் சம்மதம் கிடைக்க இப்படி கதிரேசனும்.கௌதமும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று அவர்கள் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை...

“கதிரேசா உனக்கு என்னப்பா பிரச்சனை,அவங்களே சம்மதிச்சுட்டாங்கள அப்பறம் உனக்கு என்ன... ” என்று கேட்டார் அந்த பெரியவர்...

“இல்ல மாமா என்னோட பொண்ணுக்கு  இந்த கல்யாணம் வேண்டாம்...அவ கல்யாணமே பண்ணாம எங்ககூட இருந்தாக்கூட பரவாயில்லை...அவளுக்கு இந்த கல்யாண வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு எனக்கு தோணலை...” என்று கூறி தேன்நிலாவின் மனதில் இடியை இறக்கினார் அவளது தந்தை.

“தாத்தா என்னை மன்னிச்சிடுங்கா எனக்கும் வேந்தனுக்கு என்னோட தங்கச்சியை கட்டிக்கொடுக்க சம்மதம் இல்லை...”என்றுக் கூற,என்ன செய்வது எப்படி இந்த பிரச்சனையை தீர்ப்பது என்று தெரியாமல் தவித்தனர் அந்த பெரியவர்கள்...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவர்கள் இவ்வாறு முழித்துக்கொண்டிருக்க தனது தந்தையின் கூற்றிலும், தனையனின்  கூற்றிலும் சிறுநொடி பயந்தாலும் தனது மதி மச்சான் இல்லை என்றால் தான் இல்லை என்பதை உணர்ந்தவள்... தனது தந்தையிடமும், தனையனிடமும்  பேசவேண்டும் என்று கூறி அழைத்து சென்றாள்...

சிறிது நேரம் கழித்து வந்தவர்கள் திருமணத்திற்கு சம்மதம் சொல்ல...தேன்நிலா அவர்களிடம் என்ன கூறி சம்மதிக்க வைத்தால் என்று யாருக்கும் தெரியவில்லை ஆனால் சம்மதம் சொன்னவர்கள் உதட்டளவில் மட்டுமே சம்மதம்  சொன்னார்கள்  என்று மட்டும் தான் அனைவருக்கும் தோன்றியது...

அனைவரது சம்மதமும் கிடைத்துவிட அடுத்து கல்யாணவேலைகள் நடக்க ஆரம்பித்தது...அடுத்த பதினைந்து நாட்களில் திருமண தேதி நிச்சயக்கப்பட்டது...

தங்களுக்கு இந்த திருமணம் பிடிக்காவிட்டாலும் தனது அன்பு தங்கை மற்றும் தனது அன்பு மகளின் கல்யாணம் அதுவும் அவளது  கண்கள் இவ்வளவு நாள் கண்ட கனவுகளின் நினைவுகள் நிஜமாகும் தருணம் என்பதால் தங்களின் மனதில் உள்ளதை அனைத்தையும் அப்போதைக்கு ஒதுக்கி வைத்துவிட்டு  கல்யாண வேலைகளை பார்த்து பார்த்து செய்ய ஆரம்பித்தனர் கதிரேசனும்,கௌதமும்...

தங்களது மகளுக்கு வேண்டியவைகளைப் பார்த்து பார்த்து வாங்கினர் அன்னையர் இருவரும்...என்னதான் தனது மகளின் மீது இருவருக்கும் கோபம் இருந்தாலும்  அவளது வாழ்க்கையை ஆரம்பிக்க போகும் இந்த நேரத்தில் அவளுக்கு அனைத்தையும் பார்த்து பார்த்து செய்ய தான் அந்த அன்னை மனம் நினைத்தது...

அதற்காக அனைவரும் அவளிடம் நன்றாக பேசினார்கள் என்று இல்லை... மனதில் இருக்கும் கோபம் வார்த்தையாக வெளியில் விழாமல் இருக்க  அவளிடம் மிகவும் உரிமையெடுத்து பேசுவதை தவிர்த்தனர் அவளது இரத்த உறவுகள்...

தவறுதலாக கூட அவளது மனதினை புண்படுத்த அவர்கள் விரும்பவில்லை... அதனால் தேன்நிலாடம் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தனர் அனைவரும்...

அது தேன்நிலாவிற்கு புரிந்து இருந்தும் அதைபற்றி பெரியதாக கவலை கொள்ளும் நிலையில் இல்லை...

கிடைக்காதோ என்று ஏங்கிய பொருள் இன்று தனக்கே உரிமை உள்ளதாய் மாறபோகும்  மகிழ்ச்சியில் இருந்தால் அவள்... தனது சொந்தங்கள் என்றும் தன்னை விட்டு எங்கு செல்லப் போகிறது என்ற எண்ணம் அவளை அவ்வாறு எண்ண விடாமல் செய்தது...

இவர்களது திருமணத்தால் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது மூவர் மட்டுமே...

கயலும்,அசோக்கும் தான் அது... தேன்நிலாவின் காதல் எப்படிப்பட்டது என்று தான்  அவர்களுக்கு தெரியுமே...

திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே மணமக்களுக்கு நலங்கு வைத்தனர்...

வேந்தனுக்கு நலங்கு வைத்தப்பின்னர் தேன்நிலாவிற்கு நலங்கு வைத்தனர்..

இதோ இதோ என்று அனைவரும்..இல்ல..இல்ல..தேன்நிலா எதிர்பார்த்த அந்த நாளும் அழகாக விடியலை நோக்கி காத்திருந்தது...அந்த விடியல் மட்டும் அல்ல...தேன்நிலா கூடதான் அந்த நாளுக்காகக் காத்திருந்தாள்...

அந்த நாள் விடியற்காலையில் அவளை சீக்கிரம் எழுப்பிவிட்டு அவளை  தயார் செய்ய ஆரம்பித்தனர்...

கனகாம்பர நிறமும்,சிகப்பு நிறமும் சேர்ந்து நடுவில் கொடி போல் மலர்கள் படர்ந்திருப்பதுபோல் நெய்யப்பட்ட பட்டுப்புடவையில் அழகாக அலங்கரிக்கப்படிருந்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.