(Reading time: 11 - 21 minutes)

இதோ இதோ  என்று நேரங்கள் கடக்க அவளை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட கோவிலுக்கு அழைத்து செல்ல தயாரானர்கள்...

மணப்பெண்ணாய் முழுஅலங்காரத்தில் வந்த தன் பெண்ணைப் பார்த்து பெற்றோருக்கு மனம் நிறைந்தது...

இங்கே மதிவேந்தனின் வீட்டில்...

தனது மகனது திருமணம் என்னதான்  தங்களுக்கு பிடிக்காத பெண்ணுடன் என்றாலும் தங்களது மகனின் திருமணத்தை நல்லபடியாக நடத்த விரும்பினர் வேந்தனின் பெற்றோர்..

அந்த பதினைந்து நாட்களில் அனைத்து ஏற்பாடுகளையும் நல்ல விதத்தில் செய்தனர். வருத்தங்கள் பல மனதில் இருந்தாலும் தங்களது அன்பு மகனின் திருமணம் என்பதால் அவர்கள் அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அனைத்தையும் செய்து இருந்தனர்...

ஆனால்  திருமணம் யார் வாழ்வில் முக்கியமான நிகழ்வோ அவனது செயல்களிலும்,முகத்திலுமிருந்து இந்த  திருமணத்தில் அவனது எண்ணம் என்னவென்று  யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை...

அவன் சம்மதம் சொல்லி கல்யாணத்திற்கு பெரியவர்களால் நாள் குறித்த நாளில் வீட்டிற்கு வந்தப்பிறகு  மல்லி அவனிடம் அவனுக்கு உண்மையிலே இந்த திருமணத்தில் விரும்பமா என்று கேட்டுப்பார்த்தார்...அதற்கு சம்மதம் என்று ஒரு  வார்த்தையிலேயே அவன் பதில் சொல்லிவிட அதற்கு மேல் அவரால்  அவரது மகனிடம் வேறு எதுவும் கேட்க முடியவில்லை...

அவர்களும் கோவிலுக்கு கிளம்பியிருந்தனர்...பட்டு வேஷ்டி சட்டையில் மணமகனாய் கிளம்பியிருந்தான் மதிவேந்தன்..

கோவிலிற்கு இரு குடும்பமும் சென்று திருமண சடங்குகள்  ஆரமிப்பதற்கும் உறவுகள் ஒவ்வொருவாராய் வருவதற்கும் சரியாக இருந்தது..

அய்யர் கூறிய மந்திரங்களை மதிவேந்தன் சொல்லிக் கொண்டிருக்க...மணமகள் வருவதற்குரிய நேரம் வர அவளை அழைத்தார் அய்யர்...

மனமகளுக்குரிய வெட்கத்தை சுமந்துக் கொண்டு தனது கனவுகள் நினைவாகப்போகும் மகிழ்ச்சியை தனது கண்களில் சுமந்துக் கொண்டு  வேந்தனின்  அருகில் அமர்ந்தாள் தேன்நிலா...

தனது அருகில் அமர்ந்திருக்கும் தனது மச்சானை பார்த்தவள்...அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் “மச்சான்..இங்கு நடப்பது நிஜமானு தெரிஞ்சுக்க நான் ஒண்ணு செய்யுறேன்..” என்று அவனிடம் கூறிவிட்டு என்ன ஏது என்றுக் கூடக் கூறாமல்  தனது மச்சானை கிள்ளி வைத்தாள் தேன்நிலா...(அடிப்பாவி ஆனாலும் உனக்கு தைய்ரியம் அதிகம் தான்..இதுதான் சும்மா கிடக்குற சிங்கத்த சொறிஞ்சு  விடுறதா)

அவள் தன்னை கிள்ளியதும் தனது வலியைப் பொறுத்துக்கொண்டு அவளை திரும்பி பார்த்தான் வேந்தன்...கண்களிலே கோபத்தைக் காட்டி தன்னை முறைப்பவனை ஒரு பொருட்டாக கூட நினைக்காமல் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தால் தேன்நிலா...

அவளுக்கு நடக்கும் எல்லாம் உண்மையென்று தெரியும்..இவ்வளவு அழகான நாளில் அதுவும் வாழ்க்கை முழுவதும் மறக்கக் கூட முடியாத நாளில்  தன்னை ஏறெடுத்தும் பார்க்காத தனது மச்சானை என்னச் செய்வது என்று தெரியாமல் யோசித்தவளுக்கு ஏதோ நாவலில் படித்த நிகழ்ச்சி நியாபகம் வர அவ்வாறு செய்தாள்...

அவளுக்கு தெரியும் அவளது மச்சான் கண்டிப்பாக அவளை முறைக்கவாது தன்னை திரும்பிப் பார்ப்பான் என்று... அவள் நினைத்ததுப் போல் அவனும் திரும்பிப் பார்த்துவிட்டான்...அவன் சம்மதம் என்றுக் கூறியப் பின்பு இப்பொழுதுதான் அவன அவளை நிமிர்ந்தே பார்க்கிறான்...

அவளுக்கு அவனது ஒருப் பார்வை தான் தேவைப்பட்டது...அது அவனின் கோபப் பார்வையென்றாலும் அவளுக்கு பரவாயில்லை...

அவனது அந்த ஒருபார்வையே திருப்தியாய் இருக்க தனது கவனத்தை அய்யர் கூறியவற்றை செய்வதில் திருப்பினாள் தேன்நிலா...

“மத்தளம் மேளம் முரசொலிக்க

   வரிசங்கம் நின்றாங்கே

ஒலி இசைக்க

கைத்தளம் நான் பற்ற

கனவு கண்டேன்....கனவு கண்டேன்..

கனவுகள் நனவாக உறவு தந்தான்...”

அனைத்து சடங்குகளும் முடிந்து தாலிக்கட்டும் தருணமும் அழகாய் வர தனது மனது முழுவதும் நிறைந்தவனின்  கைகளில் அவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவை உலகுக்கே பறைச்சாற்றும் வகையில் தாலியை தனது சங்குகழுத்தில் வாங்கிக்கொண்டாள் தேன்நிலா..

அவளது கழுத்தில் தாலியை கட்டும் பொழுது ஒரு நொடி கண்முடி திறந்த  வேந்தன்..அவளது கழுத்தில் தாலியை கட்டி தனது பாதியாய் அவளை ஆக்கிக்கொண்டான்...

அடுத்து மாலை மாற்றுவது,மெட்டி அணிவிப்பது என்று பல சம்பிரதாயங்கள் நடக்க அதை அனைத்துமே இனிதாய் நடந்து முடிந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.