(Reading time: 11 - 21 minutes)

“உன் கழுத்தில் மாலையிட

        உன்னிரண்டு தோளத் தொட

என்ன தவம் செஞ்சேன் நானே மாமா...”

தனலட்சுமி குடும்பம் மட்டும் திருமணத்திற்கு  வராமல் இருந்தனர்...என்னதான்  இருந்தாலும் தனது மகளை நிறுந்திப் பார்க்க நினைத்த இடத்தில் வேறு ஒரு பெண்ணை பார்க்க அந்த தாய்க்கு மனம் வரவில்லை...

அதனால் அவர்கள் குடும்பத்தில் இருந்து யாரும் வரவில்லை...

இவை எதுவும் நாக்கு மேல் பல்லைப் போட்டு பேசும்  மனிதர்களின் வாயிலிருந்து தப்பவில்லை...

இதை இருக்குடும்பத்து உறுப்பினர்களது காதிலும் படதான் செய்தது...ஊர் வம்பிற்கு அலையும் ஆட்களை  யாராலும் அடக்க முடியாது...

அனைத்து சடங்குகளும் முடிந்து மாப்\பிளையும் பெண்ணும் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல தயாரானார்கள்...

வேந்தனும்,தேன்நிலாவும் ஒரு காரில் அமர்ந்துக் கொள்ள அவர்களுடன் கயலும்,அசோக்கும்  அந்த காரில் வந்தனர்...

அசோக் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் வேந்தனை,தேன்நிலாவின் முகத்தில் மட்டுமே கல்யாணத்திற்கு உரிய அனைத்து பூரிப்பும் இருந்தது...வேந்தன் ஒரு இறுக்கமாகவே இருந்தான்...அதை அவன் நண்பனால் நன்கு புரிந்துக் கொள்ள முடியவில்லை...

ஆனால் வேந்தனின் நிலையை புரிந்துக்கொள்ளும் அளவு தேன்நிலா இல்லை... அதனால்  அவள் தனி உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்... தனது நண்பனிடம் இதைப் பற்றி அப்பறம் பேசவேண்டும் என்று நினைத்தான் அசோக்...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

வேந்தனின் வீடு வர வேந்தனையும்,தேன்நிலாவையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்தனர்...

ஆரத்தி எடுத்து வேந்தனையும்,தேன்நிலாவையும் உள்ளே அழைத்துச்சென்றனர்...

அந்த வீட்டில் அவள் சிறிய பெண்ணாக இருந்தப் பொழுது அன்னம் அவளை அழைத்து வந்திருக்கிறார் இந்த வீட்டிற்கு அதற்கு பின் அவள் இங்கு வந்ததில்லை...

இன்று தான் அவள்  அந்த வீட்டிற்கு வருகிறாள்... வீட்டின்  உள்ளே காலடி எடுத்து வைத்தப்பொழுது உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பை அவளால் நன்கு உணரமுடிந்தது...

அடுத்து நடக்க வேண்டிய சம்பராதயங்களை முடித்தனர் பெரியவர்கள்...

அவர்களை ஹாலில் பாயை விரித்து அமரவைத்து அவர்களுக்கு பாலும் பழமும் கொடுத்தனர்... எதையும் வேந்தன் மறுக்கவில்லை... முகம் சுளிக்கவில்லை..

தனது பிறந்த வீட்டில் தனது மகள் மருமகளாய் அமர்ந்திருப்பதைப் பார்த்த அன்னத்திற்கு மனம் நிறைந்துப்போனது...

ஆனால் அன்னத்தின் எண்ணங்களுக்கு மாறாய்...அவரது அன்னை யோசித்துக் கொண்டிருந்தார்...

தனது பேரனை இப்படி திருமணக்கோலத்தில் கண்டது  அவரது மனதை நிறைதிருந்தாலும்...தனது வீட்டின் மருமகளாய் தனது மகள் வயிற்று பேத்தி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ஒரு நிமிடம் எனினும் நினைக்க தான் செய்தார்...

அதன்பின் வந்த உறவினர்களை கவனிப்பது ஓய்வெடுப்பது என்று நேரம் செல்ல சூரியன் மறைந்து நிலவுமகனும் வலம்வர ஆரம்பித்தான்...

இரவு உணவை அனைவரும் முடித்துக்கொள்ள தனது மகளை அலங்கரித்தார் அன்னம்...தனது மகளை ஆசிர்வதித்து விட்டு தனது அண்ணி மல்லியிடமும்,தனது அண்ணன்,அன்னையிடமும் கூறிக் கொண்டு தனது வீடு நோக்கி அதாவது தேன்நிலாவின் வீட்டிற்கு சென்றார் அன்னம்...

அன்னம் சென்ற சிறிது நேரத்தில் தேன்நிலாவை அழைத்த  மல்லி அவளை தனது சொந்தகாரப் பெண்களிடம் கூறி வேந்தனின் அறையில் விட்டு வர சொன்னார்...

சொந்தக்காரப் பெண்கள் அவளை அவனது அறைக்கு வெளியில் விட்டுச் செல்ல அதுவரை அவளிடம் இருந்த பயம் அப்பொழுதுதான் போனது...

ஆம் அவளுக்கு வேந்தனை நேருக்கு நேர் சந்திப்பதில் அவளுக்கு எந்தப் பயமும் இல்லை... (போடி போ...உள்ள ஒரு சிங்கம் தூங்கிட்டு இருக்கு  உனக்கு அவனைப் பார்த்து பயம் இல்லை...ஆத்த மாரியாத்தா இந்த பொண்ணு ஓவர் கான்பிடன்ஸ்ல இருக்கு நீதான் காப்பாத்தனும்...)இதுவரை அங்கு இருந்தவர்களே அவளுக்கு பயத்தை விளைவித்து இருந்தனர்...

ஆங்கு இருந்தவர்கள் அவளுக்கு சொந்தமாக இருக்கலாம் ஆனால் அவர்கள்  அனைவரும் அவளுக்கு அந்நியமே...

அவளுக்கு அத்தை,மாமா,பாட்டி உறவுதான்...ஆனால் அவர்கள் அவளிடம் பேசியதுமில்லை...ஏன் முகஸ்துதிக்குகூட அவர்கள் அவளை   நேருக்கு நேர் பார்க்கும்பொழுது சிரித்ததில்லை...

அதனால் அவளைப் பொருத்தவரை பேசிய இல்லாத  அவர்களை விட வேந்தனிடம் அவளுக்கு பயம் குறைவாக தான் இருந்தது...(தெரியாத பேய்க்கு... தெரிஞ்ச பேய் பரவ இல்லைனு நினைக்குது போல பயபுள்ள...)

தனது மனதில்  அதுவரை இருந்த பயத்தை  ஒதுக்கி வைத்தவள் தன்னவனான  தனது ,மன்னவனின் அறைக்குள் நுழைந்தால் தேன்நிலா...

Kathal kathalitha kathaliyai kathalikkum

காதலி காதலிக்க படுவாளா...

Episode # 08

Episode # 10

Go to Kathal kathalitha kathaliyai kathalikkum story main page

{kunena_discuss:1175}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.