(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 08 - அனிதா சங்கர்

Kathal kathalitha kathaliyai kathalikkum

“ஹாய் பிரண்ட்ஸ் நான் ஒரு குட் நியூஸ் உடன் உங்களுக்கு எபி கொண்டு வந்திருக்கேன்...என்னோட முதல் கதை அவளுக்கென்று ஒரு மனம் அறிவாலயம் பதிப்பகத்தின் மூலமா புத்தகமா வெளிவந்திருக்கு...  Thank you frds…இது எல்லாம் உங்களோட சப்போர்ட்டால தான் நடந்தது...thank you chillzee team…உங்களோட ஆதரவுக்கும்... ”

ப்புபத்திரம் மாத்திக்கொள்வதற்கான நேரம் நெருங்க மாப்பிள்ளையின் பெற்றோர்களும்...,பெண்ணின் பெற்றோர்களும் ஊரின் முன்னே மாற்றிக்கொள்ள தயாரானார்கள்,அப்பொழுதுதான் தேன்நிலா யாரும் எதிர்பார்க்காத அந்த காரியத்தை செய்தால்...

அன்னத்தின் அருகே இருந்தவள் கண்ணிமைக்கும் நொடியில் வேந்தனின் அருகில் சென்று அவனை தன்னுடன் கட்டி அணைத்திருந்தாள்...

அங்கிருந்த அனைவரும்  ஒருநிமிடம் ஸ்தம்பித்துபோயினர்...என்ன நடக்குதுன்னு தெரியாமல் அங்கிருந்த பெரியவர்கள் அனைவரும் ஒருநொடி ஆடி போயினர்...

வேந்தனை கட்டிபிடித்துக் கொண்ட தேன்நிலாவின் உதடுகள் “இவரு என்னோட மதி மச்சான்...நான் யாருக்காகவும் இவரை விட்டு தர மாட்டேன்..” என்று அவளது உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தது...

அன்னம் என்ன செய்வது என்று தெரியாமல் கண்கள் இருள ஒரு நொடி தடுமாறியவர் அடுத்து தனது பெண்ணின்  அருகில் நின்றார்...

“தேனு..என்ன...பண்ற... எல்லாரும் இங்க தான் பாக்குறாங்க... வேந்தனை விடு...” என்று கூறி அன்னம் தனது மகளை வேந்தனிடம் இருந்து கஷ்டப்பட்டு பிரித்தெடுத்து அந்த இட்டதை விட்டு இழுத்து சென்றார்...

அதன் பின் அங்கு எவ்வாறு நிச்சயம் நடக்கும் அனைத்தும் நின்றுப் போனது...

தேன்நிலாவை அழைத்துக் கொண்டு அன்னம் சென்ற இடம்  தேன்நிலாவின் வீடு...

அவர்கள் அங்கு செல்வதற்கு முன்பே வேந்தனின் வீட்டில் நடந்தவைகள் காட்டு தீ போல் பரவி கதிரேசனின் வீட்டை அடைந்திருந்தது...

தேன்நிலா வீட்டை அடையும்பொழுது அவளது வீடே அமைதிக் கொண்டிருந்தது...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவளை உள்ளே அழைத்துக் கொண்டு சென்ற அடுத்த நிமிடம் அவளை தனது கைகள் ஓயும் வரை அடித்து தீர்திர்ருந்தார் தேவி...

அவரை தடுக்க யாரும் முன் வரவில்லை...அனைவரிடமும் மௌனம் மட்டுமே பதிலாக இருந்தது...

“என்ன காரியம் பண்ணிட்டு வந்துருக்கடீ...உன்னோட வாழ்க்கையோட  சேர்த்து அந்த பொண்ணோட வாழ்கையும் கேள்விக்குறி ஆக்கிட்டு வந்துருக்க....உன்ன பார்த்தாலே கோவமா வருதுடீ...” என்று தேவி தேன்நிலாவை திட்டிக்கொண்டிருக்க

தன் வளர்ப்பில் எங்கு தவறு செய்தோம்...எப்படி தனது மகளின் மனதை கணிக்க தவறினோம் என்று அன்னத்தின் மனதில் பெரிய அடி விழுந்தது...

அனைவரும் அழுது ஓய்ந்துக் களைத்த பொழுது தேன்நிலா தனது  தந்தையை நெருங்கினாள்...அதுவரை கதிரேசன் அமைதியாக தான் இருந்தார்...அவர் எதுவோ யோசனையில் இருப்பது போல் இருந்தது...

அவரது அருகில் சென்றவள் அவளது கையைப் பிடித்து,

”அப்பா நான் அப்படி செஞ்சிருக்க கூடாது தான்பா...முன்னாடியே எனக்கு தெரிஞ்சிருந்த உங்க கிட்ட தான் சொல்லி இருப்பேன்பா...ஆனா மச்சானுக்கு  இவ்வளவு சீக்கிரம் அதுவும் நான் ஊர்ல இல்லாதப்ப நடக்கும்னு நான் நினைச்சி பார்க்கலப்பா... இல்லைனா இப்படி நடந்திருக்க மாட்டேன்...” என்று கூறி மடி சாய்ந்தாள் தேன்நிலா...

அதுவரை அமைதியாக  இருந்த கதிரேசன்,”தேனு...அப்பா சொல்லுறதா நல்லா கேட்டுக்கோ...உனக்கு வேந்தன் வேண்டாம்...அப்பா சொல்லுறத நல்லா கேளு அப்பா இந்த பிரச்சனையப் பாத்துக்குறேன்...”என்று கதிரேசன் சொல்ல அங்கு இருந்தவர்களது பார்வை அவரது மேலேயே நிலைத்து...

“அப்பா அது என்னால முடியாதுப்பா  அப்படி அது என்னால முடியும்னா...நான் இன்னைக்கி அமைதியா இருந்திருப்பேனே...என்னோட  மச்சான் இன்னொரு பொண்ண தனக்குன்னு சொந்தம்னு இந்த ஊருக்கு தெரியர மாதிரி அறிவிக்கிறது தான் அங்க நடக்குற விஷேசத்தோட அர்த்தம்...அதை எப்படிப்பா நான் பார்த்துகிட்டு சும்மா இருப்பேன்..என்ன பொறுத்தவரைக்கும் வார்த்தையல கூட என்னோட மச்சான் இன்னொரு பொண்ண தனக்கு சொந்தம்னு சொல்லகூடாது...அதான் அப்படி செஞ்சேன்...என்னோட வாழ்ந்தா மட்டும் தான் மச்சான் சந்தோசமா இருப்பார்...”என்று அவள் கூறி முடிக்க...

கதிரேசனின் மனதில் பாரம் ஏறியது...தனது மகள்  அவளுடைய வாழ்கையை தானே கெடுத்துக் கொள்கிறால் என்று நினைக்கும் பொழுது அவரால் தன் மனதின்  பாரத்தை இன்னும் ஏற்ற முடிந்ததே தவிர... அதனை குறைக்க தெரியவில்லை...

தான் என்ன பாவம் செய்தோம் தனது மகளின் வாழ்க்கை தன் கண் முன்னே அழிய போகிறதே என்று நினைத்தவர் எவ்வாறாயினும் தனது மகளுக்கும்,வேந்தனுக்கும் கல்யாணம் நடக்கவிடகூடாது என்று முடிவெடுத்தார்...

அன்னத்தின் நிலையோ தனது மகள் இவ்வளவு உறுதியாக இருக்கிறாளே தனது அண்ணன் இதற்கு ஒத்துக்கொள்வாரா என்ற கவலை ஆட்டிப்படைத்தது...

மனிதன் நடப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்கையில் சுவாரியசம் ஏது...

கௌதமிற்கு இவர்கள் சொல்லாமல் இருக்க,தனது நண்பன் மூலம் அனைத்தையும் அறிந்தவன் அடுத்த நிமிடம் தனது ஊருக்கு கிளம்பியிருந்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.