(Reading time: 12 - 23 minutes)

இதைதான் அன்று அவனும் சொன்னான் இப்படி இந்த ஊர் பேசும் என்று...ஆனால் அன்று அவ்வாறு பேச விடமாட்டேன் என்று கூறிவிட்டு இன்று அத்தனை பேர் முன்னாடி தன் அத்தையின் வளர்ப்பை அவள் கேள்விக்குள்ளாக்கிவிட்டாள் என்ற கோபம் அவளை எரித்துவிடும் வெறியை அவனுக்கு தந்தது...ஆனால் அவனால் இப்போது எதையும் செய்யமுடியாத நிலையில் இருந்தான் மதிவேந்தன்...

வேந்தனின் மனதில் இப்படி சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்க,அங்கு தேன்நிலாவிற்கோ பெரியவர்கள் தன் வளர்ப்பை பத்தி பேசியதும் அன்று அவளது மச்சான் இதைப் பற்றி தான் சொல்லியிருக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது...

தன் அன்னையை அனைவரும் இப்படி பேசுருவகளோ என்று நினைத்தவள் தனது மச்சானை பார்க்க அவனது பார்வையின் வெப்பத்தில் அவள் தன் அன்னையின் கைகளை இறுக பற்றினாள்...

இவர்களின் மனநிலை இப்படி இருக்க தான் விட்ட இடத்திலிருந்து பேச ஆரம்பித்தார் அந்த பெரியவர்  “நாங்க என்ன முடிவு பண்ணி இருக்கோம்னா... தேன்நிலாக்கும்,வேந்தனுக்கும் நாம கல்யாணம் பண்ணி வைக்கலாம்...” அவர் கூறியதைக் கேட்ட பின்பு தான்  தேன்நிலாவிற்கு நிம்மதி வந்தது...

அவள் உள்ளம் மட்டும் தான் அவர் சொன்னதில் நிம்மதி அடைந்தது...தன் மச்சான் தனக்கு மட்டும் தான் என்ற எண்ணமே அதுவரை அவளது மனதில் இருந்த மன அழுத்தத்தை குறைத்தது...

ஆனால்,மற்ற அனைவரது மனமும் ஒவ்வொரு விதத்தில் வருத்தம் கொண்டிருந்தது...

அவரது பேச்சை கேட்டவுடன்,ஏதையோ பேச எழுந்த தனலட்சுமியை பார்த்தவர்,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அம்மா.. தனலட்சுமி நான் சொல்லுறதா முழுசா கேளுமா...அதுக்கு அப்புறம் உனக்கு எதாவது இந்த முடிவுல திருப்தி இல்லைனா சொல்லு... இது மூணு  பேரோட வாழ்க்கைமா...யோசிக்காமா  சொல்லமுடியாது...நம்பளோட முடிவமட்டும் முன் வைக்காம நம்ப குழந்தைங்களோட வாழ்கையையும் நாம யோசிச்சு பார்க்கணும்... நாளைக்கு  வாழ போறது அவங்க தான்...

தேன்நிலா பண்ணது யாராலையும் மறக்க முடியாது... என்னதான் இவ பண்ணதுக்கு அப்பறம் எதாவது நல்லதோ,கெட்டதோ நடந்து ஊர் வாயைமூடினாலும் என்று இருந்தாலும் அவளை பற்றி ஒரு பேச்சு வரும்பொழுது முதலில் எல்லாருக்கும் இதுதான் நியாபகம் வரும்... இவ்வளவு நடந்த பிறகும் நாளைக்கு அவளுக்கு ஒரு கல்யாணம் நடந்தாளும் அது எந்த அளவு   அவளுக்கு ஒரு நல்ல  வாழ்க்கையா அமையும்னு சொல்ல முடியாது அதுபோலதான் வேல்விழிக்கும்,வேந்தனுக்கும்...

நாம நம்ப பசங்க வாழ்க்கையா கேள்வி குறியாக்க வேண்டாம்..எல்லாருக்கும் இதுக்கு சம்மதம் தானே... தனம் இப்ப சொல்லு உனக்குஎதாவது இதுல பிரச்சனையா ” என்று அந்த பெரியவர் கேட்க தனம் அமைதியாக இருந்தார்...

அவரது பெரியப்பா கூறியது அவருக்கு சரியெனவெப்பட்டது...அதனால் அவர்  எதுவும் கூறவில்லை... அவர் அமைதியாக இருக்கவும் அவர் அடுத்து வேல்விழியிடம் தான் சம்மதம் கேட்டார்...

அவளும் சம்மதிக்க...

அடுத்து அவர் கேட்டது  சந்தானபாண்டியனை தான்,”என்ன பாண்டி உனக்கு சம்மதம் தானப்பா..”

“எனக்கு சம்மதம் தான் பெரியப்பா...தனமும்,விழியும் சம்மதம் சொன்னப்பிறகு எங்க எல்லாருக்கும் சம்மதம் தான்..”என்றுக் கூறினார் பாண்டியன்.

 அடுத்து அவர் சம்மதம் கேட்கவென்று வேந்தனை பார்த்தார்.கோபத்தில் கண்கள் சிவக்க நிலாவை முறைத்துக் கொண்டிருந்த வேந்தன் தான் அவர் கண்களில்  பட்டான்.அவனை பார்த்தவர் ஒரு நொடி அவனது முகத்தில் இருந்த ஆத்திரத்தில் தயங்கினாலும் அவரது கடமையை அவர் செய்துதானே ஆகவேண்டும்..

“வேந்தா உனக்கு இதுல சம்மதம் தானே...” என்று வேந்தனிடம் கேட்க

அவனை கேட்க ஆரம்பித்ததிலிருந்தே இங்கே பெண்ணவளின் இதயமோ வேகமாக துடிக்க ஆரம்பித்தது...அவன் எங்கே தன்னை வேண்டாம் என்று கூறிவிடுவானோ என்று அவன் பதில் கூற எடுத்துக் கொண்ட ஒவ்வொரு நொடியையும் அவள் பதட்டத்துடன் கடந்துக் கொண்டிருந்தாள்...அந்த பெரியவர் கேட்டதும் சில நொடிகளை எடுத்துக்கொண்டவன் தனது கண்களை ஒரு நொடி மூடிதிறந்து தனது சம்மத்ததை தெரிவித்தான்...

அந்த ஒரு வார்த்தையில் தேன்நிலா சிறகில்லா தேவதையை தன்னை உணர்ந்தாள்...தனது மதிமச்சான் தன்னை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டதே அவளுக்கு பல போட்டிகளை வென்றது போல மகிழிச்சி அடைய செய்தது...

அவளுக்கு தெரியவில்லை அந்த நொடி அவள் வாழ்க்கை என்னும்  பந்தயத்தில் தோற்றுவிட்டால் என்று...

தேன்நிலா ஏற்கனவே செய்த செயல்கள் மூலம் அவளிடம் சம்மதம் கேட்க அவசியம் இல்லாததால்,வேந்தனது சம்மதமும் கிடைக்க வேந்தன்- மதியின் திருமணத்தை வரும்  முகூர்த்த  நாளிலே வைத்துகொள்ளலாம் என்று அனைவரும் முடிவு செய்து கூற,சிறகில்லாமல் வானத்தில் பறந்தால் தேன்நிலா...

அப்பொழுது அவள் எதிர்பாராத ஒருத்தரிடமிருந்து ஏதிர்ப்பு கிளம்பியது...அப்படி ஒரு எதிர்ப்பை அதுவும் அவர்களிடமிருந்து அவள் எதிர்ப்பார்க்கவில்லை...

Kathal kathalitha kathaliyai kathalikkum

காதலி காதலிக்க படுவாளா...

Episode # 07

Episode # 09

Go to Kathal kathalitha kathaliyai kathalikkum story main page

{kunena_discuss:1175}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.