(Reading time: 12 - 23 minutes)

இங்கு இப்படியென்றால் வேந்தனின் வீட்டிலோ அனைவரும் தேன் நிலாவை வறுத்துக் கொண்டிருந்தனர்...

மரகதம் முதல் மல்லி வரை அனைவரது திட்டுக்களையும் வாங்கிக் கொண்டிருந்தால் தேன்நிலா...

சந்தானப்பாண்டியன் அடுத்து என்ன செய்வது இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது என்று யோசனையில் ஆழ்ந்திருந்தார்...

வேல்விழியின் அன்னை தனம் தான்  தனது வாய் ஓயாது தேன் நிலாவுடன் சேர்த்து அவளது பெற்றோர்களையும் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தார்...

இன்று விழாவின் நாயகனாக இருந்தவன்...இன்று ஊருக்கே நாயகனாக தேன் நிலாவின் செயலால்  மாறியிருந்த மதி வேந்தன் தனது நண்பன் அசோக் உடன் தங்களது தோட்டத்து வீட்டில் இருந்தான்...

அவனுக்கு அந்த தனிமை தேவைப்பட்டது... கண்கள் சிவந்த கோபத்துடன்  நாற்காலியில் அமர்ந்திருந்தான் வேந்தன்...

அவனுக்கு நிலாவின் மீது அத்தனை கோபம் வந்தது...அவள் இன்று செய்த செயல் அவனால் ஜீரணிக்க முடியவில்லை... ஊரே குடியிருக்க அவனை அவள் இப்படி அணைப்பால் என்று அவன் நினைத்துப் பார்க்கவில்லை...ஏன் அவளையே அவன் அங்கு எதிர்ப்பார்க்கவில்லை என்கின்றபொழுது அவளது செயலும் அவனுக்கு அதிர்ச்சியே...

நாளை அவர்கள் குடும்பத்து பெரியவர்கள் இதற்கு ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று மூன்று குடும்பத்திடமும் கூறியிருந்தனர்...

நாளை பெரியவர்களின் முடிவு எதுவாக இருந்தாலும்மதிவேந்தனின் தீர்ப்பு தேன்நிலாவை அவனால் ஏற்க முடியாது..இதுதான் அவனது முடிவு...இதே முடிவை இன்னொருவனும் எடுத்து இருந்தான்...

தனது முடிவுடன் நாற்காலியில் சாய்ந்து தனது கண்களை மூடிக்கொண்டான்...

அன்று இரவே வீடுவந்து சேர்ந்திருந்தான் கௌதம்... அவனை வரவேற்றது மூலைக்கு மூலை அழுதுக்கொண்டிருந்த அவனது அன்னைகள் தான்...

தனது கண்களை திருப்பியவனின்  கண்களில் பட்டாள் அவனது தங்கை...அழுது அழுது ஓய்ந்திருந்தால் அவள்...தனது பைகளை போட்டுவிட்டு அவளது அருகில் சென்றான்...தன்  அண்ணனை கண்டவுடன் அவனை அணைத்துக் கொண்டு அழ  ஆரம்பித்தாள்...கௌதம் அவளை விலகவில்லை...அவளது தலையை தடவிக் கொடுத்தான்...

அதற்காக அவள் தங்கை செய்தது  சரி என்று அவன் நினைக்கவில்லை...அவளை ஏற்கனவே அவளது குடும்பத்தினர் கண்டிப்பாக புண்படுத்தியிருப்பார்கள்,தானும் அவளை புண்படுத்தக் கூடாது என்று நினைத்தவன் அவள் தங்கையிடம் எதுவும் கேட்கவில்லை...அழுது அழுது உறங்கியிருந்த தனது தங்கையை அவளது அறையில் படுக்க  வைத்தான் கௌதம்.

தனது தங்கை அறையினை மூடிவிட்டு  வந்தவன்  தனது தந்தையிடம் பேச ஆரம்பித்தான்.தனது மகனை  நினைத்து அவருக்கு கொஞ்சம் நிம்மதியாக தான் இருந்தது...அனைவரையும் போல் அவளை வந்தவுடன் அடிக்காமல்,தனது உடன்பிறப்பின் மனநிலையை அவன் உணர்ந்திருக்கிறான் என்று...

தனது தந்தையிடம் பேசியது மூலம் நாளை தன் தங்கையின் பிரச்சனைக்கு பெரியவர்கள் முடிவு எடுக்க போகிறார்கள் என்று அவனுக்கு புரிந்தது... தனது தந்தையையும்,அன்னைகளையும் தேற்றி தூங்க சொன்னான் கௌதம்...

நாளை யார் என்ன முடிவு எடுத்தாலும் தனது தங்கையை வேந்தனிற்கு மனைவியாக்க அவன் விரும்பவில்லை...

அவனது முடிவை அவனது குடும்பத்தினர் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள்... அவனது குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்கள்,ஆனால் அவனது தங்கை...

அடுத்த நாள் காலை இளஞ்சூரியன்  யாருடைய  கட்டளைக்கும் அடிபணியாமல் தனது கரங்களால் இந்த உலகில் தனது ஒளியை வீசி வெளிச்சத்தை பரப்பினான்...

அனைவரது மனநிலையும் ஒவ்வொரு எண்ணத்தை கொண்டதாக இருந்தது... தேன்நிலாவிடம் கௌதம் மட்டுமே பேசினான்...தேவி அவளிடம் முகத்தை திருப்பிக் கொள்ள...அவளது தந்தை ஏதோ ஒரு யோசனையில் இருந்தார்... அன்னம் காலையிலே அவரது வீட்டிற்கு கிளம்பி சென்றிருந்தார்... அவரும் தேன்நிலாவிடம் பேசவில்லை...

காலை பதினொரு மணியளவில் அவர்களது குடும்பத்தின் பெரியவர்கள் அனைவரும் மூன்று குடும்பத்தையும் அழைத்து வைத்து பேசினர்...

அனைவரும் மூன்று குடும்பத்திடமும் பேசி முடித்துவிட்டு... அந்த குடும்பத்தில் வயது மூத்தவர் ஒருவர் பேச ஆரம்பித்தார்...

“நம்ப குடும்பத்துகுள்ள இது மாதிரி இதுவரைக்கும் நடந்ததே இல்ல...ஆனா நம்பளோட பசங்களோட விருபத்த நம்பளால புரிஞ்சுக்க முடியலங்குறத நினைகுறப்ப எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு...என்னதா தேவிக்கு  பொறந்த பொண்ண இருந்தாலும்,தேன்நிலாவை வளர்த்தது எல்லாம் அன்னம் தானா...அப்படியாவது பாண்டி யோசிச்சிருக்கலாம்...

நாங்க மூன்று  பேரோட வாழ்கையையும் மனசுல வச்சிதான் இத சொல்லுறோம்...தேன்நிலா எல்லார் முன்னாடியும் நடந்துகிட்டது நம்பளுக்கு தெரியும்...நம்பளோட வளர்ப்பு இப்படி ஊரு முன்னாடி நடந்துகிட்டது தான் எங்களுக்கு கஷ்டமா இருக்கு...” என்று அந்த பெரியவர் பேசிமுடிக்கும் பொழுது வேந்தனின் பார்வை நெருப்பாக அங்கு ஓரமாய் அன்னம் கூட நின்றிருந்த தேன்நிலாவின் மீது பதிந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.