Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 03 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 03 - சசிரேகா

en vazhve unnodu thaan

யாமினியும் பஸ் மூலம் கொடைக்கானல் விட்டு இறங்கி மதுரை வந்தவள் அங்கிருந்து பிளைட் மூலம் சென்னைக்கு திரும்பி தன் வீட்டிற்குச் சென்றாள்.

பயத்துடனும் குழப்பத்துடனும் வீட்டிற்குள் சென்றவள் ஹாலில் அவளுடைய தந்தை சோமசுந்தரம் இருக்கவே அவரிடம்

”அப்பா” என மெதுவாக அழைத்தாள்.

அவளைப்பார்த்த அவரும் சிரித்துக்கொண்டே

”என்னம்மா டூர் நல்லபடியா முடிஞ்சிடுச்சா” என கேட்க அவளும் ஆம் என மெதுவாக தலையாட்டினாள்.

”சரி சரி போம்மா போய் ரெஸ்ட் எடு அம்மா வீட்ல இல்லை அவளோட அம்மா வீட்டுக்கு போயிருக்கா”

”அப்பா நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்” என அவள் தயங்கி தயங்கி சொல்ல

”ம் தெரியும்மா உன் ப்ரெண்ட் காவேரி சொன்னா உன்கூட வேலை செய்றவனே உன்னை தொல்லை செஞ்சான்னு அதான் நானும் உன் கம்பெனிக்கு ஃபோன் செஞ்சி இனிமே நீ வரமாட்டேன்னு சொல்லிட்டேன். வேணாம்மா நீ ஏன் இப்படி வேலைக்கு போய் கஷ்டப்படனும் நம்ம கம்பெனியிருக்கு அங்க போ வேலைக்கு”

”இல்லப்பா நம்ம கம்பெனியில பெரிசா எந்த பிரச்சனையும் வரலை பொழுதுக்கும் போர் அடிக்குது அதான் நான் அப்படியே வேற இடத்தில வேலை செஞ்சா புதுசு புதுசா அனுபவம் கிடைக்கும் போர் அடிக்காதுன்னு நினைச்சேன்”

”சரி விடும்மா இனிமே நீ அங்க வேலைக்கு போக வேணாம்”

”அப்பா”

”என்னம்மா வேற எங்கயாவது வேலைக்கு போகனும்னு ஆசைப்படறியா”

“இல்லைப்பா”

”அப்ப கல்யாணம் செஞ்சிக்கிறியா”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”அப்பா அதைப்பத்திதான் உங்க கிட்ட பேசனும்”

”சரி ஏன் இப்படி நின்னுக்கிட்டு இருக்க உட்காரு நான் உன் அப்பாதானே என்கிட்ட ஃப்ரீயா பேசு உன் மனசுல கல்யாணத்தை பத்தி என்னென்ன எதிர்பார்ப்புகள் வெச்சிருக்கன்னு சொல்லு நீ ஆசைப்படற மாதிரியே ஒரு பையனை நான் தேடிப்பிடிக்கிறேன் சீக்கிரமா உனக்கு கல்யாணம் செஞ்சி வைக்கிறேன்”

”அப்பா அது வந்து எப்படி சொல்றதுன்னு தான் தெரியலை நடந்த விசயத்தை சொன்னா நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு எனக்குப் புரியலை”

”என்ன நடந்திச்சி என்ன விசயம் சொல்லும்மா தயங்காம சொல்லு இப்ப சொல்லாம பின்னாடி ஒரு நாள் சொல்லலாம்னு நினைச்சி விட்டேன்னா அதுவே இன்னொரு பெரிய பிரச்சனையில வந்து முடியும் அதனால எதுவாயிருந்தாலும் இப்பவே தயங்காம சொல்லிடு” என அவர் கண்டிப்பாகவும் அதே நேரம் கோபமாகவும் கேட்கவும் அவர் அவளிடம் ஆதியை பார்த்தது முதல் கடைசி வரை எதையும் விடாமல் ஒரு விசயத்தையும் மறக்காமல் சொன்னாள்.

முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தவர் அவளிடம்

”எங்க உன் மானம் போயிடுமோன்னு அந்த ஆதி உனக்கு தாலி கட்டி காப்பாத்தியிருக்கான் சரி அப்புறம் அவனே அதை கழட்டவும் நினைச்சிருக்கான் ஏன்”

”ஏன்னா அவனை மாதிரி நான் எங்க அந்த வீட்ல வேலைக்காரியா ஆயிடுவேனோன்னு நினைச்சிருக்கலாம் இல்லை யாருக்கும் தெரியாம கட்டின தாலிதானே அதுக்கு மதிப்பு இல்லைன்னு நினைச்சிருக்கலாம் இல்லை என்னை பிடிக்காம கூட இருக்கலாம் அவன் பேசாம இருக்க இருக்க எனக்கு இப்படிதான் தோணுதுப்பா”

“ம் ஆதி செஞ்சது சரிதான் உன் மானத்துக்காக கட்டின தாலியை உன் எதிர்காலத்தை கவனத்தில வெச்சி கழட்ட நினைச்சான் ஆனா நீ அதை தடுத்திட்ட ஏன் என்ன காரணம்”

”அம்மா சொல்வாங்கப்பா தாலி புனிதமானதுன்னு அதான் அதை நான் கழட்ட நினைக்கலை”

”ஒருவேளை அவன் தாலி கட்டாம போயிருந்தா என்னாயிருக்கும்”

”போலீஸ் கேஸ் ஆயிருக்கும் என்னை தேடி நீங்க அங்க வந்திருக்க வேண்டிய நிலைமை வந்திருக்கும்”

”நீ போலீஸ்கிட்ட மாட்டினப்ப எனக்கு ஃபோன் பண்ணியிருந்தா கூட நான் உன்னை காப்பாத்தியிருப்பேனே”

”அந்நேரம் எனக்கு எதுவுமே தோணலைப்பா ஒரே டென்ஷன்”

”சரி விடு ஆனது ஆச்சி ஆதி தெளிவாயிருக்கான் அவன் செஞ்சத பார்த்தா எனக்கு தப்பா தெரியலை நீ சொல்றதும் சரியாதான் இருக்கு ஆனா உனக்கு தாலி கட்டினதுக்கு சாட்சி அந்த போலீஸ்காரங்கதான் அவங்ககிட்ட பணத்தை கொடுத்து வாயை மூட வைச்சிடலாம். இப்ப உன் முடிவுதான்மா ஒண்ணு இந்த தாலியை கழட்டிட்டு நான் பார்க்கற மாப்பிள்ளையை நீ கல்யாணம் செஞ்சிக்கனும்” என அவர் சொல்லி முடிப்பதற்குள் அவசரமாக யாமினியோ

”அது முடியாதுப்பா”

”அப்ப நீ ஆதிகிட்டதான் போகனும்”

”அங்கயா அப்பா நான் போனா என்னையும் அவங்க வீட்ல அடிமையாக்கிடுவாங்களே” என கவலையாக சொல்ல

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# WORST STORYMONIKA 2019-03-26 12:10
U have to improve ur writing, no continuity in the story , the slangs are very bad, is any dady talk about first night with his daughter,, this s the worst writing i have seen.... so sorry..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 03 - சசிரேகாmahinagaraj 2018-11-19 14:30
செமையா இருக்கு மேம்.... :clap: :clap:
புருசனும்.பொண்டாட்டியும் நல்லா பேசிகராங்க... :lol: :D
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 03 - சசிரேகாVAK 2018-11-19 14:26
nice ebi sasi mam, All the best Yamini for saving ur future life :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 03 - சசிரேகாAdharvJo 2018-11-19 12:37
Hahahaha 😁 good one thothutta avnga veedulaa slave ah irukamal vandhu appa sollura payana katipangalam :grin: cool and interesting update sasi ma'am :clap: :clap: mm mhum sollalamaa :D that was cute sasi ma'am :lol: uncle Ena over aga sirikiringa konjam kuda bayam illamal ;-) idea ellam Nala than kodukuringa but yam's eppadi situation face panuvangan parkalam...adhu Ena sondhama company irukuravnga veliya work pana ishta paduranga and vise versa :Q: anyway vidhi Ena plan panudhun parkalam..thank you and keep rocking (y)
Btw uncle ungalukku Ena problem aadhi thanoda problem-a solve pana mudiyala unga problem solve panuvaru :Q:
Reply | Reply with quote | Quote
# loveSHIRUTHADEWI SETHAREN 2018-11-19 08:56
superb..love the story moving...wonderful...i didn't miss your other stories also...awesome :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 03 - சசிரேகாராணி 2018-11-19 08:53
யாமினிதான் அவள் கணவனை காப்பாற்ற வேண்டும் இப்போது வெளியாள் யாமினிதான் அவளால் ஆதியின் வீட்டில் உள்ள திருடனை பிடிக்க முடியும் ஆதியை காப்பாற்றும் யாமினிக்கு ஆல்தபெஸ்ட்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 03 - சசிரேகாமனஸ்ஸாக்ஷிந்த் 2018-11-19 08:51
யாமினியும் ஆதியும் ஒண்ணு சேர போறாங்க ஆதியோட வீட்ல என்ன பிரச்சனை வருமோ ஆதியாலயே தன்னை நிரபராதின்னு சொல்ல முடியலை இதுல யாமினி எப்படி ஆதியை காப்பாத்துவா பாவம் யாமினி ஒண்ணு ஆதியை காப்பாத்தனும் இல்லை அந்த வீட்ல அடிமையாகனும் பார்க்கலாம்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 03 - சசிரேகாvijayalakshmi 2018-11-19 08:45
ok good yaminiku green signal koduthachu ini aadhikitta yamini pogar pora all the best yamini aadhiya save pannidunga
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 03 - சசிரேகாsaaru 2018-11-19 07:05
:Q: :clap: :grin:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top