Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காதல் இளவரசி – 17 - லதா சரவணன் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - காதல் இளவரசி – 17 - லதா சரவணன்

kadhal ilavarasi

காணாமல் போன விமானத்தை தேடும் பணி தீவிரமாக முடக்கிவிடப் பட்டுள்ளது. சுமார் 7000அடி வரை கடலுக்குள் சென்று விமானத்தையும் அதில் பயணித்தவர்களையும் தேடுவதற்கு அதிகாலையில் நவீன வசதிகளுடன் கூடிய நீர்மூழ்கிக் கப்பல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது திரையில் காணாமல் போன விமானமும், அதை கண்டுபிடித்த தரப்போகும் படையின் முதன்மையான கேப்டன் அலெக்ஸ் தலைமையிலான குழு ஒன்று கிளம்புகிறது.

திரையில் அலெக்ஸ் குழுவினரின் புகைப்படமும் புறப்பட ஆயத்தமும் காட்டப்பட்டு கொண்டிருந்தது. 

எப்படிக் கண்டு பிடிச்சிடுவாங்களா ?

சத்யா பொரித்த சிக்கனை எடுத்து வாயில் வைத்தபடியே தன் சகாக்களைப் பார்த்து கேட்டான்.

ரொம்ப கஷ்டம் இத்தனை நாள் கடலில் விழுந்த எதைக் கண்டுபிடிச்சிருக்காங்க.... டைட்டானிக்குன்னு ஒரு கப்பல் மூழ்கியதே ஒரு சினிமா படம் வந்தபிறகுதானே தெரிந்தது. 

ஹா...ஹா...அதுவும் சரிதான் சரி யுரேனியத்தின் அளவு கொஞ்சம் கொஞ்சமா கூடிக்கிட்டே போகுது. முன்னாடி பிராஜெக்ட் மாதிரி இதுவும் எந்த பிரச்சனையும் இல்லாம போறதுக்கு உன்னோட பிரண்ட் பரத் தான் காரணம். இவனை மாதிரி ஒரு பிரண்ட் கிடைக்க நீ கொடுத்து வைச்சிருக்கணும் சத்யா

ம்... பரத் ஒரு புத்திசாலி அவனுக்கு வாழ்க்கையில் விரக்தி, சின்ன வயசிலே இருந்தே அவன் இப்படித்தான். யாராவது மனசு வருத்தத்தோட பேசுனா அவனாலத் தாங்கிக்க முடியாது. அந்த பலவீனம் தான் எனக்கு ரொம்பவே ஹெல்ப்புல்லா இருந்தது. இளமையில் வறுமைங்கிறது எத்தனை கஷ்டம் தெரியுமா ?! நான் அணுஅணுவா அனுபவிச்சவன். பரத்தோட நட்பு எனக்கு பல வகையில் உபயோகமா இருந்தது. கொஞ்சகொஞ்சமா அவனோட நட்பு வட்டத்திற்குள் நுழைந்து அவன் நம்பிக்கைக்கு பாத்திரமாகி நெருங்கிட்டேன், வெறுமையா இருக்கிற மனசுக்கு கொஞ்சம் இரக்கமும், பாசமான நாலு வார்த்தைகளும் போதும்டா, அதைத்தான் நான் பரத்துக்கு செய்தேன் இப்போ என் அளவுக்கு அவனையே கூட நம்ப மாட்டான். அதுவும் நமக்கு ஒருவகையில் நல்லதுதானே. 

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எப்படியோ நம்ம காரியம் கெடாம போகுதுல்ல, இதேபோல அடுத்து இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் ஒரு சுரங்கம் அமைக்கணும் அது இப்போ அமைத்தாற்போல இருக்கணும் அதுக்குண்டான ஏற்பாடுகளை நிக்கோலஸ் மூலமா நான் செய்யறேன் அப்போ வர்றேன்டா. ப்ரியன் கிட்டே இருந்து ஏதாவது மெசேஜ் வந்ததா ?!

இன்னும் இல்லைன்னு என்று சத்யா சொல்லும்போதே ப்ரியனிடம் இருந்து போன் வருது சொல்லு ப்ரியன் என்ன விஷயம் ?!

நடந்த அத்தனையும் சுருக்கமா சத்யாவிடம் தெரிவிக்கப்பட்டது.

முட்டாள் உன்னை எப்போதோ நீரஜாவுடைய போல்டரை அழிக்கச் சொல்லியிருந்தேன் ஆனால் நீ.... வகையாய் இந்தா எடுத்துக்கோன்னு சொல்லி தூக்கிகொடுத்திருக்கே, ரொம்ப நல்லவன்தான் நீ !

................

உன் மன்னிப்பை தூக்கி குப்பையிலே போடு அந்த பொண்ணை என்ன செய்தே ?

...............

ம்... சுரங்கப்பாதை வழியாவா ? அதுவரைக்கும் நல்ல விஷயம் பண்ணியிருக்கேடா அங்கே கடல்ல போட்டு இரண்டு நாள் கழிச்சி மீண்டும் கரைக்கு ஒதுங்கினா தேவையில்லாத பிரச்சனைதான் வரும் சுரங்கபாதையிலேயே இருக்கட்டும் பாலத்தீன் கவர் வழியா சுவாசிக்க கொஞ்சம் இடம் வைச்சிருக்கேன்னு சொல்றீயே ? நான் வர இன்னும் ஏழெட்டு நாளாகும். அதுவரைக்கும் அவளுக்கு ஆயுள் இருந்தா உயிரோட இருக்கட்டும். இன்னும் வேற யாருக்கும் நம்ம விவரம் தெரியாமல் பார்த்துக்கோ பரத் எப்படியிருக்கிறான்

.............

யார்... அந்த புதுப்பொண்ணோட சுத்தப்போயிட்டானா ? நல்லதுதான் நம்மளைப் பத்தி அவன் ஏதும் நோண்டாம இருக்க இதுவும் நல்ல ஐடியாதான். சரி நான் வர்ற வரையில் எல்லாத்தையும் சுமூகமா பார்த்துக்கோ அந்தப் பகுதிகளில் கனிம வளங்கள் நிறைய இருக்கு நிறைய தடைசெய்யப்பட்ட பகுதிகள் அங்கெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கணுமின்னா அதுக்கு பரத்தோட உதவி கட்டாயம் தேவை அவனுக்கு சந்தேகம் வராம பார்த்துக்கோ ?!

...........

என்ன ஏதாவது பிரச்சனையா ?! 

.............

நத்திங் ஒரு சின்ன சிக்கல் அதெல்லாம் சரியாயிடும் எதையும் நிக்கோலஸ் காதுல போடதே ? நான் சீக்கிரம் அங்கே போயாகணும்.

கடைசி சிப்பை அருந்திவிட்டு கோபமாய் எழுந்து போனான் சத்யா.

ரத் மெளனமாய் உத்ராவைப் பார்த்தான்

நீரஜா பற்றிய சந்தேகங்கள்தான் அவளுக்கு இத்தனை குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறது மென்மையாய் அவளின் கையைப் பற்றினான் 

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 17 - லதா சரவணன்AdharvJo 2018-11-19 19:13
Interesting update Ma'am :clap: :clap: So as of now Padmini is alive :Q: Will uthra start searching for Padmini?? Andha cell kedikuma..will dey save Padmini?
Uthra, Bharath namburangala illaya :P Anyway as Bharath said kenji and konji vara kudiya vishyam ala so let us wait and watch :yes: Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 17 - லதா சரவணன்mahinagaraj 2018-11-19 13:54
சூப்பர் மேம்... :clap: :clap:
எப்போ உண்மைகள் வெளிவரும்... :Q: :Q:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 17 - லதா சரவணன்saaru 2018-11-18 19:33
Nice update..
Paddu voda nilai ennavagum
Reply | Reply with quote | Quote
# KI by Latha SaravananSahithyaraj 2018-11-18 11:23
Nice update. What happened to Padmini. Is she safe. What next Waiting eagerly for the next ud.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top