இப்போதாவது என்மேல உள்ள சந்தேகம் தீர்ந்ததா ? நீரஜா எனக்கு ஒரு நல்ல தோழி அவ்வளவுதான், இதை இப்போது நிரூபிக்க எனக்கு வேறு எந்த விருப்பமும் இல்லை என் வாய்மொழியினைத் தவிர என்னை நீ நம்பித்தான் ஆக வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்த, உத்ரா நான் என் வெறுமைக்காக சில விஷயங்களை செய்திட்டேன் ஆனால் நான் எந்த பெண்ணோட வாழ்க்கையிலே குறுக்கிட்டது கிடையாது, நிறைய ஏமாற்றங்கள் இருக்கு ஆனா அதுக்காக நான் உன்னைக் கெஞ்ச மாட்டேன் உத்ரா, காதல் கெஞ்சியோ, கொஞ்சியோ வாங்குவது கிடையாது உண்மையான அன்போட நீ என்னை ஏத்துக்கணும் அதுவரையில் என் மேல் நம்பிக்கை ஏற்படும் வரையில் நான் காத்திருப்பேன்.
சார் ரெஸ்டாரண்ட் தயாரா இருக்கு,
பரவாயில்லைப்பா அதை கேன்சல் பண்ணிடுங்க இன்னொரு நாள் நான்...
இல்லை போகலாம்
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
உத்ரா பரத்தின் பேச்சை இடைமறித்தாள். பரத் ஏதும் பேசவில்லை அமைதியாய் பேரர் உடன் சென்றான்.
உத்ராவிற்கு தான் இப்போது செய்வது சரியா தவறா என்றே தெரியவில்லை ?
காலையில் பரத்துடன் வரும்போது ஆயிரம் குழப்பம் இருந்தது. பத்மினியின் பாராமுகம் ப்ரியனின் பரத்தின் மேல் சொல்லிய குற்றங்கள் எல்லாம் ஒருமூலையில் இருந்தாலும் பரத்துடன் தனியே பயணப்படுவது சந்தோஷமாகவே இருந்தது
மனதுக்குள் குமிழ் குமிழாக குதூகலம் பொங்கினாலும் பாலில் தெளித்த தண்ணீராய் நீரஜாவின் நினைப்பும் வந்தது. உண்மைக்கு என்றுமே அழிவு கிடையாது. அதேபோல் இப்போது பரத்தின் பேச்சிலும், பார்வையிலும் பொய் இருப்பதாக தெரியவில்லை, ஒன்று பரத் கைதேர்ந்த நடிகனாக இருக்கவேண்டும், அல்லது அவன் உண்மையைப் பேச வேண்டும். இதில் எது உண்மை
குழப்பம் மேலோங்கி இருந்தாலும் பரத்துடன் கோபத்தை காட்டிட முடியவில்லை அடிப்பட்ட புறாவைப் போன்ற பரத்தின் பார்வையில் குற்றம் சாட்டமுடியவில்லை, பரத் தவறானவனாகவே இருந்தாலும் உத்ராவின் மனதிற்குள் பூத்திருக்கும் நேசம் பொய்யாகப் போவதில்லை, அந்த காதலுக்கு பரிசாக அவள் இறந்தாலும் பரவாயில்லை பரத்தைவிட்டு இனி நீங்க முடியாது என்பதை உணர்ந்திருந்தாள்.
பரத்தின் மேல் அத்தகைய அளவுகடந்த காதல் உருவாகும் என்று அவளால் நம்ப முடியவில்லை, காதல் கண்களை மறைத்துவிட்டதோ ? இந்த நினைப்பு அவளின் இதழ்களின் மேல் மென் புன்னகையைப் படர விட்டது. இரவு விருந்து என்று அவர்கள் நின்ற இடம் சொர்கலோகம் போல காட்சியளித்தது.
தொடரும்...
Go to Kathal Ilavarasi story main page
{kunena_discuss:1201}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.