(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - காதல் இளவரசி – 18 - லதா சரவணன்

kadhal ilavarasi

காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த அலெக்ஸ் தலைமையிலான குழுவினரின் கப்பல் புறப்படத் தயாராக இருந்தது.

இது ஒரு நெருக்கடியான நிலைமை இப்போ உங்களோட உதவி எங்களுக்கு ரொம்பவும் முக்கியம் உங்களுக்கு உதவியா இருக்க சில ஏற்பாடுகள் செய்திருக்கிறோம் இவங்க பேரு மிஸ் ஏஞ்சலினா நேவி ரிசர்ச் சென்டரில் இருந்து வர்றாங்க மெரின் எலக்ட்ரானிக் இன்ஜினயரும் கூட உங்க மெஷன்க்கு அட்வைஸர் பைலட் ஜெகன் உங்க மெரைனை இயக்குபவர். அலெக்ஸைப் பற்றி உங்களுக்கு தெரியும் உலகத்திலலே 11000 வரை அடிஆழத்திலே பயணிச்சவங்க மூன்றுபேர் அதில் ஒருத்தர் தான் இந்த அலெக்ஸ்

மற்ற இருவர்களின் பார்வை சற்று உயர்ந்தது.

உங்களோட பணி சிறக்க எங்களின் வாழ்த்துக்கள் மிஸ்டர் அலெக்ஸ்

ஸார் அமைச்சர் புண்ணியகோடி வர்றார்....

அவர் எதுக்கு இந்த நேரத்திலே ?

அலெக்ஸ் நீங்க வெளிநாட்டுலே ரிசர்ல இருந்தாலும் உங்களுக்கு நம்மோட அரசியல் நிகழ்வுகள் தெரியாமப் போகாது இல்லை, விமானத்திலே காணாமல் போனவங்க சில அதிகாரிகள் மட்டும் அல்ல அமைச்சர் புண்ணியகோடியின் கட்சித் தலைவர் இப்போ அவங்க ஆட்சியிலே வேற இருக்காங்க விட்டுடுவாங்க, மனுஷன் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி மரியாதை இம்மியளவும் கிடையாது என்ன பண்றது என்ன படிச்சாலும் பெரிய பதவியில் இருந்தாலும் ஒண்ணும் தெரியாத இந்த அரசியல்வாதிகள் கிட்டே கைகட்டி நிக்கறது நம்ம தலையெழுத்து.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அட்மிரல் பேசிக்கொண்டு இருக்கும் போதே சுமார் பத்து பதினைந்து பேர்களுடன் கப்பலின் தரைதளத்திற்குள் நுழைந்தார் புண்ணியகோடி

ஏன்யா என்தலைவன் காணாமல் போய் முழுசா ஒருமணி நேரமாச்சு இன்னமும் எந்த தகவலும் வரலை, நீங்களெல்லாம் என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க, ஒரு அதிகாரிக்கு இத்தனை அலட்சியம் இருக்கக்கூடாது

அதுதொடர்பான மீட்டிங்தான் சார் இப்போ போயிட்டு இருக்கு ... இவர்தான் அலெக்ஸ் கடல்வாழ் ஆராய்சியில் ரொம்பவும் திறமையானவர், கடலின் அடிஆழம் வரை சென்று வந்த மூன்று பேர்களில்இவரும் ஒருவர் அய்யாவைக் காப்பாற்ற இவரோட ஒரு குழுவை அனுப்பறோம்.

கிழிச்சே.... சின்ன பையனாத் தெரியறான். உங்ககிட்டே பொறுப்பை ஒப்படைச்சதுக்கு இதோ எங்க கட்சியாளுங்க பாருய்யா கட்டிக்கிட்டுவாடான்னா வெட்டிக்கிட்டு வருவான் பேசாம நாங்களே

தாரளமா கண்டுபிடிக்கலாமே ஸார் இதோ இவருக்கு நீச்சல் நல்லா தெரியும் போலயிருக்கு ஒரு மிதவை வைச்சிகிட்டு நீங்க தாராளமா

மேற்கொண்டு பேசத் துவங்கும் முன்பு அலெக்ஸ்ஸின் கையைப் பற்றினார் அட்மிரல்....

என்னய்யா நக்கலா ? இந்த வீரம் எல்லாம் எந்தலைவனைக் கண்டுபிடிக்கறதில் காட்டு

அவர் கர்ஜித்துவிட்டு வெளியேற சுற்றியிருந்த ஊடகங்கள் எல்லாம் ஆளுக்கொரு மைக்கை நீட்டிட சாரமாரியாய் கேள்விகள் கேட்கத் துவங்கின.

கப்பல் நகரத் துவங்கியது பைலட் தன் வேலையைக் கவனிக்கபோக கப்பலின் மேல்தளத்தில் நின்று கொண்டிருந்த அலெக்ஸை நோக்கி வந்தாள் ஏஞ்சலினா

ஹலோ அலெக்ஸ் நா உங்களோட ரிசர்ச் பற்றி நிறைய படிச்சிருக்கேன் டிஸ்கவரியில் உங்களைப் பற்றியும் கடல் தொடர்பான ஆராய்சிகள் பற்றியும் போனமாதம் ஒரு டாக்குமெண்டரி வந்ததே ?! இந்த மாதிரி திறமையான தைரியமான ஒரு ஆள் தமிழரா இருக்கிறதில் எனக்கு ரொம்பவும் பெருமை

எனக்கும் தான் பெயருக்குப் பின்னால் ஒரு டிகிரிக்காக படிக்கும் ஆட்கள் மத்தியில் அபாயகரமான பணின்னு தெரிந்தும் நீங்க சப்மரைன் பற்றி படிச்சு அதிலும் இந்த மாதிரி ஒரு டிரிப்புக்கு வர்றீங்கன்னா ரியலி பிரவுட் டூ யூ ! மிஸ்...

ஏஞ்சலினா... உங்களுக்கு நிறைய ஞாபக மறதியிருக்கும் போலயே ? இப்போதான் அட்மிரல் என் பெயர் வேலை பற்றியெல்லாம் சொன்னார் அதுக்குள்ளே மறந்துட்டீங்களா ?!

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அதோ சப்மரைன் நம்ம கப்பலை நோக்கி வந்துகிட்டு இருக்குது.

ஏஞ்சலினா காட்டிய திசையில் ஒரு கப்பல் நியூக்ளியர் சப்மரைனைச் சுமந்து கொண்டு வந்தது. இந்த சப்மரைன் பற்றி கொஞ்சம் சொல்லுங்க ஏஞ்சலினா

dsrv2 prototype நியூக்ளியர் புது எலெக்ட்ரானிக் சப்மெரைன் பல மடங்கு அதிக வேகமாக போகும். கடலுக்கு அடியில் 11000 கிலோமீட்டர் ஆழத்திற்கு போககூடியது, ரொம்பவும் அதிக ஆழங்கிறதால கார்பன் வெண்டிலேட்டர் வசதியும் இருக்கு. சப்மரைனோட மிரர்ஸ் எல்லாம் பிளாஸ்டிக் மாதிரி தோன்றினாலும் பாலி கார்பனேட்டால ஆனது நாம போறது கடலோட அடிமட்டத்திற்கு நமக்கு ஏந்த ஆபத்து வேண்டுமானாலும் ஏற்படாலாம் இந்த பாலி கார்பனேட் உடையணும், நொறுங்கணுன்னா ஐம்பது யானைகள் அதன்மேல மோதணும் அந்த அளவுக்கு பாதுகாப்பு

ம்...சப்மரைன் நெருங்கிடுச்சு வாங்க கடலுக்குள்ளே மீதி பேச்சுவார்த்தையை வைச்சிகலாம் என்று அவளைத் தாண்டி நடந்த அலெக்ஸை காதலுடன் பார்த்தாள் ஏஞ்சலினா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.