(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - தாரிகை - 19 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2017..

கூட்டம் கூடிவிட்டிருந்தது அங்கே..!! சில நொடிகளில்..!! எல்லாம் வேடிக்கை பார்த்திடும் கூட்டம்தான்..!!

கீழே விழுந்துகிடந்தவன் தனது சட்டையில் இருந்த மண்ணைத் தட்டிவிட்டு தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க.. அதற்குள் தனது நெற்றியைத் தேய்த்தவண்ணம் நிஷாவுடன் இறங்கியிருந்தாள் தாரிகை..!!

முதுகு காட்டியபடி கைகால்களைத் உதறியபடி நின்றிருந்தவனைக் கண்துடம் தன்னை அறியாமலேயே டா..க்..ட..ர்.. பா..ல..க..னே..ஷ்.. என முணுமுணுத்தது நிஷாவின் இதழ்கள்..

“உனக்குத் தெரிஞ்சவரா நிஷா..??”, கேட்டிருந்தாள் தாரிகை..

“எஸ்க்..கா.. எங்க மெடிக்கல் காலேஜ்தான்.. பேத்தாலஜிஸ்ட்..”, என்று அவசரமாக மொழிந்தவள் பாலகனேஷிடம் ட்ரைவர் மன்னிப்பு கேட்பதைப் பார்த்துவிட்டு, “சார்.. ஆர் யூ ஓகே..??”, பதற்றமாகவே..

“ஹே.. ஹாய்.. ஒன்னுமில்லை.. ஜஸ்ட் சின்ன சிராய்ப்புதான்..”, அவளை அங்கு எதிர்பார்க்காதவனாக..

“சாரி சார்.. சாரி மேடம்..”, ட்ரைவர் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்க..

“ப்ச்.. அண்ணா பரவாயில்லை.. போய் உட்காருங்க..”, அழுத்தமாக குரல் கொடுத்திருந்தாள் தாரிகை..

அப்பொழுதுதான் தாரிகை அங்கு நிற்பதைக் கண்டான் பாலா..

லேசாக அவளைப் பார்த்து புன்னகைக்க.. எப்பொழுதும்போல் தலையசைப்பு மட்டுமே அவளிடம்..

“திமிர்பிடிச்சவ..”, அப்படித்தான் பட்டம் கொடுத்தது பாலாவின் மனது..

“என் சிஸ்ட்டர் செந்தாரிகை சார் இவங்க..”, என்ற நிஷா தாரிகையிடம், “அக்கா இவர் பாலகனேஷ்..”, என்க..

மீண்டும் அதே தலையசைப்பு..

ஒன்றும் பதில் பேசாமல் லேசாக அவளைப் பார்த்து முறைத்த பாலா, “நான் கிளம்பறேன் நிஷா..”, என்றிட..

“ஒரு காபி..”, எதுவும் யோசிக்காமல் சட்டென கேட்டிருந்தாள் நிஷா..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பாலாவின் கண்கள் தாரிகையையே முகாமிட்டிருந்தது.. அத்தனை அத்தனை பிடித்தமின்மையை சுமந்திருந்தது தாரிகையின் முகம்..

அதை எதிர்பார்த்தே இருந்தவனாக, “இன்னைக்கு வேண்டாம் நிஷா இன்னொரு நாள்..”, என்று நாசுக்காக மறுத்திட..

முகம் கொஞ்சம் சுறுங்கித்தான் போனது நிஷாவிற்கு..!!

“நம்ம நம்ம கேங் கூட போலாம் நிஷா.. உங்க சிஸ்ட்டர் மாதிரி ஓல்டீஸ் எல்லாம் வேண்டாம்..”, என்று அவளைப் பார்த்துக் கண்ணடித்தவன் விடைபெற்றுச் செல்ல..

முகம் முழுவதிலும் கடுப்பு.. கடுப்பு.. கடுப்பு மட்டுமே தாரிகைக்கு.. அவன் தன்னை ஓல்டீ என்று எப்படிச் சொல்லலாம் என்று..

அவளது முகத்தோற்றத்தைக் கண்டு சிரிப்பை அடக்கிய நிஷா, “அக்கா.. எல்லாரும் நம்மையே பார்க்கறாங்க.. போலாம் வாங்க..”, கைப்பிடித்து அவள் இழுத்திட..

பாலா சென்ற திசையை நோக்கி முறைப்பைப் பரிசளித்தவள்.. விடுவிடுவென நிஷாவுடன் காரில் ஏறியிருந்தாள்..!!

ஜா புயலின் தாக்கம் கோவையையும் விட்டுவைக்கவில்லை..!! சடசடவென்று பெய்துகொண்டிருந்தது மழை..!!

லேசான குளிர்காற்று போர்வைக்குள் புகுந்து விளையாட இன்னும் சுகமாய் அதனுள் பூனையைப்போல் சுருண்டுகொண்டான் பிரஜித்..!!

அன்று கல்லூரிக்குச் செல்லும் எண்ணம் இல்லாதவனாக உறங்கிக்கொண்டிருந்தான் அவன்..

இந்நேரம் அவனது தாய் சந்தானலட்சுமி இருந்திருந்தாள் துறத்தி அடித்திருப்பார் அவனை.. அவர்தான் ஒரு கல்யாணம் என்று பழனிக்குச் சென்றிருக்கிறாரே..!!

குளிர்விட்டுப் போயிருந்தது அவனுக்கு.. இதமாய் சுகமாய் துயில்கொண்டிருந்தான்..!!

“நம்ம மேல ஒன்னும் சந்தேகம் இல்லையே யாருக்கும்..??”

“ஆக்ஸிடெண்ட் மாதிரிதான் பண்ணியிருக்கோம்ண்ணே.. யாருக்கும் சந்தேகம் வராது..”

“சரியா பண்ணியிருந்தா நல்லதுதான்.. இல்லைன்னா என்ன நடக்கும்னு தெரியும்ல..??”, எச்சரிக்கைபோல்..

கனவில் யாரோ பேசுவதுபோல் இருக்க திரும்பிப்படுத்த பிரஜித்.. லேசாக தனது கண்களைத் திறந்து பார்க்க.. யாரோ தனது தந்தையுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது..

அறைகுறையாக அவர்களது பேச்சு காதில் விழுந்திருக்க விழித்துக்கொண்டான் அவன்..

“சந்தேகம் இல்லையே யாருக்கும்..??”, தந்தையின் கேள்வி ஏனோ அத்தனை சரியாகப் படவில்லை அவனுக்கு..

கண்களை மூடியபடி இருவரின் பேச்சையும் கவனிக்கத்துவங்கினான் அவன்..

“தெரியும் அண்ணே.. யாருக்கும் சந்தேகம் வராது.. யாரும் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.. தற்கொலைன்னுதான் நியூஸ் எல்லாம் வரும்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.