(Reading time: 11 - 21 minutes)

“ஆஹான்.. நல்லா ரசி.. இப்படி ஜோரா மழை இனி எப்பவரும்னு தெரியாது..”, என்றவள் தான் அணிந்திருந்த கோட்டைக் கழட்டி தனது ஸ்கூட்டியின் மீது விரித்துக்கொண்டு, “ஆமா.. உன் தோஸ்த் எங்கே..?? இன்னுமா வரலை..??”, என்று கேட்டிட..

“அவங்க அம்மா ஏதோ கல்யாணத்துக்குப் போயிருக்காங்க நிஷ்.. சோ சார் நல்லா குறட்டைவிட்டு தூங்கியிருப்பார்..”

“அப்போ கிளாஸ் கட்டா இன்னைக்கு..??”

“இல்லப்பா வந்திடுவான்.. என்ன கொஞ்சம் லேட்டாகும்..”

“ஹோ சரி சரி.. இப்படியே நனைஞ்னிட்டு இருக்காம கிளாஸ்க்குப் போங்க என்ன..??”, என்றவள் தனது கிளாஸிற்குச் செல்ல..

பிரஜித்திற்காக வெயிட் செய்து பார்த்த கவின் அவன் இன்னும் வந்து சேராததால் அவனுக்கு அழைப்பு விடுக்க.. அது ஸ்விட்ச் ஆப்பாயிருக்க.. குழப்பத்துடன் தனது வகுப்பிற்குச் சென்றான்..

மதியம் மணி பன்னிரெண்டைத்தாண்டியும் இன்னும் வந்து சேரவில்லை பிரஜித்..

கவினுக்கு ஏனோ இருப்பே கொள்ளவில்லை..

லஞ்ச் ப்ரேக்கிற்கான பெல் அடித்ததும் மீண்டும் பிரஜியின் மொபைலிற்கு தொடர்புகொள்ள.. மீண்டும் அதே பதில்..

அதற்குள் இருவரையும் தேடி வந்துவிட்டாள் நிஷா..

“என்ன கவின் பிரஜி இன்னும் வரலயா..??”

“ஹ்ம்.. ஆமாடா.. ஒருவேளை உடம்பு சரியில்லையோ..??”

“இருக்கலாம்.. காலேஜ் முடிஞ்சிட்டு போய் பார்க்கலாம் அவனை.. சொல்லிட்டு லீவ் எடுக்கறதில்லை.. பொறுப்பே இல்லை..”, அவள் பாட்டிற்கு திட்டுக்கொண்டுவர..

இருவருக்கும் எதிரில் எல்லாவற்றையும் பரிகொடுத்தாற்போன்ற தோற்றத்துடன் வந்து நின்றான் பிரஜித்..

நிஷாவும் கவினும் அதிர்ந்துதான் போயினர்..

இதுவரை பிரஜி இவ்வாறு இருந்ததே இல்லை.. ஒரே நாளில் முகமெல்லாம் கறுத்துக்கிடந்தது..

என்ன நடந்ததென்றும் புரிந்திடவில்லை.. அப்படியொரு தோற்றம்..

“பி..ர..ஜி.. என்னாடா ஆச்சு..??”, கவின் கேட்க..

உடைந்துபோனான் பிரஜித்..

தாங்கள் அனைவரும் லட்சக்கணக்கான பேர் வந்து போகும் மருத்துவமனை வளாகத்தின் நிற்கிறோம் என்பதே மறந்துவிட்டவனைப் போன்று இறுக அணைத்துக்கொண்டான் கவினை..

தாரை தாரையாக கண்களில் கண்ணீர் வேறு..

அவன் செய்கைகளைக் கண்டு பிசைந்தது நிஷாவிற்கு..

தங்களை அனைவரும் பார்த்துக்கொண்டு செல்வதுவேறு ஒருவித அசௌகரியத்தைக் கொடுக்க..

“க..வி..ன்.. பி..ரஜி.. நாம கிரௌண்டுக்குப் போகலாம்.. எல்லாரும் நம்மளையே பார்த்திட்டுப் போறாங்க..”, என்று அவள் முணுமுணுத்திட..

மௌனமாக மூவரும் ஒரு மரத்துக்கடியில் சென்று அமர்ந்தனர்..

நிஷாவும் கவினும் பிரஜியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க.. அவனது கண்களோ அலைப்பாய்ந்துகொண்டிருந்தது அவனது மனதைப் போலவே..

மிகவும் ரெஸ்ட்லெஸ்ஸாக காணப்பட்டான் அவன்..

முகத்தில் டன் கணக்கில் சோகம் சோர்வு..

அவன் சாப்பிட்டிருக்கவில்லை என்று புரிந்துவிட்டது நிஷாவிற்கு..

தனது டிபன் பாக்ஸில் இருக்கும் சப்பாத்தியைப் பிய்த்து குருமாவில் தோய்த்து அவன் இதழருகே கொண்டு செல்ல.. இறுக்கமாக மூடியிருந்தது அவனது இதழ்கள்..

“வாயைத் திற பிரஜி..”, அதட்டியிருந்தான் கவின்..

இருந்தும் அவனிடம் எந்த அசைவும் இல்லை..

“பிரஜி.. ஒழுங்கா வாயைத் திற..”, அதட்டினான் கவின்..

வேண்டாம் என்ற தலையசைப்பு மட்டுமே..

“எரும.. எந்தப் பிரச்சனயா இருந்தாலும் யோசிக்க தெம்பு வேண்டாமா..?? ஒழுங்கா சாப்பிடற.. இல்லைன்னா உனக்கு ட்ரிப்ஸ் ஏத்த ஏற்பாடு பண்ணவேண்டியிருக்கும்.. எப்படி வசதி..??”, மிரட்டலாகவே..

இருவரின் அக்கறையில் சிரிப்புதான் வந்தது பிரஜிக்கு..!!

அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிஷாவின் கைகளைப் பார்த்தவன் வாயைத் திறக்க.. ஊட்டிவிடத்துவங்கினாள் நிஷா..!!

அவளது டிபின் பாக்ஸ் காலியாகி கவினின் டிபின் பாக்ஸ் காலியாகும் வரையிலும் அங்கு மழையின் சத்தம் மட்டுமே..

“இப்ப சொல்லு பிரஜி.. என்ன விஷயம்.. ஏன் இப்படி இருக்க நீ..??”, நிஷாதான் கேள்வியைக் கேட்டிருந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.