(Reading time: 11 - 21 minutes)

“எதுக்கும் அந்த கமிஷ்னர் வீரபாண்டியங்கிட்ட விஷயத்தைப் போட்டுவை.. பார்த்துப்பார் அவர்.. என்ன..??”

“அவரு வரைக்கும் கொண்டுபோகத் தேவையில்லைன்னு நெனைக்கறேன்.. இருகூர் இன்ஸ்பெக்ட்டர் நம்ம ஆளுதான்.. அவர் பார்த்துப்பார் எல்லாத்தையும்..”

“டேய்.. நான் சொல்றதை மட்டும் செய்யுடா.. நீங்க ராவுலதான் அந்தக் கொலையப் பண்ணுனீங்க.. யாரும் பார்த்திருக்கமாட்டாங்க.. எல்லாம் சரிதான்.. ஒருவேளை யாராவது பார்த்திருந்தா..?? ஏற்கனவே அவன் என்ன வேலை செஞ்சுட்டு இருந்தான்.. எதுனால இந்த சூசைட்னு ஆயிரம் ஓடிட்டு இருக்கும்.. இதுல கொலைன்னு தெரிஞ்சா நாம மாட்டிக்க வாய்ப்பு அதிகம்.. வீரபாண்டியனுக்கு போனைப் போட்டுச் சொல்லிரு..”, என்றவர் சிறு யோசனைக்குப் பிறகு, “போனெல்லாம் வேண்டாம்.. நேரா ஒரு மூணு லட்சத்தை அவங்க்கிட்டத் தள்ளிட்டு விஷயத்தை நேரா சொல்லிட்டு வா.. நமக்கு நம்ம விஷயம் எதுவும் வெளியத் தெரியக்கூடாது.. புரிஞ்சுதா..??”

“சரிங்கண்ணே.. பார்த்துக்கறேன் நான்..”, என்றவன் படிகளில் கீழே நாதனுடன் இறங்கிச்சென்றிட..

வேர்த்து ஊத்தியிருந்தது பிரஜித்திற்கு..!!

கொலையா..??

அதுவும் தனது தந்தையா..??

சத்தியமாக நம்பமுடியவில்லை பிரஜிக்கு..

தனது தந்தை எதுவோ தவறான விஷயம் செய்கிறார் என்று அவனுக்கு முதலிலேயே தெரிந்திருந்ததுதான்..

ஏதோ சிறியதவரென்று நினைத்திருந்தான் அவன்..

ஆனால் கொலை என்பது..??

குளியல் அறைக்குள் நுழைந்தவன் குளிர்ந்த நீரில் ஒருமணி நேரமாக நின்றிருக்க.. மனதில் இருந்த எதுவும்.. எதுவும் வடிந்திடவில்லை அவனுக்கு..

“அடுத்து என்ன செய்வதாம்..??”, கொக்கிப்போட்டு நின்றது கேள்வி..!!

“போலீஸிடம் சென்றிடலாமா..??”, எண்ணம் தோன்ற.. கூடவே தாயின் முகமும்.. எரியாத புஸ்வானமாக வடிந்தது அந்த எண்ணம்..

“இந்த விஷயத்தை அம்மா கண்டிப்பாக தாங்கிக்கொள்ளவே மாட்டார்.. வேண்டாம்.. சொல்லவேண்டாம்..”

என்னதான் தாய்க்காக என்று மனதிற்குள் உருப்போட்டுக்கொண்டாலும் இருந்தும் மனது ஒப்பவில்லை அவனுக்கு..

அவர் செய்தது ஒன்றும் சாதாரண காரியம் அல்லவே..

ஒரு கொலை..!!

அதில் அவன் குடும்பம் மொத்தமல்லவா பாதிக்கப்பட்டிருக்கும்.. அவன் குடும்பத்தினர் அனைவருக்கும் அனாதை என்னும் பட்டத்தைக் கொடுத்திருக்கிறார் அவர்..!!

மூச்சுமுட்டிவதுபோல் உணர்வு..!!

அப்பொழுதுதான் ரொம்ப நேராமாக நீருக்குள் இருப்பது புரிந்தது..

உடலில் நடுக்கம் வேறு..!!

கிடைத்த துண்டை எடுத்துத் தன்னைத் துடைத்துக்கொண்டவன்.. அவசரமாக உடை அணிந்துகொண்டு கீழே வர.. சோபாவில் அமர்ந்திருந்தார் நாதன்.. முகத்தில் பலத்த யோசனை..

வெறுப்பாய் இருந்தது பிரிஜிக்கு..!!

அவரைக் கண்டும் காணாததும் போலவே அவரைக் கடந்து செல்லத் துவங்க..

“இந்நேரம் க்ளாஸ் ஸ்டார்ட் பண்ணிருப்பாங்க.. எப்பத்தான் படிக்கணும்னு வருமோ..??”, யாரிடமோ பேசுவதுபோல் அவர் பாவனை செய்ய..

ஒருநொடி.. ஒரேநொடி தடைபட்டது பிரஜியின் நடை..!!

தேங்கினால் தனது நாவிலிருந்து வார்த்தைகள் கண்டிப்பாக வந்துவிழுந்திடும் என்று புரிந்தது..

விரைந்து வெளியே சென்றவன் தனது புல்லட்டை புயலைப்போல் செலுத்திக்கொண்டு சென்றான்..!!

ணிந்திருந்த ரெயின்கோட்டையும் மீறி இரண்டு மூன்று துளிகள் உடலில் வீழ்ந்து கொஞ்சம் சிலிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது நிஷாவிற்கு..!!

எப்பொழுதும் ரெகுலராக தனது ஸ்கூட்டியை நிறுத்துமிடத்தில் இன்றும் அதனை நிறுத்தியவள்.. தனது வண்டியில் சாய்ந்து நின்றிருந்த கவினைப் பார்த்து அவனருகில் சென்றாள்..

“மழையில இப்படி நிக்கனும்னு வேண்டுதலா கவின் உனக்கு..??”, கேலியாக..

“நல்லாயிருக்கு நிஷா.. சில்லுன்னு.. அதுவும் ரொம்ப நாள் கழிச்சு இப்படி நின்னு ரசிக்கறேன்.. நீ என்னடான்னா கிண்டல் பண்ற என்னை..”, கொஞ்சம் முறைப்புடன்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.