(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - என்னவளே - 16 - கோமதி சிதம்பரம்

ennavale

கீதா, தன் மடியில் படுத்து இருந்த ராஜகுட்டியை தட்டி தூங்க வைத்து கொண்டு இருந்தாள்.

அப்பொழுது, அவளது அறைக்கதவை திறந்து கொண்டு பருவதம் அம்மாள் சிரித்து கொண்டே கையில் சில நகை பெட்டிகளை எடுத்து கொண்டு உள்ளேயே வந்தார்.

ராஜகுட்டி அதுக்குள்ள தூங்கிட்டான்யா.... என்று அவனுக்கு திருஷ்டி சுற்றி நெட்டி முறித்தார்.

கீதா, இந்த நகையில் உனக்கு எது பிடித்து இருக்கிறதோ அதை நாளை போட்டுக்கொள்....

ராஜகுட்டிக்கு பெயர் வைக்கும் விழாவோடு சேர்த்து நாளைக்கு உனக்கும் ரிஷிக்கும் நிச்சயதார்த்தம் செய்து விடலாம் என்று அண்ணா சொல்லிவிட்டார்  என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்.

அம்மா... நாளைக்குவேயே இவ்வளவு சீக்கிரமவா என்று ஆனந்த அதிர்ச்சியுடன் கேட்டாள்....

ஆமாம், கீதா அண்ணா திடீருனு தான் என்கிட்டயே  சொன்னார்...  எனக்கும் உங்க கல்யாணத்தை தள்ளிப்போட விருப்பம் இல்லை...

நல்ல காரியம் சீக்கிரமா நடக்குறது தான் நல்லது. ரிஷியும் உன்ன பிரிஞ்சு ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்.

இனி, நீயும் ரிஷியும் சந்தோசமா வாழ்றதை மட்டும் தான் நாங்க பார்க்கணும்.

சீக்கிரமா, இந்த நகை எல்லாம் போட்டு பார்த்து உனக்கு எது பிடிச்சிருக்கோ  அதை நாளைக்கு போட்டுக்கோ....

நான், உனக்கு இங்கையே சாப்பாடு அனுப்புறேன் சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டு சீக்கிரம் தூங்குடா ... அப்பத்தான் காலைல பிரெஷ்யா பீல் பண்ணுவா...

கீதாவின், மடியில் தூங்கி கொண்டு இருந்த ராஜகுட்டியை அவனது தூக்கம் கலையாதவாறு தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டார்.

எனக்கு நிறைய வேலை இருக்கு .... நான் போய் அதை பாக்குறேன் என்று சந்தோசத்துடன் கூறிவிட்டு சென்றார்.

கீதா, ஹாஸ்பிடல் யில் இருந்து வீட்டிற்கு வந்து ரெண்டு வாரம் ஆகிவிட்டது. இந்த இரண்டு வாரமும் பருவதம் அம்மாள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

அதேயே, சந்தோசத்துடன் கீதாவையும் நன்றாக பார்த்து கொண்டார். கீதாவின், உடம்பும் நன்றாக தேறி இருந்தது. கை காயம் கூட ஆற துவங்கி  இருந்தது .

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சதாசிவமும், கீதாவின் அறைக்கயே வந்து அவளை நலம் விசாரித்தார். ஒன்று இரண்டு முறை அவருடன் சிவகாமி அம்மாளும் வந்து அவளை பார்த்து சென்றார்.

சதாசிவம் முன்பு சிவகாமி அம்மாள் கீதாவிடம் பாசத்துடன் பேசுவார்... ஆனால், அவரது அனல் கக்கும் பார்வையே இந்த திருமணத்தில் அவர்க்கு சிறிதும் சம்மதம் இல்லை என்பதை அவளுக்கு உணர்த்தியது.

கீதாவும், இதை சிவகாமி அம்மாளிடம் எதிர்பார்த்து இருந்ததால் பெரிதாக ஏதும் அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால், இந்த ரெண்டு வாரத்தில் ரிஷி அவளை வந்து ஒரு தடவை கூட பார்க்கவில்லை.

பருவதம் அம்மாளிடம் கேட்டதற்கு, ஏதோ ஆபீஸ் பிரச்சனை காரணமாக காலையில் எழுந்து செல்பவன் இரவு நேரங்கழித்து தான் வீட்டிற்கு வருகிறான் என்று'கூறினார்.

ரெண்டு வாரத்திற்கு முன்பு, ஹாஸ்பிடல் யில் நடந்ததை நினைத்து பார்த்தாள்.

என்னோட அம்மா.... நீங்க நினைக்குற மாதிரி இல்ல... அவங்க ஒரு...  என்று கண்ணீரை அடக்கி கொண்டு பருவதம் அம்மாளிடம் உண்மையை கூற நினைத்தாள்.

அத்தை, எங்களுக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதம் என்ற ரிஷியின் குரல் கேட்டு பெண்கள் இருவரும் வாசல் பக்கம் திரும்பினார்.

அங்கு ரிஷி சதாசிவத்துடன் நின்று கொண்டு இருந்தான்.

பருவதம் அம்மாள் தான் நினைத்து வந்த காரியம் நடந்து விட்டதை எண்ணி சந்தோஷப்பட்டார்.

ரிஷியின் வார்த்தைகள் கீதாவிற்கும் மகிழ்ச்சியை அளித்தது. ஆனால், அவளது தாயை பற்றி நினைக்கும் போது அவளுக்கு அழுகைத்தான் வந்தது.

தான் ஆசைப்பட்ட வாழ்கை தனக்கு கிடைக்க போகிறது. அதற்காக, தன்னை பற்றிய உண்மையை இவர்களிடம் கூறாமல் இருப்பது தவறு என்று நினைத்தாள் .

கீதா, பேசுவதற்கு முன் ரிஷி முந்தி கொண்டான்.

பெரிய அத்தை, கீதாவிற்கு யாரும் இல்லை.... இனி, அவள் கிட்ட அவங்க அம்மாவை பற்றியோ குடும்பத்தை பற்றியோ எதும் கேட்காதிங்க....

அது, அவளுக்கு கஷ்டத்தை தான் கொடுக்கும் என்று கீதாவை பார்த்தவாறு கூறினான்.

அய்யயோ, நான் உன்னை பற்றி கேட்டதுக்கு தான் நீ அழுகுறியா மா....  கீதா, இனி நீ நம்ம குடும்பத்து பொண்ணு...

ஒரு அம்மாவா உனக்கு நான் இருந்து இந்த கல்யாணத்தை நல்ல படிய நடத்தி வைக்குறேன் டா...

இனி, எதுக்கும் நீ கவலை படக்கூடாது... என்று அவளது கண்ணீரை துடைத்து விட்டார்.

கீதா, பருவதம் அம்மாள் இடுப்பை கட்டி கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள் .

பருவதம் அம்மாளும் அவளது தலையை வருடி கொடுத்தார்.

இந்த காட்சியை கண்ட ரிஷி தனது தந்தையை சுட்டு எரிப்பதை போல பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.