(Reading time: 13 - 25 minutes)

தனது மகன் இருக்கும் மன நிலையை உணர்ந்தவர் அவனது பார்வையை தவிர்த்தார்.

ஹேய், நீ எப்ப டா அண்ணாவை பார்க்க போனாயா???? என்று கீதாவின் தலையை வருடியவரேயே கேட்டார்.

கீதாவும், ரிஷியின் முகத்தை பார்த்தாள்.

அத்தை, காலையில அப்பா போன் பண்ணி என்னை வீட்டுக்கு வர சொன்னார்.

வீட்டுக்கு போனதும் நீங்களும் அப்பாவும் எனக்கும் கீதாவுக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவு பண்ணி இருக்கிறதா சொன்னார்.

சிவகாமி அத்தைகிட்டையும் எங்க கல்யாண விஷயத்தை பற்றி சொல்லிட்டு கீதாவை வீட்டுக்கு கூட்டிட்டு போலன்னு வந்துட்டோம். என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.

எனது, சிவகாமிக்கிட்ட சொல்லிட்டியா??? அவ எதும் கோபப்படலையே....

என் கல்யாண விஷயத்துல கோபப்பட அவங்க யாரு??? அத்தை என்று கோபத்துடன் கேட்டான்.

அதுக்கு இல்ல டா... அவளுக்கு சும்மவேயே கீதாவை பிடிக்காது... இப்ப உங்க காதல் விஷயம் தெரிஞ்ச பிறகு என்ன சொல்லுவாளோன்னு பயந்தேன் அவ்ளோதான்.

நான் கூட சிவகாமி எதாவது பிரச்சனை பண்ணுவான்னு தான் நினைச்சேன்.... ஆனா, அவ ஏதும் சொல்லலாமா... நாம தான் தேவை இல்லாம பயந்துட்டோம்னு நினைக்குறேன். என்று சதாசிவம் பருவதம் அம்மாளிடம் கூறினார்.

அண்ணா, நான் உங்க மேல ரொம்ப கோபமா இருக்கேன். நீங்க என்கிட்ட பேசாதீங்க என்று பொய்யாக முறைத்தார்.

அவரது, முறைப்பை பார்த்து கீதா சிரிக்க.... அவளையும் முறைத்தார்.

நான், என்னம்மா செய்தேன்???? என்னை ஏன் முறைக்குற???? என்று அப்பாவியை கேட்ட்டார்.

இங்க, என்னை கீதாவை பார்க்க அனுப்பி வச்சுட்டு அப்பாவும் பையனும் சேர்ந்து எனக்கு தெரியாம எல்லா காரியத்தையும் பண்ணிட்டீங்க இல்ல.... என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டார்.

இல்லா டா... நீ தானாய ரிஷிக்கும் கீதாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்ட அதான் நான் எல்லாத்தையும் வேகமா செய்ய ஆரம்பிச்சுட்டேன்.

அதும் இல்லாம நல்ல காரியத்தை எதுக்கு நாம தள்ளிபோடனும் சொல்லு.....என்று சிரித்து கொண்டேயே கேட்டார்.

ஆமா, அத்தை அப்பா சொல்றது சரிதான்... நீங்க ஏதாவது ஆசைப்பட்டு கேட்டுட்டா எங்க அப்பாவாலா அதை நிறைவேற்றமா இருக்க முடியாது.

எங்க அம்மா , நான் எல்லாம் உங்களுக்கு அப்புறம் தான். உங்க ஆசையா நிறைவேற்ற அவரோட உயிரையும் கொடுப்பாரு என்று சொல்லிய்யாவன்.

மத்தவங்க உயிரையும் எடுப்பாரு என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

மகனின் வார்த்தைகள் அனைத்தும் சதாசிவத்தை  தாக்கியது. ஆனால், அதை அவர் தனது தங்கையின் முன் காட்டிக்கொள்ள வில்லை.

டேய்.... போதும் டா எங்களை பார்த்து கண்ணு வைக்காத... என்று செல்லமாக ரிஷியை திட்டினார். பருவதம் அம்மாள்

ஹேய், நீ என்ன எங்க எல்லாரையும் பார்த்து சிரிச்சுட்டு இருக்க???? கல்யாண வேலை நிறைய இருக்கு வீட்டுக்கு கிளம்பு என்று கீதாவையும் அதட்டினார்.

சதாசிவம், ரிஷியுடன் இருப்பதை தவிர்ப்பதற்காக ஹாஸ்பிடல் பில் செட்டில் பண்ணுவதாக கூறி சென்று விட்டார்.

பருவதம் அம்மாள் வீட்டிற்கு செல்வதற்காக அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து கொண்டு இருந்தார்.

கீதாவோ, ரிஷியை பார்த்த வண்ணம் உட்கார்ந்து இருந்தாள்.  ரிஷியோ, தனது அத்தைக்கு உதவி கொண்டு இருந்தான்.

அவளது, பார்வையை உணர்ந்த பருவதம் அம்மாள் ரிஷியை கீதாவை கூட்டிக்கொண்டு வருமாறு கூறிவிட்டு தான் கொண்டு வந்த பொருட்களை எடுத்து கொண்டு முன்னே சென்றார்.

இப்போழுது ரிஷி மற்றும் கீதா மட்டும் அறையில் இருந்தனர்.

ரிஷி, ஏதாவது பேசுவான் என்று கீதா எதிர்பார்த்தாள்.

ஆனால், ரிஷியோ தனது முதுகை காட்டியவாறு நின்று கொண்டு கெளம்பலாமா ???? என்று கேட்டான்.

ரிஷி, உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.என்று மெதுவாக கூறினாள்.

இப்ப பேசுறதுக்கு டைம் இல்ல.... எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசலாம் வா... என்று அவசரப்படுத்தினான்.

அது இல்ல ரிஷி... என்னோட அம்மா தப்பானவங்கனு தெரிஞ்சும்.... அவள் சொல்லி முடிப்பதற்குள் கீதாவின் வாயை தன் கை கொண்டு மூடி இருந்தான்.

தீடிர் என்று ரிஷியை இவ்வளவு அருகில் எதிர்பார்க்காதலால் கீதா சற்று தடு மாறினாள்.

அவளது, நிலையையல புரிந்து கொண்டவன் கீதாவை விட்டு விலகி நின்று ஒரு அழ்ந்த மூச்சை வெளியிட்டான்.

கீதா, உன் அம்மா எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். அவர்களை பற்றி இனி எதும் யோசிக்காத.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.