(Reading time: 13 - 25 minutes)

உன்னை கல்யாணம் செய்துக்க போற எனக்கு உன்னை பற்றி தெரிஞ்ச போதும்.வேற, யாருக்கும் உன் கடந்த காலத்தை பற்றி நீ சொல்ல வேண்டாம்.

இனி, உன் வாயில இருந்து உங்க அம்மா தப்பானவங்கனு எந்த ஒரு சூழ்நிலையிலும் சொல்லகூடாது... சரியா.... என்று நிறுத்தி நிதானமாக கூறினான்.

ரிஷியால்  இவ்ளோ பொறுமையாக கூட பேசமுடியுமா என்று கீதா ஆச்சரியப்பட்டாள்.

எனக்காக இவ்ளோ யோசிக்கிறானேயே.... என்று நினைத்தவள் காதலுடன் அவனை  கட்டி கொண்டாள்.

மூன்று வருடம் அவனை பிரிந்து கீதா  பட்ட கஷ்டம் எல்லாம் ஒரேயே நொடியில் மறைந்தது போன்று இருந்தது .

ரிஷியும் கீதாவை  அணைக்க நினைக்கையில், ஒருவேளை கீதாவிற்கு உன் குடும்பம் செய்த துரோகம் தெரிந்தால் உன்னுடன் அவள் இப்படி இருப்பாளா?????

எல்லாம் தெரிந்த பின்பும் திருமணம் என்ற புனிதமான பந்தத்தின் முலம் நீ அவளுக்கு செய்ய போகும் துரோகம் சரிதானா என்று அவனது மனசாட்சி ரிஷியை கேள்விக்கேட்டது.

ரிஷியை விட்டு விலகிய கீதா அவனை ஆவலுடனும் வெட்கத்துடனும் பார்த்தாள்.

ரிஷியோ, கீதா என்னை பிரிந்து மட்டும் சென்று விடாதேயெ என்று மனதிற்குள் கூறிக்கொண்டவன்

கீதாவின், எலும்புகள் உடையும் அளவிற்கு  அவளை இழுத்து அணைத்தான்....  வலித்தாலும் கீதாவும் அந்த அணைப்பில் உருகி நின்றாள்.

பின்னர், ரிஷியே அவளை வீட்டிற்கு கூட்டி கொண்டு வந்தான். அன்று தான், ரிஷியை கீதா கடைசியாக பார்த்தாள்.

அதற்கு பின், இன்று வரை ரிஷி கீதாவை வந்து பார்க்கவில்லை.... ஏன்? என்னவாயிற்று??? அன்னைக்கு ஹாஸ்பிடல்லா நல்ல தானேயே இருந்தார்....

ஒரு வேலை அம்மா சொன்னது போல ஆபீஸ் யில் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ???

அப்படி இருந்தால் கூட இந்த ரெண்டு வாரத்தில் ஒரு தடவை கூட என்னை பார்க்க வேண்டும் ரிஷிக்கு தோன்றவில்லையா ????

அதும் ஒரேயே வீட்டிற்குள் இருந்து கொண்டு  என்று மனதிற்குள் வருத்தப்பட்டாள்.

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவளை அந்த வீட்டு வேலைக்காரி பொன்னி வந்து அழைத்தாள்.

அக்கா.... சின்னம்மாவும் பெரியம்மாவும் ஐயர் யா பார்க்க கோயில் போய் இருக்காங்க.

இப்ப பார்த்து சின்னம்மாவை தேடி ரெண்டு பேர் வந்துருக்காங்க.... நீங்க கொஞ்சம் வாங்க அக்கா என்று அழைத்தாள்.

சிவகாமி அம்மாவை தேடி யார் வந்து இருப்பார்கள் என்று நினைத்தவள் பொன்னியை போக சொல்லிவிட்டு ஹால்ற்கு சென்றார்.

அங்கு சோபாவில் ஒரு நடுத்தர வயது ஆணும், டீன் ஏஜ் வயதை தாண்டிய பெண்ணும் உட்கார்ந்து இருந்தனர்..

நடுத்தர வயது ஆண் தன் வயதை மறைப்பதற்காக ஜீன்ஸ்யும் டீ-ஷர்ட் அணிந்து இருந்தார்.

ஒரு காதில் மட்டும் சிறு கம்மல் போட்டு இருந்தார். ஆனால், அவரது வயதிற்கு சிறிதும் பொருந்தவில்லை.

பக்கத்தில் இருந்த பெண்ணோ ஏதோ திருவிழாவில் காணாமால் போனவள் போல திரு திரு வென்று முழித்து கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.

கீதா அவர்களை வரவேருக்கும் விதமாக வணக்கம் கூறினாள். ஆனால், அந்த நடுத்தர வயது ஆணோ அவளை மேல் இருந்து கீழ் வரை ஒரு மாதிரியாக சிரித்து கொண்டேயே பார்த்தான்.

அவனது பார்வையை உணர்ந்த கீதாவிற்கு ஏதோ சரி இல்லை என்பதை உணர்ந்தாள்.

நடுத்தர வயது ஆடவனோ கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கீதாவிடம் பேச ஆரம்பித்தான்.

ஹாய் மிஸ் கீதா... என் பெயர் கோபி... நான் சிவகாமி அக்காவோட சொந்த தம்பி என்று அழுத்தி கூறினான்.

பின் , பக்கத்தில் இருக்கும் பெண்ணை காட்டி இவள் என் அஸிஸிடண்ட் நித்யா.... நாங்க US லா இருந்து வரோம் என்று கூறினான்.

கீதா, என்னை பற்றி எப்படி உங்களுக்கு தெரியும் என்று கோபியை ஆராய்வதை போல கேட்டாள்.

உங்கள பற்றி எல்லாமேயே எனக்கு தெரியும்... எல்லாமேயே என்ற வார்த்தையை அழுத்தி கூறினான்.

கீதா, சந்தேகத்தோடு தன்னை பார்ப்பதை உணர்ந்தவன்... நாளைக்கு உங்களுக்கும் ரிஷிக்கும் நிச்சயம் பண்ண போறதா கூட சொன்னாங்க .... என்று கூறி சிரித்தான்.

சிவகாமி அம்மாள் இப்போது வரைக்கும் தனது திருமணத்திற்கு எந்த தடையும் சொல்லாமல் இருப்பதையே அவளுக்கு சந்தேகத்தை கொடுத்தது.

இப்பொழுது சிவகாமியின் தம்பி என்று வேற ஒருவன் வந்து இருக்கிறான்.... இவர்களிடம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.