(Reading time: 13 - 26 minutes)

அமேலியா - 58 - சிவாஜிதாசன்

Ameliya

வான் மேகங்கள் சோகத் தூறலை பொழிந்துகொண்டிருக்க, ஜான்சன் இறந்த செய்தி ஈராக் எங்கும் பரவி பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

நீண்ட நாட்கள் கழித்து மழைப்பொழிவை சந்திக்கும் மக்கள் மழையை ரசிக்கத் தயாராகயில்லை. சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. அமெரிக்கர்களின் கெடுபிடி அதிகமாக இருக்கும் என்பதால் வியாபாரிகளும் கடையை அடைத்திருந்தனர். பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட, நிலைமை புரியாத குழந்தைகள் சந்தோசத்தோடு தங்கள் வீடுகளை நோக்கி ஓடினர். தூரத்தில் வேலை செய்யும் கணவர்கள் பத்திரமாக வீடு வந்து சேர வேண்டும் என கலங்கிக்கொண்டிருந்தார்கள் மனைவிமார்கள்.

அருகே உள்ள மசூதியில் தொழுகைக்கு செல்லக் கூட மக்கள் பயந்து வீட்டிலேயே பிரார்த்தனை செய்தனர். 'சீக்கிரம் இந்த கொடிய சூழ்நிலை மாற வேண்டும். சந்தோசக் காற்றை தங்கள் சந்ததிகள் சுவாசித்து நிம்மதியாக வாழ வேண்டும்' என்பதே பெரும்பாலானவர்களின் பிரார்த்தனையாக இருந்தது.

இரண்டு ஜீப்புகளும் ஜீப்புகளின் இடையே ராணுவ வேன் ஒன்றும் சீரான வேகத்தில் முகாமை நோக்கி வந்துகொண்டிருந்தன.

சில வீட்டின் ஜன்னல்கள் திறக்கப்பட்டு பயம் கலந்த பார்வையை வாகனங்களின் மீது வீசினர். சில வீடுகளில் வேடிக்கை பார்த்தவர்களை வீட்டிலிருந்தவர்கள் தடுத்தனர்.

ர்னல் ஜார்ஜ் சோகம் கலந்த யோசனையோடு முகாமில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த குடிலில் அமர்ந்திருந்தார். யாரையும் அவர் சந்திக்க விரும்பவில்லை. ஜான்சனின் முடிவைக் கேட்டபின் தோற்றுப்போன விரக்தியில் வெறுமென அமர்ந்திருந்தார். ஜான்சனின் நிலையை எண்ணி கவலையும் கொண்டார்.

ஜான்சன் சிறந்த படைவீரன் மட்டுமில்லாமல் நல்ல மனம் கொண்டவன். நல்லவர்களின் ஆன்மாக்களை இறைவன் சீக்கிரமே களவாடி செல்கிறான். ஜார்ஜ் நீண்ட பெருமூச்சை விட்டெறிந்தார்.

"அடுத்து என்ன செய்யப் போறிங்க கர்னல்?" என்றது ஒரு குரல்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

குரல் வந்த திசையை திரும்பிப் பார்த்தார் ஜார்ஜ்.

அவர் நிலையைக் கண்டு விஷமப் புன்னகையை உதிர்த்தபடி நின்றார் கமெண்டர் வாட்சன்.

"வாங்க மிஸ்டர் வாட்சன், உட்காருங்க"

ஜார்ஜ் காட்டிய இருக்கையில் அமர்ந்த வாட்சன் கர்னலின் முகத்தையே சில நொடிகள் வெறித்தார்.

"நான் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதிங்க சார். நீங்க ஏன் முன்ன மாதிரி செயல்படமாட்டுறிங்க?"

வாட்சன் கேட்ட கேள்வி ஜார்ஜை எரிச்சல்படுத்தினாலும் அவர் பொறுமையாகவே பதில் கூறினார்.

"நம்ம எடுக்குற முடிவு எல்லா நேரத்திலயும் சரியா இருக்கும்னு சொல்ல முடியாது வாட்சன்"

வாட்சன் மெல்லமாய் சிரித்தார். "நிஜத்தை சொல்லட்டுமா கர்னல். நீங்க ரொம்ப சோர்ந்து போயிருக்கிங்க. அந்த காலத்து தீவிரவாதிகள் போலவே இப்போ இருக்குற தீவிரவாதிகளும் இருப்பாங்கன்னு நீங்க தப்பு கணக்கு போடுறிங்க"

வாட்சன் கூறுவதை கூர்மையாக கவனித்தார் ஜார்ஜ்.

"இப்போ இருக்குற தீவிரவாதிங்க ரொம்ப சரியா திட்டமிடுறாங்க. அந்த திட்டத்தை நிறைவேற்ற அவங்க அவசரப்படுறதில்லை. சொல்லப்போனா நாம எப்படி யோசிப்போம்னு கூட அவங்க தெரிஞ்சு வச்சிருக்காங்க"

"நீங்க பேசுறதுல உண்மையிருக்கலாம் வாட்சன். என்னைப் பொறுத்தவரை தீவிரவாதிகளை மூளை இல்லாத கொடூரமானவங்கன்னு தான் சொல்லுவேன். அவங்க சமயோஜிதமா செயல்படலாம், ஆனா அவங்க மரணம் ஒரு முட்டாள்தனத்தோட முடிவா தான் இருக்கும்"

"நீங்க ஜான்சனின் விஷயத்தை சரியா கையாளலன்னு தோணுது சார்"

கர்னலின் முகம் கோபத்தால் சிவந்தது. இருந்தும், அவர் அதை வெளிக்காட்டாமல் வாட்சனை பார்த்தார்.

"எதை வச்சு அப்படி சொல்லுறிங்க?"

"வேகம் கர்னல், தலைவனா இருக்கிறவன் வேகமா செயல்படணும், யோசிக்கிறது கம்மியா இருக்கணும், யோசிச்சது சரியா இருக்கணும்"

"உங்களுக்கு என்ன வயசு இருக்கும் வாட்சன்?"

வாட்சனின் முகத்தில் யோசனையின் ரேகை படர்ந்தது. "எதுக்கு கர்னல்?"

"பொதுவா பெண்கள் தான் வயசு விஷயத்துல பதட்டப்படுவாங்க. உங்களுக்கு என்ன வாட்சன்?" என கர்னல் எழுந்து அந்த சிறிய இடத்தை விட்டு வெளியே வந்தார். மழை இன்னும் தூறிக்கொண்டிருந்தது.

ராணுவ வீரர்கள் தங்கள் வேலைகளை கடமையே என செய்துகொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் எந்தவித சந்தோசமும் இல்லை. காலையில் பணி புரிந்தோர் இரவில் நண்பர்களோடு அரட்டை அடித்தபடியும் குளிர்காய்ந்தபடி தங்களுக்குப் பிடித்த பாடலை சத்தம் போட்டு பாடிக்கொண்டிருப்பார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.