(Reading time: 13 - 26 minutes)

"என்ன கொடுமையிது! ஒரு சராசரி ஆங்கிலம் கூடவா இந்நாட்டு சிறுவர்கள் கற்றுக்கொள்ளவில்லை?" என சலித்துக்கொண்டார் வாட்சன்.

"அந்த மொழிபெயர்ப்பாளனை கூப்பிடு" என்று ஆணையிட அடுத்த சில நொடிகளில் அவர் எதிர்பார்த்த மனிதன் வந்து சேர்ந்தான்.

வந்தவனை அகந்தையோடு பார்த்த வாட்சன், "உனது பெயர் என்ன?" என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

தனது பெயரையும் ஊரையும் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டான் வந்தவன். பிறகு அவனது விழிகள் ஹகீமை நோக்கிப் பாய்ந்தன. துவக்கத்திலேயே தீவிரவாதி விவகாரம் வேண்டாம் என ஜான்சனை அழைத்துச் செல்லும் முன் அரபியில் ஹகீமிடம் அன்று கூறியதை எண்ணிப் பார்த்தான்.

"ஏய், இதோ பாரு, இந்த பையனை ஏற்கனவே உனக்கு தெரியுமா?" வாட்சன் கேட்டார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"இரண்டு நாட்கள் முன்னாடி ராணுவ வீரர்கள் சிலரோடு இவனை பார்த்தேன். தீவிரவாதிகள் இருக்கும் இடம் தனக்கு தெரியும்னு சொன்னான்"

"எப்படி தெரியும்னு அவங்கிட்ட கேளு. அவங்க தீவிரவாதிகள்தான்னு எப்படி இவன் கண்டுபிடிச்சான். சீக்கிரம்! அவன்கிட்ட வளவளன்னு பேசிட்டு இருக்காத"

வாட்சன் கேட்ட விஷயத்தை ஹகீமிடம் கூறினான் மொழிபெயர்ப்பாளன்.

ஹகீம் வாட்சனையும் மொழிபெயர்ப்பாளனையும் மாறி மாறி பார்த்தான். அவன் இதயம் தாறுமாறாக துடித்தது.

"மார்க்கெட்ல வேலை செய்யும்போது சிலர் துப்பாக்கியோடு இருந்ததை பார்த்தேன். அதை தான் ராணுவத்தினர் கிட்ட சொன்னேன்"

மொழிப்பெயர்ப்பாளன் வாட்சனிடம் ஹகீம் கூறியதை சொன்னான்.

"இவன் வேலை செய்யுற மார்க்கெட்டுக்கும் அந்த மார்க்கெட்டுக்கும் பத்து கிலோமீட்டர் இருக்கு. அந்த மார்க்கெட்டுக்கு இவன் எதுக்கு போனான்?"

மொழிப்பெயர்ப்பாளன் ஹகீமிடம் விசாரித்தான்.

ஹகீமிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தன் பிடி இறுகுகிறது என புரிந்துகொண்டான்.

"அவன் ஏன் அமைதியா இருக்கான்? சீக்கிரம் பதில் சொல்ல சொல்லு"

"ஹகீம்! சீக்கிரம்! இவர் ரொம்ப கோபப்படுறார்"

"எங்க முதலாளி தான் போக சொன்னார். அவருக்கு அங்க இன்னொரு கடையிருக்கு"

"அந்த கடையோட பேரு"

ஹகீமிடம் தயக்கம்.

"கடையோட பேரு என்னன்னு கேட்டேன்"

ஹகீம் கடையின் பெயரை குறிப்பிட்டான்.

வேகமாய் கேள்வி கேட்டுக்கொண்டு வந்த வாட்சன் அமைதியானார்.

'நாம் சொன்ன பொய்களை அவன் நம்பிவிட்டானா இல்லையா' என ஹகீம் குழ்ப்பத்தோடு சிந்தித்தான்.

"அவரை வர சொல்லுங்க" என வாட்சன் ஆணையிட, மொழிபெயர்ப்பாளனும் ஹகீமும் திரும்பிப் பார்க்க, ஹகீமின் முதலாளி வந்து நின்றார்.

வாட்சன் தன் கைத்துப்பாக்கியில் குண்டுகளை போடத் துவங்கினார்.

தொடரும்...

Episode # 57

Episode # 59

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.