(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10 - அனிதா சங்கர்

Kathal kathalitha kathaliyai kathalikkum

ந்த இரவுக்கே உரித்தான சூழ்நிலையோடு அந்த அறைகாட்சி அளித்தது... புதுமையும் பழமையும் கலந்து அந்த அறை வடிவமைக்கப் பட்டிருந்தது...

அமைதியாக கட்டிலில் கண்களை மூடிப்படுத்திருந்தான் மதிவேந்தன்...

உள்ளே வந்தவள் கதவை தாழ்பாள் போட்டுவிட்டு அவனுக்கு அருகில் சென்றாள்... அவளது கொலுசு ஒலியிலே அவன் கண்விழித்திருந்தான்... அவள் கதவை தாழ்பாள் போடுவதற்குள் அவன் கட்டிலில் இருந்து  எழுந்து நின்றுக் கொண்டிருந்தான்...

அருகில் இருந்த  மேசையில் தான் கொண்டு வந்த பால்சொம்பை வைத்தவள் அங்கு நின்றிருந்த தனது மச்சானை ஒரே தாவலில் அணைத்திருந்தாள்...

அவளை அணைத்தவளது மனதில் அப்படி ஒரு நிம்மதி...அவளது காதல் ஜெய்த்துவிட்டது, அவள் அணைத்திருந்தவனே அவளிடம் கூறியிருந்தானே அவன் வேறுவொருவருக்கு  தான் சொந்தம் ஆகப்போவதாக கூறியிருந்தானே...

அந்த வார்த்தைகள்,அவளது காதல் நிறைவேறுமோ என்று தன் மனதில் எழுந்த எண்ணங்கள் எத்தனை நாள் அவளை பயம் கொள்ள வைத்திருந்தது...அந்த பயம் அவள் மனதை அழுத்தி அவளை தூங்க விடாமல் பல இரவுகளை கழிக்க வைத்துள்ளது...

அவை அனைத்தும் தன்னை விட்டு சென்றுவிட்டு தனது மனதில் இருந்த அழுத்தம் குறைந்தது போல் ஒரு எண்ணம் அவளுள் எழுந்தது....

அவனை அவள் மட்டுமே அணைத்திருந்தாள் அவனிடமிருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லை...

“மச்சான்...நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா...(ஐயையோ...ஏண்டி அவனே அமைதியா இருக்கான் நீ எதுக்குடி ஏத்திவிடுற...) என்னோட காதல் நிறைவேறிச்சு...இந்த உலகத்திலே நான் தான் இப்போ சந்தோசம இருக்கேன்...”என்று தேன்நிலா பேசிக்கொண்டு இருக்க  வேந்தனோ தனது கைகளை மூடி  தனது கோபத்தை அடக்கிக்கொண்டிருந்தான்...

அது தெரியாமல் தேன்நிலா பேசிக்கொண்டே போக  கோபத்தை அடக்கி வைத்திருந்தவன்...அவளை தன்னில் இருந்து பிரித்து அவளது கன்னங்களில் அறைந்திருந்தான்...(நம்ம கதையில இந்த சீன் இல்லாமால...ஹா...ஹா...)அவனது அந்த ஒரு அடியிலே கீழேவிழிந்திருந்தாள் தேன்நிலா...

தனது கோபத்தை குறைக்க முடியாதவன் அடுத்த அடுத்த  தனது குத்துக்களை  கட்டிலில் இருந்த தலையணைகளின் மீது காண்பித்துக் கொண்டிருந்தான் வேந்தன்...

அவனது அந்த அடிகளில் தேன்நிலா ஒரு நொடி மிரண்டு போய் இருந்தால்,அவன் அடித்த அந்த ஒரு அடியில் அவள் தனது சக்தியை முழுவதுமாக  இழந்திருந்தாள்...

கன்னம் வின்வின் என்று வலிக்க கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருக்க  தனது கோபத்தை அடக்க முடியமால் தலையணையை பதம் பார்த்துக் கொண்டிருந்த அவளது மச்சான் தான் அவளது கண்களில் பட்டான்...

தனது மச்சானுக்கு தன் மீது கோபம் இருக்கும் என்று அவளுக்கு  தெரியும்...ஆனால் அவள் இந்த அளவு எதிர்ப்பார்க்கவில்லை... அவன் அவளிடம் கோபப்படுள்ளான், ஆனால் இந்தளவு அவனது கோபத்தை இப்பொழுதுதான் பார்த்துள்ளாள்....

அவனை அவள் ஒரு வித பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்க தனது குத்துக்களை நிறுத்தி அந்த தலையணையை தூக்கிப் போட்டுவிட்டு அவளை நோக்கி சென்றான்...

தன்னை நோக்கி வரும் தனது மச்சானின் கண்களில் சிவப்பைப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் அப்படி ஒரு பயம் சூழ்ந்தது...இப்படி இருக்கும் வேந்தன் அவளுக்கு  மிகவும் புதியவன்...

அவளை நோக்கி வந்தவன் கீழே விழுந்துக் கிடந்தவளை தன்னை நோக்கி இழுத்தான்,

”உன்கிட்ட எத்தனை தடவ சொன்னேன்...என்னோட பேச்ச கேட்கவே இல்லைல...இப்ப உன்னால எல்லாருக்கும் கஷ்டம் தான்...என்ன சொன்ன சந்தோஷமா இருக்கியா...அதுவும் இந்த உலகத்திலே இல்ல...

உண்மைதான்டி இந்த உலகத்துல நீ மட்டும் தான் சந்தோஷமா  இருப்ப...ஏனா எங்க எல்லாரோட சந்தோசத்தையும் தான் பறிச்சிட்டியே...அப்பறம் எப்படி சந்தோஷமா இல்லமா இருப்ப...ஆமாம்டி உன்னோட காதல் தான் ஜெய்ச்சது...

ச்சீ.. உன்கிட்ட போய்.... அடுத்தவங்க மனசுல என்ன இருக்குன்னு உனக்கு என்னடி கவலை... நீ நினைச்சது நடந்தப் போதும்...உன் முகத்தை கூடப்பார்க்க புடிக்கல....”

என்றுக் கூறியவன் அவளை பிடித்திருந்த தனது கைகளை விட்டுவிட்டு பால்கனிக்கு சென்றுவிட்டான்.

அவன்  தனது கைகளை எடுத்துக்கொண்டதால் கீழே விழுந்தவள்...கண்கள் இருட்டிக்கொண்டு வந்ததால் அருகிலிருந்த சுவரில் கண்மூடி சாய்ந்துக் கொண்டால்... அப்படியே தூங்கியும் விட்டாள்...

அவள் கண்மூடி  தூங்கிக்கொண்டிருக்க கொஞ்ச நேரம் கழித்து உள்ளேவந்த வேந்தன் அவளை பார்க்க அவளது கோலம் அவனது மனதை வலிக்க வைத்தாலும் அவளாக தேடிக்கொண்டது என்று நினைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்து தூங்க ஆரம்பித்தான்...

அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது...ஆறு மணிக்கே எழுந்து பழக்கப்பட்டவள் என்பதால்,தூங்கா இரவாக நேற்றைய இரவு இருந்த போதிலும்...கண்கள் தூக்கத்தை புறம் தள்ளி எழுந்துக் கொண்டது...

மனதில் அமைதி இருந்தால் தானே நித்ராதேவி கண்களை தழுவுவதற்கு...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.