(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - எனதுயிரே - 05 - மஹா

enathuyire

வளின் கையில் மருதாணி வைத்து முடித்தவன் அவளுக்கு மதிய உணவை ஊட்டி விட்டு கொண்டிருந்தான். அவனை காதலுடன் பார்த்து கொண்டிருந்தவள் ,

"ஏன் மாமா, இத்தன நாள் இந்த காதல எங்க ஒளிச்சு வச்சிருந்த?", என்றாள்.

"ஏன் டி இப்டி கேக்குற?"

"இல்ல... நீ எப்பவுமே உன் காதல வெளிய காட்டுனதே இல்லையே அதான் கேட்டேன்"

"இது என்ன டி கேள்வி? வெளி காட்லனா உன் மேல எனக்கு காதல் இல்லனு அர்த்தமா?. உன் மேல எனக்கு எப்பவுமே காதல் இருந்து இருக்கு. ஆனா எல்லா நேரத்துலயும் அத நா வெளி காட்னது இல்ல ஏன்னா நமக்கு நல்லது கெட்டதுனு சொல்லி தர பெரியவங்க யாரும் இல்ல ஒரு கட்டத்துல உனக்கு நா எல்லாமுமா இருந்து உன்ன பாத்துக்க வேண்டிய கடமையும் எனக்கு இருந்துது. நமக்குள்ள ஒரு கட்டுப்பாடு வேணும்னு தான் நா உன்ன விட்டு கொஞ்சம் விலகி இருந்தேன். ரெண்டு பேருக்குமே அப்போ சின்ன வயசு உணர்ச்சி வேகத்துல எதாவது தப்பு நடந்து இருந்தா நாம ஒன்னு சேரணும்னு உண்மையா நெனச்சவங்கள நாம அசிங்க படுத்தின மாதிரி ஆயிடும் அதான் கொஞ்சம் கண்டிப்போட இருந்தேன். ஆனா அப்டி விலகி இருக்க நா எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?", என்றான் பாவமாக.

அவன் அருகில் நெருங்கி அமர்ந்தவள், "ஆனா இப்போ தான் பெரியவங்களாகிட்டோமே மாமா இப்போ என்ன தட?" என்றாள் அவனை சீண்டும் விதமாக.

"போச்சு டா... ஆரம்பிச்சிட்டியா??? இதோ பாரு என் கை காயுது நா போய் கழிவிட்டு வரேன்" என்று விட்டால் போதும் என்று ஓடி விட்டான்.

என்ன தான் இவள் அவனை கிண்டல் செய்தாலும் அவன் பேசிய வார்த்தைகளில் உள்ள ஆழத்தை உணர்த்தவளுக்கு அவன் மேல் எழும் மரியாதையையும் பன்மடங்காக பெருகும் காதலையும் தடுக்க முடியவில்லை.

"மாமா... மா... மா..."

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"ஏன் டி இப்டி கத்துற இங்க தான இருக்கேன்"

"இதோ பாத்தியா என் கைல மருதாணி எவ்ளோ செவந்து இருக்குனு. நான் உன்ன எவ்ளோ விரும்புறேன் பாத்தியா?..."

"ஹேய் லூசு பொண்டாட்டி... நீ என்ன எவ்ளோ விரும்புறேன்னு இத வச்சு தான் நா தெரிஞ்சிக்கணுமா?. நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டி எவ்ளோ செவக்குதுனு பாக்கலாம்னு."

அவன் பொண்டாட்டி என்று அழைத்ததிலேயே மனம் நெகிழ்த்தவள் வானில் பறந்து கொண்டிருந்தாள்.   

"ஹோய்... என்னடி ரொம்ப யோசிக்குற?" என்ற அன்புவின் குரலில் நடப்புக்கு வந்தவள்,

"மாமா... இன்னைக்கு சாயந்தரம் கோவிலுக்கு போய்ட்டு வரலாமா எங்கயாவது வெளில போய்ட்டு வரலாம்னு தோணுது"

"அதனால என்ன.. போய்ட்டு வரலாம் டா"

"ம்... சரி மாமா" என்று சிரித்து கொண்டே சிறு குழந்தை போல் துள்ளி ஓடியவளை கண்டு புன்னகைத்தான்.

மாலை நேரம் இருவரும் கோவிலை சுற்றி விட்டு மரத்தின் அடியில் அமர்ந்தனர்.

"தமிழ்... இந்த இடம் ஞாபகம் இருக்கா?"

"ஏன் இல்ல... இங்க தான நாம அன்னைக்கு பொங்கல் வாங்கி சாப்பிட்டோம்?", என்றாள் சட்டென.

தலையில் அடித்து கொண்டவன், "ஏன் டி அன்னைக்கு நாம என்ன நிலமைல இருந்தோம் ஆனா உனக்கு பொங்கல் வாங்கி சாப்பிட்டது தான் ஞாபகத்துல இருக்குல்ல?" என்றான் நக்கலாக.

"கிண்டல் பண்ணாத மாமா..." என்று சிணுங்கியவளின் கையை பிடித்து அழைத்து சென்றான்.

"எங்க மாமா கூட்டிட்டு போற?"

"அப்புறம் என்ன? வந்த வேலைய பாப்போம் வா"

"புரியலையே மாமா... எந்த வேல?"

"அங்க பாரு"

அவன் காட்டிய திசையை பார்த்தவள், "ஓஹ்... பிரசாதம் தரங்களா..." என்று சிறிது தூரம் ஓடியவள் எதோ ஞாபகம் வந்தவளாக திரும்பி அன்புவை பாக்க அவன் அவளை கிண்டலை பார்த்து சிரித்து கொண்டிருந்தான். அவனை நோக்கி ஓடி வந்தவள்,

"மாமா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்ன நீ?" என்றாள் கோவமாக.

"நா என்ன சொன்ன? நா ஒன்னும் சொல்லலையே"

"வந்த வேலைய பாக்கலாம்னு எதோ சொன்னியே..."

"அப்டியா சொன்ன?"

"மாமா..." என்று சினிங்கியவளை சமாதானம் செய்து பிரசாதம் வாங்கி கொண்டு மரத்தடியில் அமர்ந்தனர் இருவரும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.