குடித்து விட்டது வண்டி ஓட்டியதில் விபத்தில் சிக்கி ஒரு கை ஒரு கால் செயலிழந்து போனது இளமரனுக்கு. இருந்த பணத்தை வைத்து அவருக்கு வைத்தியம் பார்த்தாள் தமிழ். நிலத்தின் மீது கடன் வாங்கி விவசாயம் செய்து கொண்டிருந்த இளமாறனால் உடல் நல குறைவு காரணமாக அந்த தொகையை திரும்பி செலுத்த முடியாமல் போயிற்று. ஏற்கனவே அன்பு தன் தந்தையினால் உடைத்து போய் இருந்ததால் அவனிடமும் இதை பற்றி மறைத்து விட்டாள் தமிழ். அவளால் தனியாக போராடி அவர்களின் நிலையை மாற்ற முடியவில்லை. இதன் காரணமாக அந்த நிலத்தை விற்று கடனை அடைக்க முடிவெடுத்தனர் தந்தையும் மகளும்.
ஒருவாறு இந்த பிரச்சனை முடிந்து போக அடுத்து தங்கள் அன்றாட தேவைக்கு வேலை செல்ல ஆரம்பித்திருந்தாள் தமிழ். மிகவும் செல்லமாக வளந்த அவளின் வாழ்க்கை இப்பொது தலை கீழாய் மாறி இருந்தது. இந்த சிறு வயதில் வீட்டில் அணைத்து வேலையையும் முடித்து விட்டு தனது தந்தையையும் பார்த்து கொண்டு கூலி வேலைக்கும் சென்று வந்தாள். இதன் இடையில் தனது அன்பு மாமாவை அவ்வப்போது சந்தித்து அவனுக்கு ஆறுதலாய் பேசிவிட்டு வருவாள். இப்படி பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தவள் தனது அன்பு மாமாவிற்காக மட்டுமே ஜீவனை சுமந்து கொண்டிருந்தாள். அவனது நினைப்பே அவளின் காயங்களுக்கு மருந்தானது. இப்படியாய் நாட்கள் நகர தனது தோழி ஒருத்தியின் மூலமாக தன் மாமா கண்ணனுக்கும் அன்பு மாமாவிற்கும் இடையே நடந்த சண்டையை அறிந்து கொண்டாள். பிறகு அன்புவை பல இடங்களில் தேடியவள் கடைசியில் அவனை கோவிலில் சந்தித்த பிறகே அவளுக்கு நிம்மதி ஆயிற்று.
கோவிலில் கண்ட அவனை ஒருவழியாய் சமாளித்து தனது வீட்டிற்கு அழைத்து சென்றாள். அங்கு அவனுக்கு உணவு பரிமாறியவள் தனது தந்தையிடம் அனைத்தையும் கூறி குறை பட்டுக்கொண்டாள் அவள். இளமாரனுக்கு தனது தங்கை மகன் அன்புவின் மேல் பாசம் அதிகம். ஏற்கனவே தன் மகளுக்கு கஷ்டம் கொடுத்துவிட்டோம் என்ற அவரது உணர்வு அவரை கொள்ள இன்று அன்புவின் நிலை கண்ட அவர் அவனுக்கு உறுதுணையாக இருக்க முடியவில்லையே என்று தன்னையே நொந்து கொண்டார். ஆனால், இத்தனை நாள் ஜீவனே இல்லாமல் இருந்த தனது மகள் அன்புவை கண்டதும் முகம் மலர்ந்து காணப்படுவது அவருக்கு புது நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் தந்தது. என்றென்றைக்கும் அவர்கள் இருவரும் இதே சந்தோஷத்தோடு ஒன்றாக இருக்க வேண்டும் என்று மனதிற்குள் வேண்டி கொண்டார்.
எவ்வளவு சமாதானம் செய்தும் அன்பு தன் மாமன் வீட்டில் தங்க சம்மதிக்கவில்லை. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராய்,
"அன்பு... உனக்கு இங்க இருக்க விருப்பம் இல்லனா பரவால்ல... உங்க அம்மாவுக்கு சேர வேண்டிய இடம் நம்ம மோட்டார் கொட்டாய்க்கு பக்கத்துல தான் இருக்கு அங்கு தங்கிக்கோ. அது ஓர் அளவுக்கு வசதியான வீடு தான்" என்றார் இளமாறன்.
இந்த யோசனை அன்பிவிற்கும் சரி என்று பட இதற்கு அவன் ஒப்பு கொண்டான்.
ஆனால் இந்த யோசனை தமிழுக்கு தான் கடுப்பாக இருந்தது. "என்ன பையன் இவன்... சொந்த மாமா பொண்ணு கூட தங்குற வாய்ப்பு கெடைச்சும் வேணான்னு சொல்றானே... இவனலா கட்டிக்கிட்டு என்ன பண்ண போறேனோ" என்று மனதிற்குள் புலம்பினாள்.
"தமிழ்... அன்புவை அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போய் அவனுக்கு வேண்டிய ஏற்ப்பாடுல செஞ்சு குடுத்துட்டு வா", இளமாறன்.
"சரி பா..." என்று உற்சாகமாய் கூறியவள் அவனை அழைத்து கொண்டு அந்த வீடு நோக்கி நடந்தாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
"மாமா... சாப்பாடு ரெடி... சப்புடலாமா???" என்ற தமிழின் கேள்வியில் திடுக்கிட்டவன் நடப்புக்கு வந்தவனாய்,
"ம்...", என்றான்.
பிறகு இரவு உணவை முடித்தவர்கள் சற்று நேரம் பேசி கொண்டிருந்தனர்.
"அய்யயோ..."
"என்ன டி என்ன ஆச்சு"
"மாடில காய போட்ட துணிய எடுக்கவே மறந்துட்டேன். நா போய் எடுத்துட்டு வரேன்", என்று கூறி எழுந்தவளை பார்த்து
"இரு நானும் உன்கூட வரேன்" என்று அவளின் பின்னே மாடிக்கு சென்றான்.
குளிரான காற்று உடலை வருடி செல்ல இருவரும் நடுங்கினர். மேலே வானத்தில் அழகாய் ஜொலித்துக்கொண்டிருக்கும் நிலவை ரசித்து விட்டு திரும்பியவன் குளிரில் நடுங்கி கொண்டு துணி எடுத்துக்கொண்டிருப்பவளை கண்டான். சட்டென அவளருகில் சென்றவன் அவளை பின்னால் இருந்து இருக்க கட்டி அணைத்து கொண்டு ,
"இப்போ குளுருதா?" என்று கிசுகிசுத்தான்.
அவனின் குரலும் அணைப்பும் அவளை ஏதோ செய்ய பேச மறந்தவள் இல்லை என தலை அசைத்தாள்.
மெல்ல அவளை தன் புறம் திருப்பியவன் அவளை நெருங்க வெட்கத்தில் அவள் முகம் சிவந்தது. இன்னும் அவளை அவன் நெருங்க பெண்ணவள் இதயம் இன்னும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. துணிகளை எடுத்து கொண்டு கீழே வீட்டை நோக்கி ஓடியவளை பின்னாடியே துரத்தி சென்ற அவன் படுக்கை அறை அருகே மடக்கி பிடித்தான். மெல்ல அவளின் இடையை பற்றி தன்னுடன் இறுக்கியவன் அவளின் செவ்விதழை சிறை பிடித்தான்.
ஒரு சின்ன பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டிடவா
ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டி பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் என்னை தொட்டு தீண்டுவதா
மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்
மீனம்மா மழை உன்னை நனைத்தாள் இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்
அம்மம்மா வெயில் உன்னை அணைத்தாள் இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்...
தொடரும்
{kunena_discuss:1228}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.