(Reading time: 11 - 22 minutes)

பிரசாதத்தை சுவைத்து உண்டுகொண்டிருந்தவளிடம் "ஏன் தமிழ்... அப்டி என்ன தான் இருக்கு இந்த பிரசாதத்துல ஏன் இவ்ளோ பிடிச்சி இருக்கு உனக்கு?", என்றான்

"அதுலாம் உனக்கு புரியாது மாமா... அது ஒரு தனி டேஸ்ட்"

"அதுசரி..." என்றான் புன்னகைத்தவாறு.

சற்று நேரம் அங்கேயே அமர்ந்து பேசியவர்கள் பிறகு வீட்டிற்கு கிளம்பினர்.

வீடு வந்த இருவரும் வாசலில் அமர்ந்து உரையாடி கொண்டு இருந்த ஈஸ்வரி, பூங்கொடி இருவருக்கும் பிரசாதத்தை வழங்கி விட்டு மேலே சென்றனர். தமிழ் இரவு உணவு தயார் செய்து கொண்டிருந்த நேரம் அன்பு பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தான்.

இவர்களின் சொந்த ஊர் திண்டிவனம் அருகில் ஒரு அழகிய கிராமம். தமிழின் தந்தை இளமாறனும் அன்புவின் அம்மா தனலக்ஷ்மியும் உடன் பிறந்தவர்கள். அதே ஊரில் இருந்த அன்புவின் தந்தை கண்ணன் தனலட்சுமி மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்ய விரும்புவதாக தனலட்சுமி வீட்டில் கூறினார். வசதியான வீட்டில் சம்பந்தம் செய்து கொள்ள முதலில் தயங்கிய தனலட்சுமி வீட்டினர் பிறகு ஒத்துக்கொண்டனர். அனால் இளமாரனுக்கு மட்டும் இந்த கல்யாணத்தில் முதல் இருந்தே விருப்பம் இல்லை. வசதியான குடும்பத்தில் தனது தங்கையை எப்படி நடத்துவார்களோ என்ற பயம் அவருள் இருந்தது அதனாலே அவர் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று தன் பெற்றோரிடம் கூறினார். பிறகு கண்ணன் எப்படியோ சமாதானம் செய்து தனலட்சுமியை கரம் பிடித்தார். தங்கள் திருமணத்திற்கு தடையாக இருந்த இளமாறனை ஏனோ கண்ணனுக்கு பிடிக்காமலே போய் விட்டது.

கால சக்கரம் வேகமாக சுழல, இளமாரனுக்கும் அவரது அத்தை மகள் சுமதிக்கும் திருமணம் முடிந்து இருந்தது. அன்பு பிறந்து இரண்டு வருடம் கழித்து தமிழ் பிறந்தாள். இவர்கள் வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருந்த நேரம் திடிரென்று தமிழின் தாய் உடல் நலம் குன்றி இருந்தார். தமிழுக்கு 5 வயது இருக்கும் போது அவர் இறந்து விட்டார். தமிழ் மீது இருந்த அதீத அன்பின் காரணமாக இளமாறன் மறுமணம் செய்யவில்லை. எனினும் மனைவி இறந்த சோகத்தில் அவர் குடி பழக்கத்தை கற்று கொண்டார்.

எதுவும் அறியாத வயதில் தாயை இழந்த தமிழின் மீது எப்போதும் அதிக பாசம் காட்டுவர் தனலட்சுமி.  அவ்வ போது அவளுக்கு பிடித்த உணவுகளை சமைத்து அவளை வீட்டிற்கு அழைத்து வர சொல்லி அவளுக்கு ஊட்டி விடுவார். தமிழுக்கும் அத்தை என்றால் கொள்ளை பிரியம். எப்போதும் அத்தை அத்தை என்று அவரையே சுத்தி வருவாள். அதுவும் அவளின் அன்பு மாமா என்றால் இன்னும் பிரியம். எப்போதும் அவனோடு தான் விளையாடி கொண்டிருப்பாள். என்ன தான் கண்ணனுக்கு தமிழை பிடிக்கவில்லை என்றாலும் அதை அவர் வெளிப்படையாக காட்டி கொள்ள மாட்டார். தமிழ் தான் தனக்கு மருமகளாக வர வேண்டும் என்று தனலக்ஷ்மிக்கு மிகுந்த ஆசை அதை பல முறை அன்புவிடம் மறைமுகமாக கூறி இருக்கிறார் அவர். அன்புவிற்கும் தன் மாமன் மகள் மேல் இஷ்டம் தான். இப்படியாய் நாட்கள் அழகாய் நகர விதி மறுபடியும் விளையாட ஆரம்பித்தது. அன்பு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது மாடியில் இருந்து தவறி கிழே விழுந்த தனலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்து போனார். மனைவி இறந்த சில மாதங்களிலே கண்ணனுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் மூலம் குடி பழக்கத்தையும் கற்று கொண்டார். மெல்ல மெல்ல அவர் வீட்டிற்கு வரும் நாட்கள் குறைந்தது. அந்த பெண்ணின் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தார். வீட்டில் வேலை செய்யும் வேலை ஆட்களின் பாதுகாப்பில் வளந்தான் அன்பு. முதலில் தாயை இழந்த அவன் தற்போது தந்தையின் அன்பையும் இழந்து வாடினான். தந்தையின் இந்த தீய பழக்கத்தை பற்றி முழுமையாக அவன் அறிந்திருக்கவில்லை. எனினும், தந்தை தன்னை ஏனோ ஒதுக்குகிறார் என்று மட்டும் அவனுக்கு புரிந்தது. இயல்பிலே நன்றாக படிக்கும் அன்பு அந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்விலும் நன்றாக எழுதி இருந்தான்.

அடுத்த சில நாட்களிலேயே அந்த பெண் சுந்தரியை மனம் முடித்து வீட்டுக்கே அழைத்து வந்தார் கண்ணன். தனது தாயின் இடத்தில் வேறொரு பெண்ணை அவனால் மறந்தும் நினைத்து பார்க்க முடியவில்லை. இதை பற்றி அவன் தந்தை இடம் நேராய் பேசும் வாய்ப்பும் அவனுக்கு கிடைக்கவில்லை. நாட்கள் செல்ல, சித்தி என்ற பெயரில் அவள் செய்த கொடுமைகள் தாங்க முடியாமல் ஒரு நாள் தன் தந்தை இடம் சென்று கூறியே விட்டான். ஆயினும் அதனால் எந்த நற்பயனும் இல்லை. தனது நடிப்பை காட்டி அன்புவின் பக்கம் தான் தவறு இருப்பதாய் மாற்றிவிட்டால் அவள். அவளின் கண்களில் போலியாய் வழிந்த கண்ணீரை உண்மை என்று நம்பி அன்புவை அடித்தே விட்டார் கண்ணன். இதை சற்றும் எதிர்பாராத அன்பு தன் தந்தை மேல் இருந்த கடைசி துளி நம்பிக்கையையும் இழந்தான். இனி இங்கு இருக்க கூடாது என்று முடிவெடுத்தவன் எங்கு செல்வதென்று புரியாமல் கோவிலில் சென்று அமர்ந்து கொண்டான். இங்கு இவனது நிலையோ இப்படியாய் இருங்க தமிழின் நிலையோ இதை விட மோசமாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.