(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - எனதுயிரே - 06 - மஹா

enathuyire

காலை கண் விழித்த போது அவளவன் அவளை இருக்க அணைத்து கொண்டு உறங்கி கொண்டிருந்தான். நேற்று இரவு நடந்ததை மனதிற்குள் ஓட்டி பார்த்தாள்.

மெல்ல அவளின் இதழை சிறை பிடித்தவன் அவளை அதிகம் இம்சிக்காது விடுவித்தான். இந்த திடீர் தாக்குதலை எதிர்பாக்காதவள் வெட்கத்தில் தலை குனிந்தாள்.

அவளின் முகத்தை கையில் ஏந்தியவன், "ஹே வாயாடி என்ன அமைதியா இருக்க?", என்றான்.

பதில் ஏதும் கூறாமல் ஒன்றும் இல்லை என்று தலையை மட்டும் அசைத்தாள்.

"என்ன பாரு டி"

.....

"ஹோய்... பாருனு சொல்றேன்ல..."

மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவனின் கண்ணை நேரடியாய் பார்க்க முடியாமல் தலை தாழ்த்தி கொண்டாள் நாணத்தில்.

"என் தமிழுக்கு வெட்கப்படக்கூட தெரியுமா???"

"மாமா..." என்று சினிங்கியவள் அவளின் இரு கைகளாலும் தனது முகத்தை மூடிக்கொண்டாள் அவளின் இந்த செயலை கண்டு சிரித்தவன் அவளை இருக்க அணைத்து அவளின் கன்னத்தில் இதழ் பதித்தான்.

"மாமா..."

"ம்..."

"லவ் யு சொல்லு"

"லவ் யு டி" என்று அவளை தன்னோடு இறுக்க அணைத்து கொண்டான். அவனின் மார்பின் கதகதப்பில் உறங்கி போனாள் பெண்ணவள். அவளின் கூந்தலை வருடியவன் அவளையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான். எத்தனை எத்தனை கஷ்டத்தை எனக்காக தாங்கி இருக்கிறாள் என்று நினைக்கும் போதே அவனின் கண் கலங்கியது. விவரம் தெரியாத வயதில் இருந்தே என்னை உயிராய் நினைத்து மனதில் என்னையே சுமந்து கொண்டிருக்கிறாள் இவள் அன்பை பெற என்ன தவம் செய்தேனோ. வாழ்வில் பல துன்பத்தை சந்தித்த இவளுக்கு இனிமேல் சந்தோசம் மட்டுமே நிலையாக இருக்க வேண்டும். வாழ்வின் அத்தனை சந்தோஷத்தையும் அவளுக்கு நான் தர வேண்டும். இறைவா என் தமிழ் எப்போதும் இதே நிம்மதியோடும் சந்தோஷத்தோடும் இருக்க வேண்டும் என்று மனமார வேண்டியவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு உறங்கினான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

நேற்றைய நினைவில் இருந்து வெளி வந்தவள் தனது இடையை சுற்றி இருக்கும் அன்புவின் கையை மெல்ல எடுத்துவிட்டு தனது அன்றாட பணியை செய்ய எழுந்து சென்றாள்.

கையில் காபியோடு வந்தவள் அவனருகே வந்து அமர்ந்து அவனை எழுப்பினாள்.

"இன்னும் டூ மினிட்ஸ் டி" என்று கூறியவன் அவளின் இடையை கட்டிக்கொண்டு தூக்கத்தை தொடர்ந்தான். அவனை ஆசையோடு பார்த்தவள் அவனது கேசத்தை வருடிக்கொண்டிருந்தாள்.

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு

என் உள் நெஞ்சம் சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று

ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்?

எந்தன் பெண்மை பூ பூக்கவே

நான் பிறகும் முன்னே அட

நீ பிறந்ததேன் ?

நான் பிறகும் பொது நீ

உந்தன் கையில் என்னை ஏந்த தான்...

"ராம்.... ராம்..... இன்னும் என்ன பண்ற? டைம் ஆச்சு...", என்று  ராமை தேடியவாறு அவர்களின் அறைக்குள் நுழைந்த சீதாவை பின்னாலிருந்து கட்டி அணைத்து அவளின் கன்னத்தில் இதழ் பதித்து விடுவித்தான் ராம்.

அவனின் இச்செயலை ரசித்தவாறே, "என்ன அதிசயம் இன்னைக்கு சார் சிக்ரமவே கெளம்பிடீங்க போல?",என்று அவனின் சட்டையின் பட்டன்-ஐ போட்டுவிட்டவாறு கேட்டால் சீதா.

"இன்னைக்கு ஒரு மீட்டிங் இருக்கு டா அதான்", ராம்.

"ஓஹ் சரி ராம். சாப்பாடு எடுத்து வைக்குறேன் நீ வா", என்று கிச்சனுக்கு சென்றாள்.

அவனது பையை எடுத்து வந்து சோபாவில் வைத்து விட்டு, சாப்பிடுவதற்காக அமர்ந்தான்.

அவனுக்கான காலை உணவை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள் சீதா.

"அம்மா எங்க அம்மு?"

"அத்த பின்னாடி தோட்டத்துல செடிக்கு தண்ணி விடறாங்க"

"சரி டா. கயல் கெளம்பிட்டாளா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.