(Reading time: 15 - 29 minutes)

பெற்றோர்களாக அவர்களது நிலை வேந்தனின் பெற்றோர்களுக்கு புரியதான் செய்தது...ஆனால் என்னவென்று ஆறுதல் கூறுவார்கள்... அங்கு  அமைதியே நிலவியது...

 அவளது கன்னத்தை வருடிக்கொடுத்த தேவி,”தேனும்மா... நம்ப வீட்டுக்கே வந்துடுறீயா...நீ இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டாம்டா...” என்று  கேட்க

“அம்மா எனக்கு இங்க கஷ்டமெல்லாம் இல்லமா...மச்சானுக்கு தான் என் மேல  கோபம் கொஞ்சம் இருக்கு... அதுவும் கொஞ்ச நாள்ல சரியாகிடும்... அப்பா  உங்களுக்கும் தான்... உங்க பொண்ணுக்கு எந்த கஷ்டமும் இல்லப்பா... நீங்க கவலைபடாம போங்க கண்டிப்பா மச்சானோட நான் வீட்டுக்கு வருவேன் பாருங்க...”என்று தனது தாய் தந்தைக்கு ஆறுதல் சொன்னாள் தேன்நிலா.

அவளிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு  அவர்கள் கிளம்ப கௌதமிடம் இங்கு நடந்தவைகளை  கூற வேண்டாம் என்று கூறினால் தேன்நிலா...

தன் மகனை பற்றி  குணம் தெரிந்த பெற்றோர்களுக்கும் அதுவே சரியெனப்பட்டது...

இல்லையென்றால் சொந்தங்கள் சேர இருக்கும் வாய்ப்புகளும் குறைந்து போயினால்...

கனத்த மனதுடன் சென்றனர் தேன்நிலாவின்  பெற்றோர்... வேந்தன் தான் அடித்ததையும் பொருட்படுத்தாது கதிரேசனிடம் அவ்வாறு பேசிசென்றது அன்னத்தை மிகவும் பாதித்தது....

வேந்தன் இவ்வளவு கோபத்தை அவனது மாமாவின் மேல் இப்படி கோபம் வைத்திருப்பான் என்று அன்னம் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை...

இங்கு நடக்கும் அனைத்துக்கும்  தான் தான்கரணம் என்று தோன்றிய குற்றஉணர்வு  அன்னத்தை தனிமையை  நாட  செய்தது...

தனது பெற்றோர்கள் போகும் வரை பொறுமை காத்த தேன்நிலா  அவர்களது தலை மறைந்த உடன் புயலென மாடிப்படிகளை கடந்து வேந்தனின் அறைக்கு சென்றாள்...

அவனது அறையில் வேந்தன் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்க உள்ளே சென்றவள் அந்த தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அவனது முன் போய் நின்றாள்...

வேந்தன் என்ன என்பது போல் தேன்நிலாவைப் பார்க்க,”எதுக்கு மச்சான் அப்பாக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டீங்க...அப்பா பாவம்  மச்சான்... என்னோட மேல தான உங்களுக்கு கோபம்...இனிமே என்கிட்ட காட்டுங்க மச்சான்... அப்பாகிட்ட காட்டாதீங்க...”என்று அவள் கூற

அவளை ஏளனமாக பார்த்தவன்...,” இப்படி நடந்துக்க கூடாதுனு தான் உன்கிட்ட ஆரம்பத்திலேருந்து சொன்னேன் நான் உனக்கு வேண்டாம்னு நீ கேட்டியா...இப்ப அனுபவச்சி தான் ஆகனும்...எல்லாம் நீயா இழுத்துவிட்டுகிட்டது...”என்று அவன் சொல்ல

“என்னை மட்டும் சொல்லதீங்க மச்சான்  எனக்கு தான் நீங்க இப்படி நடந்துபீங்கனு தெரியாது உங்களுக்கு  தெரியும் தானே...இந்த கல்யாணம் நடந்த இப்படி நீங்க நடந்துபீங்கனு உங்களுக்கு தெரியும் தானே...அப்பறம் எதுக்கு தாத்தா கேட்டப்ப ஒத்துக்கிட்டீங்க...”என்று தேன்நிலா வேந்தனை கேட்க

“என்னோட அம்மா,அப்பா சொன்னாக் கூட உன்னை கல்யாணம் பண்ண கூடாதுனு தான்டி இருந்தேன்... அதான் உங்க குடும்பமே நடிச்சி ஒருதவங்கள பொம்மையா வச்சி இருக்கீங்களே...என்ன அப்படி குழப்பமா பாக்குற என்னோட அத்தைய தான் சொல்லுறேன்...

அவங்க சொன்னதால தான் உன்ன கல்யாணம் பண்ணேன்... நான் மட்டும் இல்லை இந்த வீட்டுல இருக்குறவங்க எல்லாரும் அவங்க வந்து பேசுனதாலதான் உன்னோட என் கல்யாணம் நடக்க சம்மதிச்சாங்க... இல்லைனா... உன்னையெல்லாம்... நான்...” என்று ஏளனமாக  கூறியவன்  அறையை விட்டு வெளியேறினான்...

வேந்தன் கூறிய அனைத்தும் உண்மை அன்று அவனும் அவனது குடும்பமும் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டதுக்கு காரணம் அன்னம் மட்டும் தான்... அவர்தான் தன் மகளுக்காக அனைவரிடமும் சம்மதம் வாங்கினார்...

அவனது இந்த வார்த்தைகளில் தேன்நிலாவிடமிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விட அவன் நேற்று பேசிய வார்த்தைகளுக்கு இன்று புது புது அர்த்தங்கள் அவளுக்கு தோன்றியது...

அவன் மனதில் தான் ஒரு ஓரத்தில் இருந்ததால் தான் திருமணத்திற்கு சம்மதித்தான் அவனுக்கு வேல்விழி மீது எந்த ஈர்ப்பும் இல்லை என்று  நினைதவளுக்கு 

அவன்  தனது அன்னையின் சொல்லுக்காக மட்டுமே தன்னை  திருமணம் செய்துள்ளான் என்று அவள் மனது உணர்ந்த  அடுத்த நொடி  அவள் செய்த அனைத்து செயல்களும் அவளுக்கு தப்பாக தோன்றியது...

நேற்று அவன் சொன்ன உன்னோட காதல் மட்டும் தான் ஜெயிச்சிற்கு என்ற வார்த்தைகள்... இன்று அவனுக்கு வேல்விழி மீது காதல் இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை தேன்நிலாவிடம் விதைத்தது...

இன்று காலையிலிருந்து நடந்தவைகளை அசைப்போட்டவளுக்கு,”நீ மட்டும் தான் சந்தோஷமா இருக்க” என்ற அவனது வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிவது போல் இருந்தது....இந்த திருமணத்தால் அவள் கூட இன்று  சந்தோசமாக இல்லையே...

யோசித்து யோசித்து கடைசியில் அவளுக்கு கிடைத்த  பதில்

அவனுடனான தனது திருமணமே தவறு என்பது...

Kathal kathalitha kathaliyai kathalikkum

காதலி காதலிக்க படுவாளா...

Episode # 09

Episode # 11

Go to Kathal kathalitha kathaliyai kathalikkum story main page

{kunena_discuss:1175}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.