(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11 - அனிதா சங்கர்

Kathal kathalitha kathaliyai kathalikkum

ந்தவீடு பழைய கால முற்றம் வைத்து மாடியுடன் இருக்குமாறுக் கட்டப்பட்டிருந்த வீடு...

வேந்தனின் அறை  மாடியில் தான் இருந்தது...அவர்கள் அறைக்கு அடுத்து கொஞ்சம் தூரத்தில் வெளியில் அமர்ந்து வேடிக்கைப் பார்க்க எதுவாய் முல்லைகொடிகளின் பந்தலின் கீழே உட்கார ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் அங்கு செய்து இருந்தனர்...

அந்த இடத்தின் கீழே அமர்ந்தாள் அந்த முல்லை கொடியின் வசமும்,மாலை வேலையில் அடிக்கும் காற்றும் மனதில் எவ்வளவு வேதனை இருந்தாலும் அதனை மறந்து நம்மை அமைதியாக வைத்திருக்கும்... அதன் அடியில் தான் அமர்ந்திருந்தாள் தேன்நிலா...

அவளுக்கும் வேந்தனுக்கும் திருமணமாகி மூன்று மாதங்களை நெருங்கிக் கொண்டிருந்தது...

இந்த மூன்று மாதங்களில் நடந்தவைகளை அசைபோட ஆரம்பித்திருந்தால் தேன்நிலா...

திருமணத்தன்று நடந்தவைகளும் அதன் பிறகு நடந்தவைகளும் இந்த திருமணம் தவறான ஒன்று என்ற எண்ணத்தை அவளது மனதில் விதைத்திருந்தது... அதுவும் அன்று வேந்தன் அன்னதிற்காக தான் தன்னை திருமணம் செய்துக்கொண்டேன் என்று கூறிய பின் அந்த எண்ணம் அவளது மனதில் இன்னும் வலுவாய் இறங்கி விட்டது...

இதை பற்றி தனது தாயிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தாள்...

அன்று  அவளது மறுவீடிற்கு அழைத்து சென்ற நாளிலிருந்து அடுத்து ஒரு வாரம் வரை அவள் அந்த வீட்டில் ஒரு தனி தீவாய் தான்  இருந்தாள்...

ஒருவாரம் கடந்த நிலையில் மல்லி  அவளிடம் இரண்டு மூன்று வார்த்தைகள் பேச ஆரம்பித்தார்...

அதன் பிறகு அவளை சமையல் வேளைகளில் உதவிக்காக சேர்த்துக் கொண்டதில் ஆரம்பித்து சின்ன சின்ன வேலைகளை செய்ய சொல்லி அவளிடம் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தார்...

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டுடன் ஒன்ற ஆரம்பித்துவிட்டாள்...

விடியற்காலையில்  சீக்கிரம் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடவில்லை என்பதில் ஆரம்பித்து இப்படியே சாப்பாட்டு சாப்பிடவ உன்னோட வயசுலயெல்லாம் நான் எப்படி சாப்பிடுவேன் தெரியுமா...என்பது வரை திட்டியே அவரது அக்கறையையும்,கோபத்தையும்  ஒரே மாதிரியே காட்டுவார்  வேந்தனின் பாட்டி

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சந்தானபாண்டியனும் அவளிடம்  நன்கு பேச ஆரம்பித்திருந்தார்...

ஆனால் வேந்தனுக்கும் அவளுக்கும் இடையேயான இடைவெளி அப்படியே தான் இருந்தது... நீ தான் அவனது தேவைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று  மல்லி திட்டவட்டமாக சொல்லிவிட இப்பொழுது அவள் தான் அவனது தேவைகளை பார்த்துக் கொள்கிறாள்...

மல்லி தனது மகனிடமும் இதுபற்றி பேசிவிட அவள் செய்வதை வேறு வழியில்லாமல் அவனும் ஏற்றுக்கொண்டான்...

அன்று வந்து சென்றவர்கள் தான் அதற்கு பிறகு இங்கு அவர்கள் வரவில்லை... தேன்நிலா தான் வரம் ஒரு முறை சென்று பார்த்து வருகிறாள்...

அவளது பெற்றோர்கள் கௌதமிடம் எதுவும் கூறாமல் இருந்தனர்...அதனால் அவனுக்கு வேந்தன் நடந்துக்கொண்டது,தேன்நிலாவை அடித்தது எதுவும் தெரியவில்லை...

அதற்கே அவன் தன் தங்கையிடம் ஆயிரம் முறைக்கு மேல் அந்த வீட்டில் அவளது நலனை பற்றி விசாரித்திருப்பான்...

அவனை எப்படியோ தேன்நிலா சமாளித்துக் கொண்டிருக்கிறாள்...சிலநேரங்களில் எரிச்சல் வந்தாலும் அண்ணனாய் அவனது நிலை அவளுக்கு புரியத்தான் செய்தது...

அன்னம் தினமும் இரு முறை வந்து தனது மகளை பார்த்து  செல்வார்... சந்தானபாண்டியன் கூட எண்ணினார் அன்னம் கடந்து போன வருடங்களில் இப்படி வீட்டிற்கு வந்ததில்லை என்று... ஒரே காம்பவுண்டுக்குள் இருந்தும் கூட...

தனது நினைவுகளை அசைப்போட்டு கொண்டிருந்தவளை கலைத்தது கீழே இருந்து வந்த  மரகதப் பாட்டியின் குரல்...

“தேனு...தேனு..அடியேய்..பொழுது போன நேரத்துல விளக்கு ஏத்தாம என்ன பண்ற...மகாராணிய ரூமுக்கு வந்து கூப்பிடுற அளவுக்கு இந்த கிழவிக்கு தெம்பு  இல்ல...சீக்கிரம் வாடி...” என்று கீழ் படிகளிலிருந்து கத்திக் கொண்டிருந்தார்...

அவரது குரலில் கலைந்தவள் அறைக்கு சென்று முகத்தை கழுவி தன்னை சீர்படுத்திக்கொண்டவள், விளக்கை ஏற்றி  வணங்கிவிட்டு தனது பாட்டியிடம் சென்றாள்...

“ஆயா உங்களுக்கு காபி போடவா...”என்று கேட்க

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "என் வாழ்வே உன்னோடு தான்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

பக்கத்து வீட்டு மயிலிடம் பேசிக் கொண்டிருந்தவர்,”போடு..போடு என் மருமக இருந்தா இந்நேரத்துக்கு கொண்டு வந்து கொடுத்து இருப்பா...காபி வேண்டாம் டீ போடு...” என்று அவளிடம் ஒரு முறை குறைப்பட்டு கொண்டு கூறினார் மரகதம்...

மல்லியும்,சந்தானபாண்டியனும் ஒரு உறவினர் திருமணத்திற்காக தஞ்சை வரை சென்றுள்ளனர்...அதனால் தேன்நிலா தான் அனைத்தையும் செய்துக் கொண்டிருந்தாள்...

அவர் அப்படி பேசினாலும் தேன்நிலாவுக்கு கோபம் வரவில்லை...அவரை பற்றி தெரிந்தது  தானே சிரித்துக் கொண்டே பாலை அடுப்பில் ஏற்றினாள்...

அவளுக்கு அன்னைகளின் நினைப்பு தான்  வந்தது...

அவர் தான் எப்பொழுதும் அன்னத்திடம்  சொல்லிக் கொண்டே இருப்பார்,இப்படி இவளுக்கு நாம செல்லம் கொடுத்து வளக்குறதுக்கு நாளைக்கு இவ மாமியார் வீட்டுக்கு போயிட்டு ஒன்னும்  தெரியாம நிற்கப்போறா...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.