(Reading time: 11 - 22 minutes)

அந்த அம்மா உன்னோட  அம்மா இப்படி தான் ஒன்னும் சொல்லி தராமா வளர்த்தாங்களானு இவ்வளோட சேர்த்து நம்மளையும் சேர்த்து திட்டப் போறாங்க...(ஹீரோங்களுக்கு எல்லாம் எப்படி பஞ்ச் டயலாக் இருக்குமோ அது போல இந்த பொண்ண பெத்த அம்மாங்களுக்குனு ரிஜிஸ்டர் பண்ண டயலாக் இது...) என்று அவர் கூறுவது நியாபகத்துக்கு வந்தது...

அப்பொழுது எல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள் அவள் போற வீட்டில் அவளது அன்னைகளை திட்ட மாட்டார்கள் என்று...அவளுக்கு தான் தெரியுமே அன்னையின் பிறந்த  வீடு தான் அவளது புகுந்த வீடு என்று...

அதை இப்பொழுது நினைத்தவளுக்கு சிரிப்பு வர சிரித்துக் கொண்டே ஒரு வழியாக அவள் டீயை  திட்டமான சூட்டில் ஆற்றி தம்ளர்களில் ஊற்றுவதற்கும் வெளியில் பைக் சத்தம் கேட்பதற்கும் சரியாக  இருந்தது...

அதுவரை அவளது இதழ்களில் இருந்த புன்னகை மறைய மனதில் ஒரு வித பதட்டம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது...

தம்ளர்களை எடுத்துக் கொண்டு அவள் சமையலறையிலிருந்து வெளியில் வரும்பொழுது அவன் மாடிபடிகளில் ஏறிக் கொண்டிருந்தான்...

அவன் மாடிப்படிகளில் மறைய வெளியில் இருந்த இருவருக்கும் டீயைக் கொண்டு சென்று கொடுத்தாள்...

அவள் தந்த டீயை வாங்கிக் கொண்ட மரகதம்பாட்டி,”போய் அவனுக்கு என்ன வேணும்னு கேட்டு செய்...” என்று கூறினார்.

அவர் கூறியதை தலையாட்டி  கேட்டுக் கொண்டவள்,அவனிடம் செல்லவே பயந்துக் கொண்டு தங்களது அறையை நோக்கி சென்றாள்...

அவள் இங்கு வந்த நாட்களில் மாலைவேளை வேலைகளை மல்லியே கவனித்துக் கொண்டதால்,அவர் தருவதை எடுத்துவந்து வேந்தனிடம் கொடுத்துவிட்டு சென்றுவிடுவாள்...

ஆனால் இன்று அவர் இல்லாததால் அவள் தான் அவைகளை செய்ய வேண்டியுள்ளது,வேறு வழியும் இல்லாததால் அவனிடம் சென்றால் தேன்நிலா...

தங்களது அறைக்கு அவள் செல்லும் பொழுது வேந்தன் கைலிக்கு மாறியிருந்தான்... அவனது அருகில் சென்றவள்,”மச்சான் உங்களுக்கு காபியா..டீயா...என்ன கொண்டு வரட்டும்..”என்று கேட்க

“காபி கொண்டுவா...”என்று கூற அவன்  பதில் சொன்னதே தனக்கு போதும் என்று நினைத்தவள் காபி எடுத்துவர திரும்ப

“உருகி உருகி காதலிக்குற மாதிரி ஊருக்குள்ள சீன் போட வேண்டியது...ஆனா கல்யாணமாகி வந்து மூணு மாசம் ஆகுது...எனக்கு என்ன பிடிக்கும்னு கூட உனக்கு தெரியல...(அடப்பாவி  உன்கிட்ட வந்தாலே அவ பயந்து பயந்து வரா எங்க உனக்கு  பிடிச்சது  எது பிடிக்காதது எதுனு தெரிஞ்சிகிறது...)” என்று முணுமுணுத்தான்   மதிவேந்தன்...

அவன் சொல்வது அவளுக்கு கேட்டது...அவளுக்கு முற்றிலுமாக அவனது பிடித்தங்கள்  தெரியவில்லை என்றாலும்...ஓரளவுக்கு தெரியும்...

மாலை நேரங்களில் அவன் சிலநேரங்களில் காபி,சிலநேரங்களில் டீ என்று குடிப்பான்... அதனால் அவனிடம் கேட்டே மல்லி அவனுக்கு வேண்டியதை போட்டு தருவார்...அதனால் தான் அவள் அப்படி கேட்டது...(வேண்டாத பொண்டாட்டி கால் பட்டால் குற்றம்...கை பட்டால் குற்றம் இதுதானா...)

அவன் சொல்வைகளை கேட்டுக் கொண்டு அமைதியாக சென்றாள்...இரவு உணவு தயாரிக்க தேவையான வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்...அவனது இந்த குறை பேச்சுகள் பழக்கமாகி விட்டன...

இரவு உணவை தயாரித்தவள் அவனை சாப்பிட அழைக்க அவன் சிறிது நேரம் கழித்து  சாப்பிட வருவதாக கூறிவிட...அவனுக்கு காத்திருந்து அவன் சாப்பிட்டு சென்றப் பின்பு அனைத்தையும் எடுத்துவைத்து விட்டு அவள் உறங்க  சென்றப்பொழுது மதிவேந்தன் உறங்கியிருந்தான்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் " உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள்..." - நட்பு கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இது எப்பொழுதும் நடக்கும் ஒன்றுதான்...அவள் வருவதற்குள் அவன் உறங்கியிருப்பான்...

அடுத்த நாள் விடியற்காலையில் சந்தானபாண்டியனும்,மல்லியும் வீடு வந்து  சேர்ந்திருந்தனர்...காலை உணவின்பொழுது மல்லி வேந்தனிடம் அவனது பெரியம்மா குடும்பம் லண்டனில் இருந்து வந்துள்ளதாகவும்,அவர்கள் இவர்களை விருந்துக்கு அழைத்ததாகவும் கூறினார்..

வரும் வாரஇறுதியில்  இருவரையும் சென்று வருமாறு மல்லி கூற சந்தன்பாண்டியனும்  ஆமோதிக்க அவர்களது பயணம் உறுதியானது...

வேந்தனுக்கு அவனது பெரியம்மவையும்,அவரது மகள் கீர்த்தனாவையும் மிகவும் பிடிக்கும்...கீர்த்தனா இவனை விட ஒரு வயதே சிதறியவள்... அவளை வேந்தனுக்கு மிகவும் பிடிக்கும்...

அவள் லண்டனில் தனது மருத்துவப் படிப்பை முடித்துக் கொண்டு போன வருடம் வந்தவள் சென்னையில் ஒரு மருத்துவ மனையில்  வேலை செய்துக்கொண்டிருக்கிறாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.