(Reading time: 11 - 22 minutes)

அவனது பெரியப்பாவின் வேலை காரணமாக அவனது பெரியம்மா,பெரியப்பா மட்டும் லண்டனில் கடந்த ஒரு வருடமாக கீர்த்தனாவை விட்டு  தங்கும் நிலை வந்தது...

இப்பொழுது அவர்கள் நிரந்தரமாக இந்தியா வந்திருந்தனர்...வேந்தனின் திருமணத்திற்கு அவர்கள்  வரும் வகையில் அவர்களது பயணத்தை திட்டமிட்டிருந்தனர்...

யாரும் எதிர்பாராத வகையில் வேந்தனின் திருமணம் முன்னரே நடந்துவிட..அவர்களால் வரமுடியாமல் போய்விட்டது...அதனால் இப்பொழுது புதுமண தம்பதிகளை விருந்துக்கு அழைத்துள்ளனர்...

வேந்தனும் இந்த பயணத்தை மறுக்காததால்...சென்னையை நோக்கிய அவர்களது  பயணம் உறுதியானது...

திருமணத்திற்கு பின்பு தனது கணவனுடனான முதல் பயணம்...அதுவும் அவர்கள் இருவர் மட்டுமான பயணம்... தேன் நிலா மிகவும் சந்தோஷத்தில் இருந்தால்...அந்த பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இந்த பயணம் தனது வாழ்க்கையை  மாற்றப்போகிறது என்பதை அவள் அறியவில்லை... தனது அன்னைகளிடம் சந்தோசமாக  கூறிவிட்டு சென்னை கிளம்பினாள் தேன்நிலா...

வெள்ளி இரவு பயணப்பட்டவர்கள் சனிக்கிழமை காலை சென்னையை வந்தடைந்தனர்...பயணம் முழுவதும் வேந்தனின் அருகாமையை ரசித்து அனுபவித்தாள் தேன்நிலா...தூக்கத்தில் தோள்சாய்வது போல் அவன் தோள்சாய்ந்து அந்த பயணத்தை ரசித்தாள் தேன்நிலா...

அவனும் பொதுஇடம் என்பதாலோ என்னவோ அவளிடம் கடுமையாக நடக்கவில்லை...

அவர்களை அழைத்து செல்ல கீர்த்தனா நேரில்  வந்திருந்தாள்...இருவரையும் நலம் விசாரித்தவள், வீடு வரும் வரை அவர்களிடம் பேசிக் கொண்டே  வந்தாள்... கீர்த்தனாவின் இந்த குணம்  தேன்நிலாவிற்கு மிகவும் பிடித்திருந்தது...

முதல் மூன்று நாட்கள்  குடும்பமாய் பல இடங்களில் சுற்றினர்...வேந்தன் அவளை விட்டு தள்ளி ஒன்றும் போகவில்லை...மற்றவர்கள் நன்கு கவனித்தால் மட்டுமே அவனது ஒதுக்கத்தை உணரமுடியும்...

 அதனால் அவனது ஒதுக்கம் யாருக்கும் தெரியவில்லை...ஆனால் அதை அனுபவிப்பவள் உணர்ந்து தான் இருந்தாள்...ஆனால் அவர்களது ஊரில் அவன் காண்பித்த ஒதுக்கத்தை விட இந்த நெருக்கம் அவளுக்கு இதமாய் இருந்தது...

கடந்து சென்ற நாட்களினால் ஏற்பட்ட அலைச்சலோ... இல்லை வேந்தனிடம் குறைந்து தெரிந்த ஒதுக்கோமோ..அதனால் வந்த நிம்மதியோ எதுவோ என்று அவளை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்து சென்றிருந்தது...

அவள் எழும்பொழுது கடிகாரம் ஒன்பதை தாண்டி சென்றிருந்தது...பதறியடித்துக் கொண்டு எழுந்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வேந்தனின் பெரியம்மாவிடம் சென்றாள்...

அவர் மட்டும் ஹாலில் அமர்ந்திருக்க மற்றவர்கள் யாரும் அவளது கண்களுக்கு தென்படவில்லை...நேரம் கழித்து எழுந்ததால் ஒரு மாதிரியாக இருக்க அவரிடம் தயங்கி தயங்கி சென்றாள்  தேன்நிலா...அவளது நிலைமையை புரிந்துக் கொண்ட வேந்தனின் பெரியம்மா அவளிடம் இயல்பாக பேசி அவளை காலை உணவை உண்ண வைத்தார்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

உணவு உண்டபின் அவள் வேந்தனையும்,கீர்த்தனாவையும் பற்றி கேட்டாள் தேன்நிலா...

கீர்த்தனா காலை ஷிப்ட் என்பதால் டியூட்டிக்கு சென்றுள்ளதாகவும்,வேந்தன் தனது நண்பனை பார்க்க காலையிலே சென்றுவிட்டதாகவும் அவளிடம் சொல்லிவிடுமாறு கூறி சென்றதாகவும்  அவளிடம் சொல்லிவிட சொல்லி சென்றதாகவும் கூறினார்...

அதன் பிறகு தேன்நிலா மதியம் வரை நேரத்தை நெட்டித் தள்ள இரண்டு மணிக்கே வர வேண்டிய கீர்த்தனா வராமல் இருக்க...அவளுக்கு போன் செய்ய அவள் அவசர கேஸில் மாட்டிக் கொண்டதால் மதிய உணவிற்கு வரமுடியாது என்றும் டிரைவரிடம் உணவை அனுப்பி வைக்குமாறு கூறினாள்...

வேந்தனின்  பெரியம்மாவும் டிரைவரிடம் கொடுத்து அனுப்ப ஏற்பாடுகளை பண்ண... தேன்நிலா வீட்டில் தனிய இருக்க ஒரு மாதிரி இருப்பதால் தானே கொண்டு கொடுப்பதாக கூற  தேன்நிலாவை டிரைவருடன் அனுப்பி வைத்தார் வேந்தனின் பெரியம்மா...

அன்னையிடம் சொல்லி ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் இன்னும் உணவு வரவில்லையே என்று எண்ணிக்கொண்டே தனது அன்னைக்கு அழைக்கலாம் என்று நினைத்துக் கொண்டே தனது அறையிலிருந்து வெளியில் வந்தவள் அங்கு கண்ட காட்சியில் அப்படியே நின்று விட்டாள்...

காதலி காதலிக்க படுவாளா...

Episode # 10

Episode # 12

Go to Kathal kathalitha kathaliyai kathalikkum story main page

{kunena_discuss:1175}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.