தொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 12 - அனிதா சங்கர்
உடல் முழுவதும் ரத்தக்கரைகளுடன் ஸ்ட்ரக்சரில் தேன்நிலா இருந்தாள்...ஒருநிமிடம் அதிர்ச்சியில் நின்றவள் அடுத்த நொடி பாய்ந்து சென்று அந்த ஸ்ட்ரக்சரில் மயக்க நிலையில் இருந்த தேன்நிலாவை ஒரு மருத்துவராக ஆராய ஆரம்பித்தாள்...
கன்னங்களில் கண்ணீர் வழிய கீர்த்தனா தேன்நிலாவை பரிசோதிப்பதை வைத்தே ஸ்ட்ரக்சரில் இருக்கும் பெண் கீர்த்தனாவிற்கு தெரிந்தவர் என்று புரிந்துக் கொண்ட அவளுடன் பணிபுரியும் மருத்துவர்கள் கீர்த்தனாவை அமைதிப்படுத்திவிட்டு தேன்நிலாவிற்கு தேவைப்படும் சிகிச்சையை செய்ய ஆரம்பித்தனர்...
தேன்நிலாவை அவசரப்பிரிவிற்கு அழைத்து சென்ற பின்பு அங்கிருந்த சேரில் அமர்ந்து அழுதவள் அந்த விஷயத்தை வேந்தனிடம் கூற தனது கைபேசியை எடுத்து வேந்தனுக்கு அழைத்தாள்...
மணி நான்கை நெருங்கும் வேலையில் தனக்கு எதிரில் கொந்தளிக்கும் கடலை பார்த்தவாரே அமர்ந்திருந்தான் வேந்தன்... அடுத்து தனது வாழ்க்கையில் என்ன என்ற கேள்வி அவனது முன்பு பூகம்பமாய் இருந்தது...
தன்னையே நினைத்து உருகும் தேன்நிலாவை விலக்கவும் முடியாமல் அவளது தந்தை தனது அத்தைக்கு செய்த துரோகத்தை மறந்து அவளுடன் வாழவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் வேந்தன்...
யோசனையின் பிடியில் சிக்கியவன் தனது கைபேசி அடித்துக் கொண்டே இருப்பதை உணர்ந்து அதை எடுத்துப்பார்க்க அதில் கீர்த்தனா என்று வரவும் இவள் எதற்கு இப்பொழுது அழைக்கிறாள் என்று யோசனையுடன் தனது கைபேசியை காதுக்கு கொடுத்தான்...
“சொல்லு கீர்த்தி...”
“வே...வே..வேந்தா” என்று அவளது குரல் அழுகையும் விசும்பலுமாய் வெளிப்பட்டது
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அவளது அழுகையையும்,கேவலையும் உணர்ந்தவன்,”என்னடா...என்ன ஆச்சு...”
என்று கேட்க
“வேந்தா...தே..தேனுக்கு..அ...அசிடென்ட் ஆ...ஆகிடுச்சு...எ..எங்க ஹோச்பிடல..தான்.. சேர்த்திருக்காங்க...”என்று அவள் முடிப்பதற்குள் கீர்த்தனா கூறிய விஷயத்தை கேட்டவனுக்கு ஒரு நிமிடம் அந்த விஷயத்தை கிரகிக்க தேவைப்பட
அடுத்த நிமிடம் அவன் கீர்த்தனா பணிபுரியும் ஹோச்பிடலை நோக்கி செல்ல ஆரம்பித்தான்...
கௌதமிற்கு காலையிலிருந்து தனது தங்கையின் நினைவாகவே இருந்தது...அதுவும் அன்னை அவள் சென்னைக்கு வந்துள்ளதாக கூறவும் அவனுக்கு தேனுவை பார்க்க வேண்டும் போல இருந்தது...
தனது பெரியம்மாவிற்கு அழைத்து வேந்தனின் பெரியம்மாவின் வீட்டு அட்ரசை வாங்கியவன்...தனது தங்கையை காண ஆசையோடு வேந்தனின் பெரியம்மா வீட்டிற்கு சென்றான்...
வேந்தனின் பெரியம்மாவிடம் தன்னை அறிமுக படுத்தியவன் தேன்நிலாவின் வரவிற்காக காத்திருக்க... அப்பொழுது கீர்த்தனாவிடமிருந்து அவளது அன்னைக்கு அழைப்பு வந்தது... கீர்த்தனா கூறியதை கேட்டு அதிர்ச்சியில் இருந்தவரை பார்த்தவன் அவரது அருகில் சென்று என்ன என்று கௌதம் கேட்க அவர் கூறிய செய்தியில் அவன் இறந்துதான் போனான்...
அவனது அன்பு தங்கை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள்... அடுத்த நிமிடம் அவன் அவருடன் அந்த மருத்துவமனை நோக்கி செல்ல ஆரம்பித்தான்...
உள்ளே தேன்நிலாவிற்கு சிகிச்சை நடந்துக் கொண்டிருக்க அவளது நிலைமையை ஒரு மருத்துவராய் உணர்ந்து இருந்த கீர்த்தனா வெளியில் இருந்த நாற்காலியில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள்...
தனது மகளின் நிலையை பார்த்துக் கொண்டே வந்த சாரதா அவளை நோக்கி செல்ல..தனது தங்கையின் நிலையை அறிந்துக் கொள்ளும் பதட்டத்திலும்,சற்று முன்பு சாரதா கூறிய தனது மகள் இங்கு தான் பணி புரிகிறாள்,அவள் பார்த்துக் கொள்வாள் என்ற அவரது ஆறுதல் மொழிகளிலும் சாரதாவினை தொடர்ந்து சென்றான் கௌதம்...
அந்த பெண் தான் அவரது மகள் என்பதை உணர்ந்தவன் கீர்த்தனாவை நோக்கி விரைந்து சென்றான்,”மே...மே...மேடம் என்னோட த...தங்கச்சி எப்படி இருக்கா...” என்று அவன் அவளை கேட்க அவனை புரியாமல் பார்த்தாள் கீர்த்தனா...
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பத்மினியின் "உன்னை விட மாட்டேன் என்னுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“நா..நான்...தேனோட அண்ணன்...”என்று கௌதம் கூறவும்
தன்னை சமன் படுத்திக் கொண்ட கீர்த்தனா,”உள்ள டாக்டர்ஸ் பார்த்துட்டு இருக்காங்க...அவங்க வந்தாதான் தெரியும்...”என்று தனக்கு தெரிந்த நிலைமையை கூறாமல் அவனது பதட்டத்தை குறைக்க நினைத்து கூறினாள் கீர்த்தனா...
“டாக்டர்..நான் ஒரு தடவ தேனுவ பார்க்க முடியுமா...”என்று கேட்டுக் கொண்டு இருக்கும் பொழுதே மூச்சிரைக்க ஓடி வந்தான் வேந்தன்
“கீ...கீர்த்தி நி...நிலாக்கு என்ன ஆச்சு...எப்படி இருக்கா...”என்று மூச்சிரைக்க அவளை கேட்டப்படிய வந்து நின்றான் வேந்தன்
வேந்தனை பார்த்ததும் கௌதமிற்கு கோபம் தான் வந்தது.ஆனால் தங்கையின் தற்போத நிலையும் இருக்கும் இடமும் அவனை அமைதி காக்க வைத்தது...