(Reading time: 11 - 22 minutes)

தனக்கு வரமாய்  கிடைத்த பொருள் தன்னை விட்டு போய்விடுமோ என்ற பயத்திலே அவரது உயிர் உருகிக்கொண்டிருந்தது...

தேவிக்கு அதைவிட கொடுமையாய் இருந்தது...அதுவும் அவளது திருமணம் முடிந்த பிறகு அவர் அவ்வளவாக  சீராட்டவில்லை... அவள் செய்த செயல் தந்த கோபம் அவளிடம் பேசினாலும் அவர் மனம் ஒரு விதத்தில் அவளை ஒதுக்க தான் செய்தது...

கதிரேசனுக்கு தெரியும் வேந்தனால் தனது மகள் ஒருநாள் தன்னை விட்டு பிரிவால் அல்லது தனது வீட்டிற்கே திரும்பி வந்துவிடுவாள் என்று நினைத்திருந்தார்...   ஆனால் அவர் இப்படி ஒரு நிலையை கனவிலும் நினைக்கவில்லை...

அனைவரையும் பயம்முறுத்தி மூன்று நாட்கள் கழித்து கண்ணை திறந்தாள் தேன்நிலா...அவள் அபாய கட்டத்தை தாண்டி இருந்தாலும் அவள்  உடல் முழுவதும் ஏற்பட்ட காயங்களால் அவள் முழுவதும் குணமாக இன்னும் இரண்டுமாதங்களுக்கு மேல் ஆகும்  என்ற தகவலை பகிர்ந்துக் கொண்டாள் கீர்த்தனா..

அவளை  பார்க்க அனுமதிக்க வேந்தன் முதல் ஆளாய் போக அவனது வழியை மறித்து  நின்றான் கௌதம்...

“கௌதம் நகரு...” என்று வேந்தன் கூற

“நீ என்னோட தங்கச்சியா போய் பார்க்க கூடாது...” என்று அவன்கூற

“அவ உன்னோட தங்கச்சியா இருக்கலாம் ஆனா அவ என்னோட பொண்டாட்டி...” என்று வேந்தன் கூற

“அவளை நீ பார்க்க கூடாது...அவ்வளவு தான்...”என்று கௌதம் தனது முடிவில் நிற்க

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“கௌதம் மாப்பிள்ளைய உள்ள விடு...” என்று கதிரேசன் கூற

“அப்பா அன்னைக்கும் இப்படி தான் சொன்னீங்க...அவ முடிவுக்கு விடுனு இப்ப எப்படி  இருக்கானு  பார்த்தீங்களா... அன்னைக்கு இவன கல்யாணம் பண்ணிக்க முடியலைனா செத்துடுவேனு சொன்ன அதனால அவ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னீங்க...இப்ப அவ செத்து பொழச்சிதான வந்துருக்கா...இவன் அவளை பார்க்க கூடாது... ” என்று கௌதம் கூற

இப்பொழுது அங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் புரிந்தது அவள் அன்று பஞ்சாயத்தில் கதிரேசனும்,கௌதமும் ஒத்துகொள்ளாமல் இருந்தபொழுது அழைத்து பேசியவை  இது தான் என்று...

கௌதம் மட்டும் பேசிக் கொண்டே இருக்க அதற்கு மேல் பொறுமை இல்லாத வேந்தன் கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றான்...

பேசிக் கொண்டே தனது தந்தையின் அருகில் வந்திருந்ததால் அவனால் இப்பொழுது வேந்தனை தடுக்க முடியவில்லை...

அவன் போனதை உள்ளே செல்ல பார்த்தவனை தேவி பிடித்து தடுக்க அவனால் ஒன்றும் செய்ய முடியாமல்  போக அமைதியாக நின்றான்...

உள்ளே சென்ற வேந்தன் செத்துதான் பிழைத்தான்.. அவனின் நிலாவை பார்த்து..ஆம் அவனது நிலா  தான்...அவனிடம் அவளை கல்யாணம் செய்தபொழுது அவளது மேல் காதல் இருந்ததா என்று கேட்டால் அவனிடம் பதில் இல்லை...

திருமணத்திற்கு பிறகு ஒரு வகை உரிமை அவள் மேல் எழுவதை உணர்ந்து தான் இருந்தான்...ஆனால் அது அவனுக்கு காதலாய்,பாசமாய் என்று  தெரியாது...

ஆனால் கீர்த்தனா போன் செய்த அந்த நொடி அவன் உணர்ந்தான் அவனும் நிலாவை காதலிக்க ஆரம்பித்துவிட்டான் என்று...

அறையின் கதவில் இருந்து மெதுவாய் அவள் அருகில் செல்லும் பொழுது அவன் பார்த்தது கை,கால்  மற்றும் தலையில் கட்டு போட்டு பல உபகரணங்கள் சூழ்ந்து இருக்க படுத்திருக்கும் அவனது நிலாவை தான்...

ஒவ்வொரு முறையும் அவனை தேடிவந்து வம்பிழுக்கும் வம்புகாரி...கடந்த சில மாதங்களாய் அவனை பார்த்தாலே பயப்படும் அவனது மனைவி இன்று அவனது வருகையை கூட உணராமல் படுத்து இருந்தாள்...

அவளை இந்த  கோலத்தில் பார்த்த இந்த நொடி அவனது கண்கள்  கண்ணீரை சிந்தி இருந்தது... அவன் அழுது கொண்டிருந்தான் அவளை மட்டும் சந்தோசமாய் இருக்கிறாய் என்று அன்று குற்றம் சாட்டியவன் இன்று அவனது  சந்தோசமே அவள் தான் என்று  புரிந்துக் கொண்டு கண்ணீர் சிந்தினான்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அவளது வலது கையை   தனது நடுங்கும் கைகளால் எடுத்து தனது கைகளில் வைத்துக் கொண்டவன்...அவளது முகத்தை தனது கைகளால் மெதுவாக தடவினான்...

அவனாய் தொடும் முதல் பரிசம் அது...ஆனால் அதை உணரும் நிலையில் அவள் இல்லை...அவளது தலை முடிகளை ஒதுக்கி விட்டு  தனது முழு காதலையும் ஒரு முத்தத்தில் தேக்கி அவளது நெற்றியில் தனது இதழ் பதித்தான் வேந்தன்...

  காதல் காதலியை காதலிக்க ஆரம்பித்து விட்டதா...

        அப்படியென்றால்

  காதலியின் கண்களில்  காதலின் நிலைமை என்ன...

காதலி காதலிக்க படுவாளா...

Episode # 11

Episode # 13

Go to Kathal kathalitha kathaliyai kathalikkum story main page

{kunena_discuss:1175}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.