(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 13 - அனிதா சங்கர்

Kathal kathalitha kathaliyai kathalikkum

வளது கைகளை பிடித்துக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் வெளியில் இருப்பவர்களின் நிலைமையும்  புரிந்துக் கொண்டு அவளது முகத்தை ஒரு முறை தடவிக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தான்...

அவன் வந்த பின்பு ஒவ்வொருவராய் சென்று அவளை பார்த்து வந்தார்கள்... அனைவரையும்  அவளது இந்த கோலம் பாதித்தது...அனைவரும் அவளது நலத்தை தங்களது கோரிக்கையாக இறைவனிடம் வைத்தனர்...

அனைவரையும் இதோ அதோ என்று எதிர்  பார்க்க வைத்து மூன்று நாட்கள் கழித்து கண் விழித்தாள் தேன்நிலா...அவள் நன்றாக எழுந்து அமர்ந்து பேசுவதற்கே இருபது நாட்கள் ஆகியது...

அவள் நன்கு குணமான பின்பு ஊருக்கு செல்வது என்று முடிவெடுத்திருந்தனர் குடும்பத்தினர்...அதனால்  கீர்த்தனா வீட்டிலே தங்கி அவளது சிகிச்சையை மேற்கொண்டனர்...

முழுவதுமாக இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது தேன்நிலாவிற்க்கு விபத்து நடந்து... வேந்தன் அவளை வந்து பார்த்து செல்வனே தவிர அவனால் அவளுடன் தனிமையாய்  அமர்ந்து பேசமுடியவில்லை...

ஊரில் வேலைகளும் இருக்க பெண்கள் மட்டும் சென்னையில் தங்கி தேனுவை கவனித்துக் கொள்ள அவர்களுக்கு  உதவியாய் கௌதம் இருக்க மற்றவர்கள் வேந்தன் உட்பட அனைவரும் ஊரில் இருந்தனர்...

அதனால் அவனால் வாரம் ஒருமுறை மட்டுமே வந்து  பார்த்து செல்ல முடிந்தது... அவளிடம சிறிது நேரமே அவனால் பேச முடிந்தது...மனதை திறந்து பேச இப்பொழுதிய நிலைமை சரியாக இருக்காது என்று நினைத்தவன்..அவளுடனான தனிமைக்காக காத்திருக்க ஆரம்பித்திருந்தான்...

அன்று தேன் நிலாவிற்கு ஒரு முழு செக்கப்  இருந்தது...அது முடிந்ததும் அவளை வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவு எடுத்திருந்தனர்...அவள் நன்றாகவே தேறி இருந்தாள் அனைவரின் கவனிப்பினாலும்...

மருத்துவமனைக்கு வேந்தன்,தேன்நிலா,மல்லி,அன்னம் என நால்வரும் வந்திருந்தனர்...தேவி ஊருக்கு செல்ல அனைத்தையும் தயார் செய்வதாக கூறி வீட்டிலே தங்கி விட்டார்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் " உன்னையே தொடர்வேன் நானே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

மருத்துவர் சொன்ன அனைத்து டெஸ்டுகளையும் எடுத்துவிட்டு அவரை பார்பதற்காக அமர்ந்திருந்தனர்...

இவர்களது முறை வரவும் இவர்களுடன் கீர்த்தனாவும் சேர்ந்துக் கொண்டு மருத்துவரை காண சென்றாள்...

மருத்துவர் அனைத்தும் நார்மலாக இருப்பதாக கூறி,இனி தேன்நிலாவிற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை என்று கூறியவர் கீர்த்தனாவை மட்டும் இருக்க சொல்லிவிட்டு அனைவரையும் அனுப்பி வைத்தார்...

சிறிது நேரம் கழித்து வெளியில் வந்த கீர்த்தனாவின் முகம் வாடி இருக்க என்னவென்று அனைவரும் கேட்டதற்கு ஒன்றும் இல்லை என்று கூறியவள்அவர்களுடன் வீட்டிற்கு வந்தாள்...வீட்டிற்கு வந்தவள் வேந்தனை  தனியாக அழைத்து  பேச அவள் கூறிய விசயத்தை கேட்டவனின்  முகம் வேதனையை தத்தெடுத்துக் கொண்டது...

சற்று முன்பு மருத்துவமனையில் மருத்துவர் சொன்னதில் சந்தோசத்தில் திளைத்த அவனது மனம் இப்பொழுது  கீர்த்தனா சொன்னதில் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தது...

ஆனால் அவள் சொன்னதை எப்படி வீட்டில் இருக்கும் அனைவரிடமும் கூறுவது என்று நினைத்தவன் குழப்பத்துடன் நாயகனை பிரியாளை நோக்கி பயணத்தை தொடர்ந்தான்...

கீர்த்தனாவிற்கும்,வேந்தனிற்கும் தெரியாத ஒன்று இவர்கள் பேசியதை தேன்நிலாவும் கேட்டுவிட்டால் என்று...

அந்த காரில்  இருந்த அனைவரும் உறங்கியிருக்க...வேந்தனும், தேன்நிலா மட்டும் உறங்காமல் விழித்திருந்தனர்... வேந்தன் குழப்பத்தில் என்ன முடிவு எடுப்பது என்று யோசித்துக் கொண்டே தூக்கமில்லாமல் தவிக்க,தேன்நிலாவோ தான் எடுத்த முடிவை தனக்கு மனபலம் இருக்குமா என்ற பயத்தில் தூங்காமல் விழித்திருந்தாள்...

இரவு  ஒன்பது மணியளவில் வீடு வந்து சேர்ந்தனர்...தேன்நிலாவிற்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார் மல்லி...

அவர்கள் வந்த செய்தி அறிந்து அக்கம்பக்கத்தினர் வந்து பார்க்க அனைவரும் உறங்க மணி பதினொன்றை தாண்டி இருந்தது...

தங்களது  அறைக்கு சென்ற தேன்நிலா கீழே  படுப்பதற்கு தயாராக உள்ளே வந்த வேந்தன்,”நிலா...கீழ படுக்காத மேல வந்து படு...” என்று கூற

“இல்ல நான் கீழயே...” என்று அவள் கூற  வர

“நிலா சொன்ன கேளு...இப்பதான் உடம்பு கொஞ்சம் தெரியிருக்கு ஒழுங்கா  மேல வந்து படு..” என்று வேந்தன் கூற அவனிடம்  மறுத்து எதுவும் சொல்லாமல்  அவனது கட்டிலின் ஒரு ஓரத்தில் படுத்துக்கொண்டாள் தேன் நிலா.

அவள் படுத்தும் தனது உதடுகளில் சிறு முறுவலை  உதிர்த்தவன் தன் சொல்லை அவள் மீறாமல் மதித்ததே பெரியதாக தெரிய அவனும் மற்றொரு பக்கத்தில் போய் படுத்தான்..(தம்பி...உனக்கு தெரியல அவளோட அமைதி புயலுக்கு முன்னாடி வருமே அந்த அமைதி...)

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.