(Reading time: 14 - 28 minutes)

அடுத்த நாள் காலை அனைவரும் உணவு மேசையில்  அமர்ந்திருக்க மல்லி அனைவருக்கும் காலை உணவை பரிமாறிக் கொண்டிருந்தார்...  தேன் நிலாவையும் அமரவைத்து அவளையும்  உணவருந்த வைத்திருந்தனர்...

அவள் அதிகம் மாத்திரைகளை வேறு சாப்பிடுவதால் அவளுக்கு எதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார்... எல்லாரும் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டு இருக்க தனது பேச்சை தொடங்கினால் தேன் நிலா

“மாமா நான் அம்மா அப்பாவ இங்க வர சொல்லி இருக்கேன்...அவங்க வர வரைக்கும் இருக்குறீங்களா...”என்று  தேன் நிலா  கூற

எதற்காக என்று  தெரியவில்லை என்றாலும் அவள் சொன்னதற்கு  சம்மதம் சொல்லி இருந்தார்  சந்தனப்பாண்டியன்...

அவள் சொன்னதிலிருந்து அவளையே பார்த்திருந்தான் வேந்தன்...அவனிடம் அவள் இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை...அவன் பார்ப்பதும் தெரிந்தும் அவள் அவன் புறம் திரும்பவில்லை அவள்...

அவர்கள் காலை உணவை முடித்திருந்த சில நொடிகளுக்குள்ளே தேவி,கதிரேசன், அன்னம் ஆகியோரும் வந்து சேர்ந்தனர்... வழக்கமான நல விசாரிப்புகள் உபசரிப்புகள் நடந்துக் கொண்டிருந்தது...தேன் நிலாவின் விபத்துக்கு பிறகு இரண்டு குடும்பமும் கொஞ்சம் நெருங்க ஆரம்பித்திருந்தனர்...

யாருக்கும் தேன் நிலா எதற்காக வர சொன்னாள் என்று தெரியவில்லை...

வேந்தன் தேன்நிலாவை தான் பார்த்துக்கொண்டிருந்தான்...அவன் அவள் எதாவது சொல்வாள் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தான்...ஆனால் அவள் எதையும் அவனிடம் சொல்லவில்லை...

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்தால் தேன் நிலா...

எல்லாரும் அவ்ள சொல்வாள் என்று அவளை பார்க்க அவள் பேச ஆரம்பித்து  இருந்தாள்...

“மாமா...நா..நா...அப்பா வீட்டுக்கு போறேன்...”என்று தேன் நிலா  பயந்து பயந்து  கூறினாள்...

தன் மருமகள் அவளது வீட்டிற்கு செல்வதற்கு தன்னிடம் அனுமதி கேட்டு நிற்பதைப் பார்த்து... சந்தானப் பாண்டியனுக்கு சிரிக்க தான் தோன்றியது...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் " உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள்..." - நட்பு கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அதுக்கு எதுக்குமா எங்கக்கிட்ட கேட்டுட்டு இருக்க போய்ட்டு வர வேண்டிதானா...”என்று சந்தனபாண்டியன் சொல்ல

“ஆமா...நீ போயிட்டு வா...இப்ப தான ஹோச்பிடல  இருந்து வந்த போய் அம்மா கூட கொஞ்ச நாள் இருந்துட்டு வா...”என்று  மல்லியும் தன் பங்கிற்கு சொல்ல

“அ..அ...அது...வந்து நா...நான்...வீட்டுக்கு...ஓ...ஒரேடியா போறேன்...”என்று அவள் சொல்லி முடிக்க தேவி அவளை அடுத்த நொடி அடித்திருந்தார் தேவி...

அவளை அடித்த தேவி அவளது தோள்களை பிடித்துக் கொண்டு அவளை திட்ட ஆரம்பித்திருந்தார்....

"என்னடி உன்னோட மனசுல நினைச்சிட்டு இருக்க...கல்யாணமாகி எத்தனை மாசம் ஆகுது...அதுக்குள்ள உனக்கு வாழ்க்கை பிடிக்காம போய்டுச்சோ...என்னோட மருமகன் உன் மேல கோவமா இருக்காருனே வச்சிப்போம்...கொஞ்ச நாள் உன்னால பொறுதியிருக்க முடியாத... அன்னைக்கு ஊருக்கு முன்னாடி அப்படி நடுத்துகிட்டா...எல்லாரும் நீ செஞ்சாதலாம் மறந்துட்டு அப்படியே உன்ன உடனே மனிச்சிடு வங்கா அப்டின்னு நினைக்குறது தப்பு...அவங்களுக்கும் கொஞ்சம் எல்லாத்தையும் ஏத்துக்க நாள் வேணாம்...ஒழுங்கா இங்கேயே இரு..நாங்க வேணாம் அப்ப அப்ப வந்து பார்த்து போறோம்..." என்று தேவி தனது மகளை பார்த்து கூறினார்...

ஆனால் தேன்நிலாவோ தன் அன்னைக்கு இல்லை என்ற தலை அசைப்பின் மூலம் தன்னால் அங்கு இருக்க முடியாது என்பது போல் சொல்ல

தேவிக்கு கோபம் தாங்காமல் இன்னும் இரண்டு அடிகளை சேர்த்து கொடுக்க ஆரம்பித்தார்...

அவர் தேன்நிலாவை அடிப்பதை மல்லியும்,அன்னமும் இடையில் வந்து தடுக்க ஆரம்பித்தனர்...

"என்ன விடுங்கக்கா... இவள என்ன செய்யறதுனே எனக்கு தெரியல...இப்படிலாம் வர கூடாதுனு தான் நாங்க அப்பவே அவ கிட்ட சொன்னோம்... அப்பவும் பேச்சை கேட்கல இப்பவும் நம்ப பேச்சை கேக்கலான நாமா என்னதான் பண்றது..." என்று தனது ஆற்றாமையை அழுகையாகவும்,புலம்பலாகவும் வெளிப்படுத்தினார் தேவி...

அதன் பிறகு அன்னம்,மல்லி என்று பலர் அவளுக்கு எவ்வளவோ எடுத்து சொல்லியும் தனது முடிவிலிருந்து மாறாமல் நின்றால் தேன்நிலா.

அங்கு நடக்கும் அத்தனையையும் அமைதியாக ஒரு பார்வையாளனாக பார்த்துக் கொண்டிருந்தான் வேந்தன்...

அவளிடம் எவ்வளவோ பேசி பார்த்தும் அவள் முடிவில் மாற்றம் இல்லாமல் இருக்கிறாள் என்றதும் அனைவரது கவனமும் இப்பொழுது  வேந்தனிடம் சென்றது...

வேந்தனும் ஒரே குழப்பத்தில் தான் இருந்தான்..அவளது இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம் என்று அவனுக்கும் தெரியவில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.