(Reading time: 14 - 28 minutes)

“பாட்டி...கீர்த்தனா தான் சொன்னாங்க..எனக்கு நடந்த விபத்துல எனக்கு பயங்கரமா கர்ப்பபையில அடிபட்டுடுச்சாம் அதனால எனக்கு குழந்தை பிறக்காதாம்...நீங்க உங்க பேரன் கிட்ட வேணும்னாலும் கேட்டு பாருங்க...அன்னைக்கு கீர்த்தனாகிட்ட இவர் பேசிக்கிட்டு இருந்தத நான் கேட்டேன்...”என்று அவள் சொல்லி முடிக்கவும் அனைவரது பார்வையும் உண்மையா என்பது போல் அவனிடம் சென்றது...

அவனது கண்கள் உண்மை என்பதுபோல மூடி திறந்தது...

தேவிகயும்,அன்னதிமும் தனது மகள் கூறியதை கேட்டவுடன் தெம்பில்லாமல் தரையில் அமர்ந்திருந்தனர்...யாருக்கு அவர்கள் என்ன செய்தார்கள்..இப்படி தங்களது மகள் வாழ்க்கையில் புயல் அடிப்பதற்கு...

தனது மகள் கூறியதை கேட்டு கதிரேசன் கூட ஆட்டம் கண்டு போனார் தனது நண்பனின் நிலை புரிந்து கொண்ட சந்தனபாண்டியன் அவரது தோள்களை ஆதரவாய் பற்றிக் கொண்டார்...

இருபத்தியெட்டு வருடங்களுக்கு முன்பு இதே சூழ்நிலையை தானே அந்த குடும்பம் சந்தித்தது...திரும்பவும் அதுவே அடுத்த தலைமுறைக்கும் நடக்கிறதே என்ற எண்ணம் மரகதத்தை தெய்வத்தின் துணையை நாட வைத்தது...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூர்ணிமா செண்பகமூர்த்தியின் "இதோ ஒரு காதல் கதை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

உடனே சுதாரித்துக் கொண்ட மல்லி தனது மருமகள் அருகில் சென்றார்..

“டேய் இங்க பாருடா அத்தை நான் சொல்லுறேன்...உனக்கும் என்னோட பையனுக்கும் நிறைய குழந்தைப் பிறக்கும்டா...”என்று மல்லி சொல்ல  தேன்நிலாவின் அழுகை இன்னும் தான் அதிகரித்தது...

“அம்மா..எங்களுக்கு குழந்தையில்லாம போனாலும்..அவளுக்கு நானும் எனக்கு அவளும் போதும்மா...இதுவே எனக்கு நடந்து இருந்தா இவ இன்னொரு கல்யாணம் பண்ணி இருப்பாளா...”என்று வேந்தன் சொல்ல

அதுவரை அழுதுக்கொண்டிருந்தவள்,“இந்த சினிமா டயலாக் எல்லாம்  படத்துக்கு தான் ஒத்துவரும்...வாழ்கைக்கு இல்லை...”என்று கூறியவள்

சந்தனபாண்டியனையும்,மல்லியையும் பார்த்து,”அத்தை உங்க பையனுக்கு வேற நல்லப் பொண்ணா பார்த்துக்  கல்யாணம் பண்ணிவைங்க..என்னால எந்த பிரச்சனையும் வராது...” என்று தேன்நிலா சொல்ல

“என்னடி ஓவரா போற...என்ன விட்டு போறியா...போ..அத விட்டுட்டு என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்ல..”என்று வேந்தன் சொல்ல

அவனைப் பார்த்து ஒரு சிரிப்பை உதிர்த்தவள்...”நீங்க பண்ணிப்பீங்க..இல்லனு மட்டும் சொன்னீங்க நான் செத்து போவனு எல்லாம் சொல்ல மாட்டேன் செஞ்சுக்காட்டுவேன்...பத்துநாள் துக்கத்துல இருப்பீங்க அப்பறம் நீங்க புதுமாப்பிள்ளைதான்..என்ன ஓகே வா...”என்று கேட்க

அவனுக்கு அவள் சொன்ன சொற்கள் ஆத்திரத்தை வரவைத்துக் கொண்டிருந்தது...அவள் குரவளையை பிடிக்கும் கோபம் வந்தாலும் அவளது உடல் நலம் கருதி அமைதியாக இருந்தாள்...

அவனிடம்  தனது பேச்சு முடிந்து போனது என்பது போல் தனது தந்தையிடம் திரும்பியவள்,”அப்பா என்னை வீட்டுக்கு கூட்டி போறீங்கள..இல்ல உங்க கூட நான் இருக்குறது அவமானம்னா சொல்லுங்க...நான்..”என்று எதுவோ அவள் ஆரம்பிக்க அவளை தடுத்தவர் அவளை தனது தோளில் சாய்த்துக்கொண்டார்... தனது தந்தையின் தோளில் சாய்ந்தவள் ஒருமுறை அழுது தீர்க்க தனது மகளின் அழுகையை பார்த்த கதிரேசனின் கண்களும் கலங்கியது...

தனது மகளின் தலையை தடவிக் கொடுத்தவர்..எல்லாரிடமும் ஒருமுறை பார்த்துவிட்டு தனது மகளை அழைத்துக் கொண்ட செல்ல ஆரம்பித்தார்..

அவர்கள் போகும் பொழுது இடையில் வந்து நின்ற வேந்தன் கூறிய வார்த்தைகள் கதிரேசனை அவனது மீது கோபமாக பாயவைத்தது...

(பயபுள்ள என்ன சொல்லுச்சு...நானும் யோசிச்சிக்கிட்டு இருக்கேன் நியாபகம் வந்ததும் சொல்லுறேன்...)

காதலி காதலிக்க படுவாளா...

Episode # 12

Episode # 14

Go to Kathal kathalitha kathaliyai kathalikkum story main page

{kunena_discuss:1175}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.