தொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 14 - அனிதா சங்கர்
கதிரேசன் தேன்நிலாவை அழைத்து செல்வதைப் பார்த்தவன்,அவர்களது வழியை மறித்துக் கொண்டு வந்து நின்றான்...
அவன் நிற்பதைப் பார்த்த தேன்நிலா,”இப்ப உங்களுக்கு என்ன வேணும் அதான் என்னோட விளக்கத்த கொடுத்துட்டேன் இல்ல...வழிய விடுங்க...”என்று சொல்ல
“உன்ன யாரும் இப்ப உங்க அப்பா வீட்டுக்கு போகவேணானு சொல்லி தடுக்கல...”என்று வேந்தன் சொல்ல அவள் குழப்பமாக அவனை பார்த்தாள்..
“என்ன இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்ட இல்ல,பண்ணிகுக்றேன்... ஆனா...பொண்ணு நீ தான் பார்க்கணும்...”என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்
கதிரேசன் அவனிடம் எகிறியிருந்தார்...”என்ன நினைச்சிட்டு இருக்க நீ...நினைச்ச மாதிரி எல்லாம் நடக்குதுங்குற மிதப்பு...இல்ல... இனிமே அவ இங்க இருக்க மாட்டா..என் பொண்ணோட மனசு கொஞ்சமாவது உனக்கு புரிஞ்சுதுனா...நீ இப்படி பேசுவியா...நீ யாராவது கல்யாணம் பண்ணிக்க...எப்படியோ போ...
அவளுக்கும் அதுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்ல...அன்னைக்கி என்கிட்ட என்ன சொன்ன எங்க அத்த மாதிரி உங்க பொண்ணுக்கு நடந்தா...உங்களுக்கு வேதனை புரியும்னு சொன்னால...எனக்கு புரிஞ்சிடுச்சு...போதும்ல உனக்கு...நகரு வழிய விட்டு...” என்று அவர் சொல்ல அவர் சொன்ன செய்தி அங்கு இருந்த அனைவருக்கும் புதிது...
தேன்நிலா அவ்வாறு சொன்னாயா என்று வேந்தனைப் பார்க்க அவனது மௌனம் அவன் சொல்லியிருக்கிறான் என்று உணர்த்தியது...
அவரது கோபத்தையும் தேன்நிலாவின் முகத்தில் தெரிந்த வேதனையையும் பார்த்த வேந்தன் வேறயெதுவும் சொல்லாமல் வழியை விட்டான்...
அவளது அடிபட்ட பார்வை அவனை அமைதியாக இருக்க செய்தது...அவள் செல்வதை தடுக்க நினைத்துதான் அவன் அவ்வாறு செய்தான்,ஆனால் அது அவனுக்கே வினையாகி போவும் என்று அவன் நினைக்கவில்லை...
இதோ தேன்நிலா கதிரேசனோடு அவரது பைக்கில் அவனது வாயிலை தாண்டி சென்றுவிட்டாள்...அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் வேந்தன்...
அவனது அருகில் வந்த அன்னம்,”அப்படி சொன்னியா வேந்தா மாமாகிட்ட...” என்று கேட்க...அவனது ஆமாம் என்ற தலையசைப்பே அவருக்கு பதிலாய் கிடைத்தது...
“ஏன்டா அப்படி சொன்ன...இப்ப என் பொண்ணோட நிலைமைய பார்த்தியா...”என்று கேட்க
அதுவரை தேன்நிலா ஏற்படுத்திய கோபம்,ஒதுக்கம்,அவளை தடுக்க முடியாததால் தன் மேலே ஏற்பட்ட கோபம் எல்லாம் அவனை இப்பொழுது அன்னத்திடம் பேச வைத்தது...
“ஆமாம் அத்தை...நான் சொன்னேன் தான் இப்போ அதுக்கு என்ன...நீங்க படுற கஷ்டம்...அப்பா,அம்மா,பாட்டினு எல்லாரும் உங்களை நினைச்சி வருத்தப்படுறத பார்த்து பார்த்து வளர்ந்ததால எனக்கு உங்க நிலைமைக்கு காரணமானவங்க மேல கோபம் வந்துச்சு...அது அவர்கிட்ட என்ன அப்படி பேச வச்சிது...போதுமா...”என்று வேந்தன் கூற
அங்கு இருந்தவர்களில் தேவிக்கு தான் இதுயெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது... தங்களது மாப்பிள்ளை தன் மகளை இப்படியெல்லாம் நிந்தித்துள்ளார் என்ற செய்தியே தனது மகள் வாழ்க்கை இனி அவ்வளவு தான் என்ற எண்ணத்தை அவருக்கு வரவைத்தது...
வாழ்ந்து முடித்தவர்கள் செய்த செயலால் இனி வாழ்கையே ஆரம்பிக்க முடியாத தனது மகளின் வாழ்க்கை முடிந்துவிட்டதே என்று நினைத்தபொழுது அவரது நெஞ்சம் வெம்பிதான் தணிந்தது...
அங்கு இருப்பவர்களிடம் எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தார் தேவி...அவர் செல்லமுயல்வதையும் அவரது முகபாவனையையும் பார்த்த வேந்தன்,”அத்த...”என்று கூப்பிட அவன் அன்னத்தை தான் கூப்பிடுகிறான் என்று நினைத்த தேவி திரும்பி பார்க்காமல் செல்ல
“தேவி அத்த..உங்களத்தான்...கவலைப்படமா போங்க...உங்க பொண்ணு மட்டும் தான் இந்த ஜென்மத்துல என்னோட பொண்டாட்டி...”என்று வேந்தன் கூற
அவனை திரும்பிப் பார்த்த தேவி இதை இனி என்னை நம்ப சொல்கிறாயா என்ற கேள்வியை தனது கண்களில் தேக்கிக்கொண்டு அவனை பார்த்து கையெழுத்து கும்பிட்டு விட்டு அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார்...
அன்னமும் அவன் சொன்ன பதிலில் அதிர்ச்சியில் தான் இருந்தார்...அவர் இவ்வாறு தன்னை சேர்ந்தவர்கள் கதிரேசன் மாமா குடும்பத்தை நிந்திப்பர்கள் என்று எதிர்ப் பார்க்கவில்லை...
கதிரேசன் மீதும்,தேவி மீதும் கோபம் இருக்கிறது என்று தெரியும் ஆனால் அது இவர்களுள் இப்படி வருடங்கள் கடந்தும் தணியாமல் நிற்கும் என்று அவர் எதிர்ப்பார்க்கவில்லை...
கதிரேசன் மாமாவின் வாழ்க்கையில் வருடங்கள் கடந்தும் தன்னால் பிரச்சனை வருகிறது என்று நினைக்கும் பொழுது தன் நிலையை பற்றி தெரிந்தும் தன் தந்தைக்காக அவருடனான திருமணப் பந்தத்திற்கு ஒத்துக்கொண்டிருக்க கூடாது என்று நினைத்தவர்...அதேப்போல வேந்தனையும் திருமணத்திற்கு வற்புறுத்தியிருக்க கூடாது என்று காலம் கடந்து யோசித்தார்...
இங்கு இருந்த கிளம்பிய தேவி தனது வீட்டிற்கு சென்றவரது கண்களில் பட்ட காட்சியோ அவரை இன்னமும் வேதனைக் கொள்ள தான் வைத்தது...