மனகஷ்டத்தை கொடுத்துவிட்டோம் என்று அழுகையால் அந்த இரவை கழிக்க ஆரம்பித்தாள்...
இங்கு வேந்தனின் வீட்டிலோ மல்லி தனது மாமியாரின் உடல் நிலையை கவனித்தில் கொண்டு சமைத்து இருக்க...அனைவரையும் ஒருவழியாக சாப்பிட வைத்தார்...அனைவரும் சாப்பிட வேண்டும் என்பதற்காக எதுவோ சாப்பிட்டனர்...
சாப்பிட்ட பின்பு மரகதம் பாட்டி திண்ணையில் படுத்துக்கொள்ள...வேந்தன் தனது அறைக்கு சென்றான்...
அறைக்கு சென்றவனது மனதில் வெறுமையும் தனிமையும் மட்டுமே நிறைந்திருந்தது..அதுவும் நிலா இன்று பார்த்து சென்ற பார்வை அவனை மிகவும் பாதித்தது...அன்று கதிரேசனை வருத்தப்பட கூறிய வார்த்தைகள் இன்று தனக்கு எதிராய் திரும்பியதை நினைத்து ஏன் அன்று அவ்வாறு சொன்னோம் என்று வேதனைக் கொண்டான்...
யார் என்ன சொன்னாலும்...எது நடந்தாலும்...நிலாவே ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவள் மட்டுமே அவனது வாழ்வில் முதலும் முடிவும் என்று உறுதி எடுத்திருந்தான்...(டேய்..அப்பறம் எதுக்குடா நான் இருக்கிறேன்..)
வானில் தெரிந்த வெண்ணிலவைப் பார்த்துக் கொண்டே தன்னிலவை நினைத்து அந்த சாய்வு நாற்காளியில் சாய்ந்தப்படி கண்மூடினான்...
அனைத்தையும் ஒதுங்க வைத்து விட்டு வந்த மல்லி அறைக்கு சென்றப் பொழுது அங்கே சந்தனப்பாண்டியன் எதுவோ யோசித்தவாறு அமர்ந்திருந்தார்...
அவரது வேதனை ததும்பிய முகம் அவர் என்ன யோசிப்பார் என்று மல்லிக்கு உணர்த்தியது...
அவரது அருகில் மல்லி அமர...ஒரு பெருமூச்சு விட்டவர்...”மல்லிம்மா..நம்ப பையன் வாழ்க்கையில இவ்வளவு பெரிய பிரச்சனை வரும்னு நினைக்கல...”என்று கூற
தனக்கும் வேதனை இருந்தாலும அதை மறைத்துக் கொண்ட மல்லி தனது கணவனுக்கு சமாதானம் சொல்ல ஆரம்பித்தார்...
“எதையும் குழப்பிக்காதீங்க...தூங்குங்க...எல்லாத்துக்கும் எழுதுனவன்(நான் தான்...நான் தான்...) ஒரு தீர்வு வச்சியிருப்பான்...” என்றார் மல்லி.
“அவன் என்ன தீர்வு வச்சியிருப்பானு எனக்கு தெரியல...ஆனா எனக்கு ஒன்னும் மட்டும் இன்னைக்கு புரிஞ்சது...அன்னைக்கு கதிரோட அம்மா அப்பாவும் இப்படி தான கஷ்டப்பட்டு இருப்பாங்க...அன்னைக்கு அவங்க செஞ்சது தப்பாதான் எனக்கு தெரிஞ்சது..ஆனா இன்னைக்கு வேந்தனோட அப்பாவா...ஒத்தவாரிசா இருக்குற நம்ப குலம் தழைக்காம போயிடுமோனு நினைகுறப்ப தான் தோணுது அவங்களும் இப்படிதான கஷ்டப்பட்டிருபாங்கனு...” என்று அவர் சொல்ல அதையே ஆமோதித்தார் மல்லியும்...
அன்னைக்கு ஒவ்வொருவருக்கும் தங்கள் பக்கம் பார்க்கும் பொழுது நியாயமாக தெரிந்த விஷயங்கள்...இன்று எதிர்பக்க நியாயத்தையும் உணர வைத்தது...
அன்று ஒருமுனையில் நின்று மட்டுமே யோசித்தவர்கள் இன்று எதிர்முனைக்கு வரும்பொழுதுதான் உணர்ந்தனர் அவரவரது மனநிலையை...ஏனென்றால் அன்று தனது நிலையில் இருந்து பிரச்சனையை எதிர்கொண்டவர்கள்.. இன்று எதிரியாளியின் நிலையில் இருந்து பிரச்சனையை பார்த்தனர்...(ஓ..இதுதான்...இளையதளபதி சொன்ன வாழ்க்கை ஒரு வட்டம் கான்செப்டா...)
கௌதம் அடுத்த நாள் விடியலிலே நாயகனைப்பிரியாளை வந்தடைந்திருந்தான்... அவன் வந்த அதே பஸ்சில் அசோக்கும் வந்திருந்தான்...தனது வாழ்வில் நடந்த சில மனகசப்பான விஷயங்களை மறக்க இவ்வளவு நாள் வெளியூரில் இருந்தான்...அந்த விஷயங்களை அவன் மறக்கவில்லை என்றாலும் அது ஏற்படுத்திய ரணங்கள் கொஞ்சம் ஆறியிருந்தந்து...அதனால் தான் அவன் தனது இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தான்...
அவனுக்கு இப்பொழுது வேந்தனின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் எதுவும் தெரியாது...
கௌதம் வீட்டிற்கு வரும்பொழுது அன்னமும் வந்திருந்தார்...அவருக்கும் நேற்று வேந்தன் பேசியதிலிருந்து தன்னால் தான் தேன்நிலா வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதோ என்ற எண்ணம் அவரை கொல்லாமல் கொன்றுக் கொண்டிருந்தது...
அதுவும் இல்லாமல் வேந்தனிடமும்,அவரது அண்ணனிடமும் பேசி இந்த திருமணத்திற்கு சம்மதம் வாங்கியவர் அவர் தானே...இந்த திருமணம் நடக்காமல் இருந்திருந்தால் இருவரின் வாழ்க்கையும் நன்றாக அமைந்திருக்குமோ என்று இப்பொழுது நினைத்துப் பார்த்தார்...அவருக்கு இதுநாள் வரை தெரியவில்லை வேந்தனுக்கு இப்படி ஒரு கோபம் கதிரேசன் மீது இருக்கும் என்று...
கௌதம் வரும்பொழுது அமைதியாக இருந்தது வீடு...அமைதியாக தனது உடைமைகளை அறையில் வைத்துவிட்டு வந்து அன்னையின் அருகில் வந்து அமர்ந்தான் கௌதம்...
தனது அன்னையின் கைகளை பிடித்துக் கொண்டவன் “என்னம்மா...”என்று கேட்க அந்த ஒரு சொல்லுக்காக காத்திருந்தது போல் அனைத்தையும் சொல்லி முடித்தார் தேவி...நேற்று நடந்தது வரை...
கௌதமிற்கு இனி சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்று புரியவில்லை... தனது தங்கையின் வாழ்கையை இனி எவ்வாறு கையாள்வது என்று அவனுக்கு தெரியவில்லை... அவர்களது புலம்பல்களை கேட்டுக் கொண்டிருந்த அன்னம் குற்ற உணர்ச்சியால் தவித்தார்...