Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 14 - ஆதி [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 14 - ஆதி [பிந்து வினோத்]

Vaanum mannum katti kondathe

எங்க வீட்டு பக்கமா அடிக்கடி வருகை தரவங்க இந்த மான்கள் இரண்டுப் பேரும்!

Vaanum mannum katti kondathe

அது என்னவோ இவங்களை பார்க்கும் போதெல்லாம் இந்த VMKK கதை தான் நினைவுக்கு வரும் :-)

இந்த இரண்டு பேருல ஒருத்தங்க பயங்கர Shy! நம்மளை பார்த்தாலே ஓடிப் போயிடுவாங்க, இன்னொருத்தங்க பயங்கர naughty! நின்னு சூப்பரா போஸ் கொடுப்பாங்க!!!

ஆனாலும் இவங்களுக்கும் VMKKக்கும் என்ன சம்மந்தம்னு நானும் யோசிச்சு. யோசிச்சு பார்க்கிறேன். இன்னும் ஒன்னும் ஸ்ட்ரைக் ஆகலை!!! கதையை முடிக்குறதுக்கு முன்னாடி இந்த intuitionக்கு காரணத்தை கண்டுப்பிடிசிடுவோம்!

உங்களுக்கு ஏதாவது hunch தோணினாலும் சொல்லுங்க :-)

ன்று காலையில் இருந்தே ஆகாஷிற்கு நிறைய வேலைகள் இருந்தது. புதிதாக அவன் கட்ட நினைத்திருக்கும் மால் தொடர்பான வேலைகள் ஒன்று மாற்றி ஒன்று வந்துக் கொண்டே இருந்தது... போன் கால்கள், மீட்டிங்குகள் என்று சென்றுக் கொண்டே இருந்த நாளின் வேலைகள் முடிந்தப் போது அவனிற்கு ‘ஹப்பாடா’ என்ற உணர்வு தான் மேலோங்கி இருந்தது...

அவனின் அறையை விட்டு வெளியே வந்து நடந்தவனின் மனதில் சினேகாவின் நினைவு ‘ஃப்ளாஷாக’ எட்டிப் பார்த்து விட்டு தான் சென்றது... ஆனாலும் நிற்காமல் நடந்தவன், லிஃப்ட்டின் அருகே சென்றப் பின் ஒரு வினாடி தயங்கி நின்றான்...

முன் தினம் மாலையில் சினேகாவுடன் படிகளில் மோதிக் கொண்டது மீண்டும் அவன் நினைவில் வந்துப் போனது.

அதிகம் யோசிக்கவிடாமல் அவனின் கால்கள் தானாக அவனை படிகள் பக்கம் அழைத்துச் சென்றது...

பொறுமையாக படிகளில் இறங்கியவன், இரண்டாவது மாடியின் வளைவில், மூன்றாவது படியின் ஓரமாக அமர்ந்திருந்த சினேகாவை பார்த்து ஆச்சர்யப்பட்டான்!

சுத்தமாக பராமாரிக்கப் படும் படிகள் தான்... ஆனாலும் இங்கே அமர்ந்திருக்கிறாளே?? அதுவும் இந்த மாலை நேரத்தில்....???

அவள் அவனை கவனித்ததாகவும் தெரியவில்லை...

சத்தம் போடாமல் வந்த வழியே திரும்பி போய் விடலாமா என்று தோன்றிய எண்ணத்தை சினேகா உட்கார்ந்திருந்த விதம் தடுத்து நிறுத்தியது!

படிகளின் ஓர சுவரில் சாய்ந்து, கன்னத்தில் கை வைத்த படி அமர்ந்திருந்தாள் அவள்... ஏதோ தீவிர யோசனையில் ஆழ்ந்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது...

எத்தனை முயன்றும் அவளை அப்படியே விட்டு விட்டு செல்ல அவனுக்கு மனம் வரவில்லை.

என்ன விஷயம் என்று தெரிந்துக் கொள்ள.

“சினேகா...” என்று அழைத்தப் படி அவளின் அருகே சென்றான்...

வேறு ஏதோ உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சினேகா ஆகாஷின் குரல் கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தாள்.

அவள் விழிகளை விரித்து பார்த்த விதம் அவனை என்னவோ செய்தது...

அவளின் முகத்தில் இப்போதும் யோசனை ரேகைகள் இருந்தது... ஆனாலும் கூடவே விரிந்திருந்த கண்களில் எக்ஸ்ட்ரா ஜொலிப்பு வந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது...

அவனைப் பார்த்ததால் வந்த ஜொலிப்பா??

மேலே யோசிக்கவும் அவனுக்கு தயக்கமாக இருந்தது...

எனவே அந்த யோசனையை தொடராமல், சிறிய இடைவெளி கொடுத்து அவளின் பக்கத்தில் அமர்ந்தான்.

“என்ன இங்கே???” என்று பேச்சையும் ஆரம்பித்தான்.

சினேகாவிற்கு நடப்பது எல்லாம் நிஜம் என்பது புரிய மேலும் சில வினாடிகள் தேவைப் பட்டது.

முன் தின மின்னல் வேக மோதல் தவிர ஆகாஷை கண்ணில் பார்த்தே எத்தனை நாட்கள் ஆகி விட்டன...

அவளுடைய கண்கள் ஆர்வத்துடன் அவனின் முகத்தில் நிலைத்திருந்தது!

அந்த பார்வையும் ஆகாஷின் கண்ணில் இருந்து தப்பவில்லை...

“என்ன ஆச்சு சினேகா???” என்று மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டான்.

இப்போது தன்னை சுதாரித்துக் கொண்ட சினேகா,

“ஒரு விஷயம் பத்தி யோசிச்சுட்டு இருந்தேன் ஆகாஷ்... சார்....” என்றாள்.

“அதென்ன இவ்வளவு பெரிய பில்டிங்கல படிகட்டுல மட்டும் உட்கார்ந்து யோசிக்குற விஷயம்???”

“அப்படியில்லை, போன் பேசிட்டே வந்தேன்... இங்கே வரும் போது பேசி முடிச்சேன்... அப்போ அப்படியே உட்கார்ந்து யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்...”

“அதென்ன அப்படி யோசிக்க வச்ச விஷயம்???”

“அது... அது... கொஞ்சம் பர்சனல் விஷயம் ஆகாஷ்... சார்...”

“ஓ!!!!”

“வந்து... என்னோட பர்சனல் விஷயம் இல்லை ஆகாஷ் சார்... என் ஃபிரென்ட் மகா அக்கா பத்தின விஷயம்... அவங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனை... அதான்...”

அவளின் குரலில் ஒலித்த கவலையை கவனித்து,

“எந்த பிரச்சனையா இருந்தாலும் சமாளிக்க ஏதாவது ஒரு வழி இருக்கும்...” என்றான் அவன் அவளை தேற்றும் விதமாக.

“நானும் அதே போல தான் யோசிப்பேன் ஆகாஷ் சார்....” என்றாள் அவள் ஆச்சர்யத்துடன்...

“அப்புறம் என்ன, நிதானமா யோசிச்சா உன் பிரென்ட் மகா ப்ராப்ளமும் சால்வ் ஆகிடும்...”

அப்படி ஈசியாக நிறைவுப்பெறும் பிரச்சனை என்றால் தான் பரவாயில்லையே.... என்று மனதிற்குள் யோசித்த சினேகா அதை பற்றி சொல்லாமல்,

“ஆமாம் நீங்க ஏன் இப்போ எல்லாம் காலையில அந்த காரிடார் வழியா வரது இல்ல???”

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 14 - ஆதி [பிந்து வினோத்]AdharvJo 2019-06-28 21:10
wow andha rendu manu kitties rombha cute irukanga ma'am wish they had known your views abt them :D As always cute update :clap: :clap: ninga innum ganganam song laye nikuringa avru jet speed la engyo poiiiiiiiiiiitaru :dance: curious to read the next update to see the progress :P (apo enakku bulb confirm than)
thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 14 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-06-28 23:49
Thank you Adharv :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 14 - ஆதி [பிந்து வினோத்]madhumathi9 2019-06-28 12:03
: wow nice epi. :clap: eagarly waiting 4 next epi. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 14 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-06-28 23:49
Thank you Madhumathi :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top