(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 01 - நந்தினிஸ்ரீ

Hello my boduguard

முன்னுரை

வாசகர்களுக்கு வேண்டுகோள்............

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் முற்றிலும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்துவதற்கு இல்லை. கதையில் வரும் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற மொழிகள் பேசப்படும் வாசகர்களுக்கு படிக்க இயல்பாக இருக்க வேண்டுமென்பதால் ஹிந்தி , ஆங்கிலம் உரையாடலை தமிழில் எழுதி இருக்கிறேன் இந்த கதைக்கேற்ப வாசகர்கள் மொழியின் உரையாடலை கற்பனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ற்போது சென்னையில்.............

சண்டே ஈவினிங் எங்கே பார்த்தாலும் பளிச் பளிச்சென்று பல பல வண்ணங்களில் மின்னும் எல்.இ.டி விளக்குகள்,சிவப்பு நிறத்தில் வானத்திற்கு நடுவே வானவில் போல் விரிந்திருக்கும் ரெட் கார்பெட்டுகள், கோல்டன் தீமில் ஜொலி ஜொலிக்கும் தங்கம் போல் அமைக்கப்பட்டிருக்கும் அரங்கம்,மின்னலை போல படம் பிடித்துக்கொண்டிற்கும் கேமராக்கள். மறுபக்கம் கையில் மைக்கோடு பேட்டி எடுக்க ஆர்வமாக நிற்கும் பத்திரிக்கையாளர்கள்,அரங்கத்தின் வெளியிலிருந்து வரும் ரசிகர்களின் ஆரவார சத்தம் மொத்தத்தில் விழா கோலம் போல் திகழ்கிறது சென்னையின் லிப்கா அரங்கம். அழகான அதிக பரப்பளவை கொண்டு கண்ணை கவரும் வகையில் கட்டப்பட்ட பிரமாண்டமான அரங்கம். எந்தவொரு முக்கியமான விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றால் அது லிப்காவில் மட்டுமே நடைபெறும்.

குட் ஈவினிங் மக்களே! வெல்கம் டு "சவுத் இந்தியன் கோல்டன் அவார்ட்ஸ் 2017" இன்னிக்கு நாம ரொம்ப எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருக்கும் கோல்டன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடக்கப்போது நமக்கு பிடிச்ச டாப் நடிகர், நடிகைகள் ,பாடகர்கள், டான்ஸ் மாஸ்டர்ஸ், டைரக்டர்கள் நிறைய பேர் வர போறாங்க அதனால இப்ப நாம பண்ணவேண்டியது ஒன்னே ஒன்னு மட்டும் தான் ஹேயா வீட்ல ஒட்கார்ந்துட்டு நமக்கு பிடிச்ச ஸ்டாரஸ்ஸ ரசிக்க வேண்டியதுதான். இன்னும் கொஞ்ச நேரத்துல நிகழ்ச்சி தொடங்கபோது சோ.....லெட்ஸ் மூவ் என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து தனது மைக்கொடு கிளம்பினான் ஆன்கர் விஜய்.

மாலை ஆறு மணி ஆகிவிட்டது கோலிவுட்டின் பிரபலமான நட்சத்திரங்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தனர். கறுப்பு குதிரை போல காட்சியளிக்கும் உலகின் மிக விலை உயர்ந்த காரண ரோல்ஸ் ராய்ஸ்யில் வந்து இறங்கினார் நம் ஆக்சன் ஸ்டார் நீரவ் குமார். நீரவ் பார்ப்பவர் மனதை கொள்ளையடிக்கும் மேன்லியான தோற்றத்தை கொண்டவர்.ஆறடி இரண்டு இன்ச் உயரம், மாநிறம், மாகினேட் போன்ற ஈர்க்கும் கண்கள், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வைத்திருக்கும் இன்றைய ஜெனீரேஷணனின் ட்ரெண்டான "பொம்படெளர்" ஹேர் ஸ்டைல் மற்றும் பியர்டு வைத்துகொண்டு ஸ்டைலான கறுப்பு நிற கோட் அண்ட் சுய்ட்ஸ் போட்டுகொண்டு காரில் இருந்து இறங்கி ரோலக்ஸ் வாட்ச் அணிந்திருக்கும் தன் கையை ரசிகர்களுக்கு உயர்த்தி காட்டி தன்னுடைய மில்லியன் டாலர் ஸ்மைல்லை வெளிபடுத்தினார்.

ஆக்சன் ஸ்டார் ஆக்சன் ஸ்டார்!

எங்கள் நீரவ் குமார் தான் சூப்பர் ஸ்டார்!

என்று நீரவ் கை காண்பித்தவுடன் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திகைத்து கோஷமிட்டனர். நீரவ் அழகாக விரிகிப்பட்டிருந்த ரெட் கார்பெட்டில் நடந்து வந்து அங்கு ஓரமாக இருக்கும் ரோப்புக்கு வெளியே நிற்கும் தனது ரசிகர்களோடு செல்பி எடுத்துக்கொள்வது மட்டுமில்லாமல் தனது ஸ்டைலான ஆட்டோக்ராப்ப்பை "வித் லவ்" என்று ஹார்டின் குறிப்போடு நீரவ் என ஆட்டோகிராப் செய்தார்.அங்கிருந்து நகர்ந்து கோல்டன் பலூன்களால் அலங்கரித்த கேலரியில் ஏறி நின்று பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தார்.

ஹலோ சார், இந்த வருடம் "சவுத் இந்தியன் கோல்டன் அவார்ட்ஸ் 2017" யில் நீங்க மூன்று கேட்டகிரில நாமினேட் ஆயிருக்கிங்க அதை பற்றி நீங்க என்ன நினைகிருங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?அப்கோர்ஸ் ,நான் ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் நினைக்கிறேன்.இந்த சினிமா துறையில நான் கடந்த பத்து வருஷமா கஷ்டப்பட்டு உழைச்சிற்கேன் அதுக்கான பரிசா இந்த விருதுகளை நான் கருதுகிறேன் என்று பத்திரைக்கியாளர்களுக்கு பதில் அளித்தார் நீரவ்."இன்னொரு முக்கியமான கேள்வி சார்,உங்களோடு இணைந்து ஜோடியாக நடித்த நடிகைகள் சாரா அப்பறம் சோனாளி இவங்க ரெண்டு பேரும் சிறந்த நடிகை கேட்டகிரில நாமினேட் ஆயிருக்காங்க யாரு இதுல வின் பண்ணுவாங்கனு நீங்க நினைக்கிறீங்க சார்?"

நீரவ் இந்த கேள்விக்கு கொஞ்சம் ஜர்க் ஆகிவிட்டார் என்று கூட சொல்லலாம் ஆனால் கேமரா முன் தனது இமேஜை கெத்தாக மைண்டைன் பண்ணுவது நீரவின் ஸ்டைல் அதனால் சற்றும் திகைக்காமல் சிரித்துக்கொண்டே ,என்னை பொறுத்தவரைக்கும் இரண்டு பேரும் சிறந்த நடிகைகள் தான் நடிப்புல ரெண்டு பேரும் அவங்களுக்குனு ஒரு தனி ஸ்டைல் வச்சுருக்காங்க "சோ... போத் ஆர் டூ குட்" என்று சொல்லிவிட்டு ஐயோ, அப்பா ஆள விடுங்கடா சாமி என்று மனதில் நினைத்துக்கொண்டு அங்கிருந்து நடையை கட்டினார் நீரவ்.

தென் இந்தியாவின் மிக பெரிய டைரக்டரான ராகேஷ் வர்மா வந்துட்டு இருக்காரு வாங்க

அவர்கிட்ட சில கேள்விகள் கேட்போம் என்று மைக்கை ராகேஷின் முன் நீட்டினான் ஆன்கர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.