Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 07 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 07 - சசிரேகா

En ithayam kavarntha thamaraiye

ட்டன் சத்திரம்

விடிகாலை மணி 5

தாமரையின் வீட்டுக் கதவை தட்டினான் வீரபாண்டியன். அந்நேரம் மெதுவாக கண்விழித்தாள் தாமரை வீராவை நினைத்துக் கொண்டு சரியாக உறங்காமல் விடிகாலையில் உறங்க ஆரம்பித்தவளுக்கு கதவு தட்டும் சத்தம் கொடுமையாக இருந்தது

இந்நேரம் யாருஎன நினைத்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.

நேராக வாசக்கதவை திறந்துப் பார்க்க அங்கு சோர்வாக வீரபாண்டியன் நின்றுக் கொண்டிருந்தான். அவனைக்கண்டதும் மகிழ்ந்துச் சிரித்தாள். அவனும் அவளைப்பார்த்து போனால் போகட்டுமென குறுநகை பூத்தான். அதில் அவளும் மகிழ்ந்து அவன் அருகில் நெருங்க அதற்குள் சண்முகம் வந்தார்

வாப்பா பாண்டியா வாவாஎன அன்பாக அழைக்க வீராவும் தாமரையை பார்த்தான் அவளும் ஒதுங்கி நிற்க வீட்டுக்குள் நுழைந்தான் வீரா.

என்னப்பா இந்நேரம் வந்திருக்க

ஒரு வேலை இருந்திச்சி மாமாஎன சோர்வாக சொல்ல அதைக்கண்ட சண்முகமோ

சரி சரி நீ போய் முதல்ல தூங்குப்பா அப்புறம் பேசிக்கலாம்என சொல்லியவர் தாமரையை பார்த்து கண்ஜாடை செய்ய அவள் உடனே புரிந்துக் கொண்டு வீராவிடம் வந்தாள். அவனும் அவளுடன் படுக்கை அறைக்குச் சென்று கட்டிலில் அமைதியாக அமர்ந்தான்

நீங்க தூங்குங்கஎன சொல்லிய தாமரையை ஏக்கமாக பார்த்தான் வீரா

என்னங்க என்னாச்சிங்கஎன அவள் அக்கறையாக விசாரிக்க அவனோ ஒன்றுமில்லை என்பது போல் தலையாட்டிவிட்டு படுத்து கண்கள் மூடினான். அவனையே 10 நிமிடம் பார்த்தாள். வீரா அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கவே அவசரமாக அறையை விட்டு வெளியேறினாள்.

அவர் வந்திருக்காரு, டயர்டா இருக்காரு, சாப்பிட்டாரான்னு தெரியலை, நேரத்தோட சமைச்சிடலாம்என நினைத்தவள் உடனே தன் தந்தையை தேடிச் சென்றாள். அங்கு அவரோ வெளியே செல்வதற்கு ஏற்ப உடை அணிந்துக் கொண்டு பீரோவில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அதைக்கண்ட கல்யாணி அவரிடம்

எங்க போறீங்கஎன கேட்க அவரோ

பாண்டியன் வந்திருக்கான்

மாப்பிள்ளையா அடடா ஏங்க சொல்லலைஎன அவசரமாக எழ முயன்றவரை தடுத்தார் சண்முகம்

பொறு அவன் தூங்கறான்என சொல்ல அதற்குள் தாமரை வந்தாள்

அப்பாஎன அழைத்துக் கொண்டு வந்தவளை என்னவென்பது போல் பார்த்தார். அவளோ

அப்பா வெளிய போறீங்களா

ஆமாம்மா என்ன வேணும்

அப்பா அவர் ரொம்ப டயர்டா இருக்காரு, சாப்பிட்டாரா இல்லையான்னு தெரியலை, நீங்க போய் கறி வாங்கிட்டு வாங்கப்பா

கடை இந்நேரம் திறந்திருக்க மாட்டான்மா அப்புறம் போய் வாங்கிட்டு வரேன்என சொல்லியவரின் கையில் கட்டுகட்டாக பணம் இருப்பதைக்கண்ட தாமரையோ குழப்பத்துடன்

எதுக்குப்பா இவ்ளோ பணம் கையில வைச்சிருக்கீங்க

மாப்பிள்ளை முகத்தை பார்த்தேன் தாமரை, அவர் வீட்ல நமக்கு அனுகூலமா எதுவும் நடக்கலை போல, அதான் முகத்தை தொங்க போட்டுக்கிட்டு வந்திருக்காரு அங்க நடந்ததை சொன்னா நாம கஷ்டப்படுவோம்னு அவர் நினைச்சி உள்ளுக்குள்ள வருத்தப்படறாரு. அதான் அவருக்கு உதவலாம்னு நினைக்கிறேன்என சொல்ல தாமரையும்

ஆமாம்பா அவரோட அம்மா என்னை ஏத்துக்கலை போல என்ன செய்றதுன்னு தெரியாம திரும்பி வந்திருக்காரு அவர் முகமும் சரியில்லை எதுவுமே பேசலை

அதேதான் பேசாம மாப்பிள்ளைகிட்ட சொல்லி தனிக்குடித்தனம் போயிடு, அதுக்கான பணம் தரேன் இந்நேரம் அவர்ட்ட பணம் இருக்குமோ இருக்காதோ

ஏன்ப்பா அப்படி சொல்றீங்க

”2 வாரம் முன்னாடிதான் தனக்குன்னு புதுசா கடை திறந்தான் பாண்டியன், அதுக்கே பணம் செலவாயிருக்கும், இப்ப தனியா குடித்தனம் ஆரம்பிக்க பணம் தேவைப்படுமே

முதல்ல என்னாச்சி ஏதாச்சின்னு கேளுங்கப்பா, அப்புறம் பணத்தை கொடுக்கலாம், முதல்லயே கொடுத்தா அவர் கோச்சிக்கப் போறாரு

அது என்னவோ உண்மைதான், இருந்தாலும் நம்மகிட்டயும் எவ்ளோ பணம் இருக்குன்னு எண்ணிப் பார்த்துக்கறேனே

சரிப்பாஎன சொல்லியவள் தன் தாயைப் பார்த்தாள்

அம்மா வாம்மா டிபன் ஏதாவது சமைச்சி வைச்சிடலாம்என அழைக்க அவரோ

முதல்ல நீ போய் குளி, நானும் குளிச்சிடறேன் அப்புறமாதான் கிச்சனுக்குள்ள நுழைய முடியும் போம்மாஎன அனுப்ப அவளும் அவசரமாக குளிக்கச் சென்றாள்.

வீரபாண்டியன் கண்கள் திறக்கவே மணி 10 ஆனது. நல்ல தூக்கம் தூங்கிவிட்டான். நிம்மதியாக இருந்தது. நேற்று நடந்த நிகழ்வுகள் மனதை பாதித்தாலும் தாமரையுடன் இருப்பது

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 07 - சசிரேகாmadhumathi9 2019-06-28 05:52
wow nice epi sasi (y) veera oruvazhiya thaamaraiyai purinthukondathu mikka magizhchi :-) aduththa epiyai padikka miga aavalaaga kaaththu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 07 - சசிரேகாதீபக் 2019-06-27 18:33
Sis today's episode is full of sentiments scenes super :clap: . :thnkx: for this episode. Vera's small fight with thamarai and super (y) . Eagerly waiting for next episode :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top