(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - சிவகங்காவதி - 20 - ஸ்ரீ

sivaGangavathy

பாலைத் திணைஇளவேனிற் பத்து

இளவேனில் காலத்தில் திரும்பிவிடுவேன் என்று உறுதி கூறிவிட்டுத் தலைவன் பொருளீட்டச் செல்கிறான்.இளவேனில் பருவம் வந்தும் தலைவன் திரும்பவில்லை.எனவே தலைவி தன் தோழியிடம் சொல்லித் தலைவி கலங்குகிறாள்.இதில் உள்ள பத்துப் பாடல்களும் தலைமகன்பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்டதலைமகள் சொல்லியது.  

அவரோ வாரார்தான் வந்தன்றே

குயில் பெடை இன் குரல் அகவ,

அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே! --341        

பெண் குயில் தன் இனிய குரலில் பாடுகிறது.ஆற்றில் வரும் தெளிந்த நீரில் நுண்ணிய மணல் படிகிறது.அவர் வரவில்லை.இளவேனில் வந்துவிட்டது.

ன்று நடந்த சம்பவங்கள் எதுவும் மதகுருவின் காதுகளை எட்டியிருக்கவில்லை.மறுநாள் வழக்கம்போல் அரசவைக்கு வந்தவரை எதிர்கொண்டு நின்றான் நஸீம்.

உசூர்!!”

தங்களிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை மதகுரு அவர்களே!”

என்ன!!என்ன சொல்கிறீர்கள் எதைப் பற்றி??”

காசிம் இப்போது சிறையில் இருக்கிறான்.”

காசிம்??!?!!!!”

ஆம் நீங்கள் வளர்த்த உங்களின் காசிம் தான்.”

“…..”

ஏன் இவ்வாறு செய்தீர்கள் அவன் வாழ்வையே அழித்து விட்டீர்களே!எதற்காக என் மீது இப்படி ஒரு குரோதத்தை வளர்த்துவிட்டீர்கள்?”

அவனுக்கு எப்போதுமே தங்கள் மீது நல்லதொரு எண்ணம் இருந்ததில்லை.அவனிடத்தை தட்டிப் பறித்த எதிரியாகவே தங்களை எண்ணியிருந்தான்.அவனைப் பற்றிய விவரம் எனக்குத் தெரிய வந்ததே காலதாமதமாக தான்.

அந்த நேரத்தில் தான் தாங்கள் நம் ராஜ்ஜியத்தை கைப்பற்றியிருந்தீர்கள்.அப்போது வந்து இவனைப் பற்றி கூறி மீண்டும் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் ராஜ்ஜியத்தின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்ற காரணத்தினால் தான் அமைதி காத்தேன்.

அவனுக்கு நம் மதத்தின் அத்துனை போதனைகளையும் பயிற்றுவித்து எனக்கடுத்த அரச மதகுருவாக அவனை ஆக்க வேண்டும் என்பதே என் அவா.

அவனும் நான் கற்றுத் தரும் அனைத்தையும் சிரத்தையாகவே கற்றுத் தேர்ந்தான்.உங்கள் மீதான கோபம் கூட குறைந்துவிட்டது என்றே எண்ணியிருந்தேன்.

அப்போது நடந்ததுதான் தங்களின் நிக்காஹ்.அதை என்னால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடிவில்லைஅவனை சந்தித்தபோது அதைப் பற்றியும் தாங்கள் என்னை அவமதித்ததைப் பற்றியும் அவனிடம் கூறினேன்.

அப்போதுதான் உங்கள் மீதான அவன் வன்மம் பலமடங்கு இருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன்.அன்றைய மனநிலையில் அவன் கூறிய அனைத்தும் சரியாகவே பட்டது எனக்கு.தங்கள் மனைவியை உங்களிடமிருந்து பிரிப்பதற்காக வீரர்கள் இருவரை வைத்து அவர் கேட்கும்படி உங்களைப் பற்றி தவறான கருத்துக்களை தெரிவிக்க வைத்தேன்.

ஆனால் நானே எதிர்பாராதது தங்கள் மனைவியை அவன் கொல்லத் திட்டமிட்டது.அது நிறைவேறாமல் போனபோதே நான் அவனை முடிந்தளவு எச்சரித்தேன்.அதையும் கடந்து தங்களிடம் சிக்கிவிட்டான்.”,என்றவர் தலை குனிந்து நின்றார்.

மதகுரு அவர்களே வார்த்தைக்கு வார்த்தை அவளை என் மனைவி என்கிறீர்களே அதையும் கடந்து அவள் இந்த ராஜ்ஜியத்தின் அரசி அதை மறக்க வேண்டாம்.

தங்களின் வயதிற்கு ஏற்ற காரியமா இவையெல்லாம்.வயதில் சிறியவனான என் முன் இவ்வாறு தலைகுனீந்து நிற்கும் நிலைமையை தங்களுக்குத் தாங்களே ஏற்டுத்திக் கொண்டீர்களே!

மனம் மிகுந்த வேதனை அடைந்திருக்கிறது.அல்லாஹ்வின் அத்தனை அருளையும் ஆசியும் பெற்றிருக்கும் தாங்கள் இத்துனை கீழ்த்தரமாய் செயல்பட்டிருக்க வேண்டியதில்லை.

எது எப்படியோ சற்று நாட்களுக்கு ஹஜ் யாத்திரை சென்று வாருங்கள்.இறைவனைத் தேடிய பயணம் உங்களுக்கு நிச்சயமாய் மன அமைதியை கொடுக்கட்டும்.அதன் பிறகாவது நல் எண்ணங்களை மட்டும் மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள்.சென்று வாருங்கள்

காசிம்!!!”

அவன் என் சகோதரன் அவனை எவ்வாறு கவனிக்க வேண்டுமென்று யாம் அறிவோம்.தாங்கள் செல்லலாம்.”,என்றவன் அங்கிருந்து சென்றுவிட அவருக்கோ தன் தவறு முதன் முறையாய் புரிந்தது.

அன்று இரவு நஸீம் சிவகங்காவதியை சந்திப்பதற்காக அவளிடத்திற்கு வந்தான்.மிகவும் களைத்திருந்தவனைப் பார்த்தவளுக்கு மனம் இளகிவிட்டது.

ஏன் இத்துனை சோர்வாய் இருக்கிறீர்கள்.உணவு ஏதேனும் எடுத்து வரவா?”

அதெல்லாம் வேண்டாம் கங்கா எப்போதுமே உடற் சோர்வை விட மனச் சோர்வு மனிதனை எளிதில் பலகீனமாக்கி விடுகிறது.”

என்னவாயிற்று மதகுருவிடம் பேசினீர்களா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.