(Reading time: 14 - 28 minutes)

மணி காலை எட்டு மணியை நெருங்கி கொண்டிருந்தது...ஆனால் அனைவரும் ஒரே நிலையில் தான் அமர்ந்திருந்தனர்...

அப்பொழுது தனது அறையின் கதவை திறந்துக் கொண்டு வெளியில் வந்தாள் தேன்நிலா...

அவளது அறை கதவும் திறக்கும் சத்தத்தை உணர்ந்த கௌதம் தனது தங்கையை எவ்வாறு சமாதானப் படுத்த அவன் நினைத்த விஷயங்களை எல்லாம் ஓட்டிக் கொண்டிருந்தவன் பல நிமிடங்களாகியும் தனது  தங்கை  அருகே  வரவில்லை என்று திரும்பிப் பார்க்க  அவள் எங்கோ செல்ல தயாரகியிருந்தாள்...

அவன் எதிர்ப்பார்த்த தேன்நிலா இவள் இல்லை... அவளது இந்த செயலிலே புரிந்துக் கொண்டான் அவளது முடிவின் வீரியத்தையும், அதற்கான அவளது உறுதியையும்... அவனது இந்த யோசனையை தடை செய்தது தேன்நிலாவின் குரல்...

“எப்ப அண்ணா வந்த...இப்ப எதுக்கு இந்த திடீர் பயணம்...” என்று இலகுவாக அவனிடம் பேச ஆரம்பித்திருந்தால் அவனது பாசமலர்...

கௌதமும் அவளது கேள்விக்கு இலகுவாக பதில் அளிக்க, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவள் கோவிலுக்கு போக போவதாக கூறிய கிளம்பினாள் அவளது வாழ்க்கையில் அவளை  பாதிக்கும் அளவு எதுவும் நடக்கவில்லை என்பது போல்...

அவளது  இந்த நடத்தைகள்  தான் அவளை சார்ந்தவர்களை பயம் கொள்ள செய்தது...

இங்கு இவள் இப்படி இருக்க அதற்குள் இவளது விஷயம் ஊர் முழுக்க பரவியிருந்தது...

வீட்டிற்கு வந்த அசோகிற்கும் இந்த விஷயத்தை அவனது அன்னை  சொல்ல... அதிர்ச்சியடைந்த  அசோக் தனது நண்பனை காண அவனது வீட்டிற்கு சென்றான்...

வேந்தனின் வீட்டிற்கு சென்ற அசோக்கை வரவேற்றது என்னவோ அனைவரதின் உணர்ச்சி துடைத்த முகமே...

மல்லியிடமும்,சந்தனபாண்டியனிடமும் நலம் விசாரித்தவன் வேந்தன் இருக்குமிடம் அறிந்துக் கொண்டு அவனிடம் சென்றான் அசோக்.

வேந்தன் அவர்கள் வீட்டின் தோட்டத்தில் இருந்த வேப்பமரத்தடியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தான்...

அவனது பக்கத்தில் இருந்த நாற்காலியில் போய் அமர்ந்தான் அசோக்... அரவத்தை உணர்ந்து திரும்பி பார்த்த வேந்தன் அசோக்கை அங்கு எதிர்ப்பார்க்கவில்லை... அவனை பார்த்தவுடன் அவனது முகத்தில் சிறிய முறுவல் வந்து அமர்ந்தது...

“வாடா அசோக்...எப்படி இருக்கடா...” என்று வேந்தன்  அவனை நலம் விசாரிக்க

“நல்லா இருக்கேன்டா..”என்று சொன்னான் அசோக்

“நீ ஊருக்கு வர இன்னும் நாளாகுமுனு பார்த்தேன்...பரவாயில்லை சீக்கிரம் வந்துட்ட..” என்று  வேந்தன் கேட்க

“ஏனு தெரியல வரணும்னு தோணுச்சு...அதான் வந்துட்டேன்...ஆனா வந்ததும் நல்லதுக்கு தான் போல...” என்று அவன் வேதனையோடு  கூற

அவனது இந்த குரலை வைத்தே அவனுக்கு அனைத்தும் தெரிந்துவிட்டது என்று புரிந்துக்கொண்டவன்,”டேய் அவளை பத்தி உனக்கு தெரியாத...அவளால என்னை பிரிஞ்சு இருக்க முடியாதுடா...இதுல இன்னொரு காமெடி  என்ன தெரியுமா அவ  எனக்கு   இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கிறாளாம்..”என்று அவளது முடிவை  தனது நண்பனிடம் பகிர்ந்துக்கொண்டிருந்தான்...

“டேய் அப்படியா சொல்லுச்சி தேனு..”என்று அசோக் கேட்க  வேந்தன் ஆமாம் என்று தலையசைத்தான்...

“டேய் தேனு ஏதோ தீவிரம ஏறங்கி இருக்கு போல...பார்த்துடா..” என்று அசோக் கூற

“நீ பயப்படற மாதிரி எதுவும் நடக்காது டா... அவளை பத்தி எனக்கு தெரியும்... நாளைக்கே அவ இங்க வருவா பாரு...”என்று வேந்தன் சொல்ல தேன்நிலாவின் காதலின் அளவை பக்கம் இருந்து பார்த்தால் அசோக்கும் எதுவும் சொல்லாமல் அதை ஆமோதித்தான்...

அவர்களுக்கு தெரியவில்லை தேன்நிலா வேந்தன் சொன்னது போல் அடுத்த நாள் வருவாள் அதுவும் வேந்தனுக்கு பெண்பார்த்துக் கொண்டு வருவாள் என்று அவர்களுக்கு தெரியவில்லை...வேந்தனின் அத்தனை நம்பிக்கையையும் உடைத்தெரிந்தாள் தேன்நிலா...

காதலி காதலிக்க படுவாளா...

Episode # 13

Next episode will be published as soon as the writer shares her next episode.

Go to Kathal kathalitha kathaliyai kathalikkum story main page

{kunena_discuss:1175}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.