(Reading time: 14 - 28 minutes)

அவளிடம் அனைவரும் பேசியாகிற்று.. மரகதம் பாட்டி கூட அவர் பங்கிற்கு எடுத்து சொல்லிவிட்டார்...ஆனால் அவள் அப்படியே தான் தன் முடிவில் இருக்கிறாள்...

அனைவரின் பார்வையும் அவளது முடிவிற்கு என்ன காரணம் என்பது போல் வேந்தனை பார்க்க...கதிரேசன் மட்டும் நீ நினைச்சதை சாதிச்சுட்டால என்ற பார்வை பார்த்தார்...

அவரது பார்வையின் வேதனை அவனுக்கு புரிந்தது...இப்பொழுது அவர் அவ்வாறு தான் நினைப்பார் அன்று அவ்வாறு தானே அவரிடம் நான் பேசினேன் என்றநினைவு அவனுக்கு இப்பொழுது வந்தது...அன்று அவன் கோபத்தில் பேசிய வார்த்தைகளை  இன்று அவனுக்கே எதிரியாக வந்து நிற்கிறது..

ஒரு பெருமுச்சிவிட்டு விட்டு தன் அன்னையை பார்க்க அவரது கண்களோ அவளிடம் நீயவாது பேசி பார் என்று சொல்லாமல் சொல்லியது...

தனது அன்னையின் கண்கள் சொன்ன செய்தியை புரிந்துக் கொண்டவன் தேன்நிலாவிடம் சென்றான்...

அவான் தன்னை நோக்கி வருவதை புரிந்துக் கொண்டவள் அவனது அருகில் தான் தளரக்கூடாது என்று  தனக்குள் உறுப்போட்டுக் கொண்டாள்...

“நிலா...நம்ப  ரூமுக்கு போ...என்னோட கோபமும்...உதாசீனம் தான் உன்ன இந்த முடிவு எடுக்க வச்சிருக்குனு எனக்கு புரிது... இனிமே இப்படி நடக்காது நான் என்ன மாத்திகுறேன்...நீ இப்போ போய் ரெஸ்ட் எடுத்துக்கோ நாம அப்புறமா இத பத்தி பேசலாம்...”என்று வேந்தன்  தேன்நிலாவிடம் கூற அவளோ அவன் கூறியது எதுவும் தனது காதில் விழவில்லை என்ற நிலையில் இருந்தாள்...

அவன் கூறி பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் அவள் நகர்ந்தால் இல்லை..அவள் நின்ற இடத்திலே இருந்தாள்...அது வேந்தனின் கோபத்தை  கிளற ஆரம்பித்தது...

“நிலா...நான் உன்கிட்ட தான் அவன் திரும்ப சொல்லிட்டு இருக்கேன்..மேல ரூமுக்கு போ...” என்று  கோபமாக சொல்ல அப்பொழுதும் அவள் செல்வதாக தெரியவில்லை...அவளை அடிக்கும் ஆத்திரம் வந்தாலும் அவளது நிலை அவனை அமைதியாக இருக்க செய்தது...இவள் சரிபட்டு வரமாட்டாள் என்று முடிவு செய்தவன்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அம்மா இவள எங்க ரூமுக்கு கூப்பிட்டு போங்க...தேவி அத்தை நீங்க கிளம்புங்க...அவ எங்கேயும் வர மாட்டா...”என்று வேந்தன்  கூற

“இல்ல நான் எங்க அப்பா கூட போகதான் போறேன்..” என்று  தேன்நிலாவிடமிருந்து பதில் வந்து தொலைத்தது...

அவளிடம் இப்படியெல்லாம் பேசினால் கதையாகது என்று புரிந்துக் கொண்டவன்...

“இப்ப புரியுதா...நீ என்கிட்ட வந்து காதல் சொல்றப்பலாம் என் வந்து வேணாம் வேணாம்னு சொன்னேனு  புரியுதா...உனக்கு வந்ததுக்கு பேரு காதல் இல்லை உணமையானா காதல்னா என்னோட கோபத்த ஆறு மாசம் கூட தாங்க முடியாம உன்னோட அப்பா வீட்டுக்கு போக சொல்லாது...

இதுக்குதான் நான் உன்னை வேண்டாம்னு சொன்னேன்...உன்கிட்ட  நான் முகம் கொடுத்து  பேசாததால வந்த ஆர்வம்...அப்பறம் அந்த வயசுக்கே இருக்குற ஒரு கவர்ச்சி இது தான் உனக்கு என் மேல இருந்தது...அதுக்கு பேர் காதல்னு நீயா உரு போட்டுக்கிட்டு இப்ப எல்லாரையும் இந்த நிலைமையில நிக்க வச்சி இருக்க...”என்று அவன் சொல்லி முடிக்கவும்

அடுத்த நிமிடம் அவள் அவனது சட்டையை  பிடித்திருந்தாள்...

“என்னோட காதல நீ இனகவிர்ச்சினு சொல்லிட்டல..அப்படியே வச்சிக்கோ...ஆனா நான் இப்ப உன்ன விட்டுட்டு போறதுக்கு  காரணம் உன்கூட வாழறதுக்கான  தகுதி என்க்கு இல்ல அதனால தான் நான் போறேன்...’என்று அவள் சொல்ல அதுவரை அவர்கள் பேசியதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மரகதம் பாட்டி அவளது  அருகில் வந்து...

“அப்படி யார்டி சொன்ன என்னோட பேத்திக்கு என்னோட பேரனோட வாழறதுக்கு எல்லா தகுதியும் இருக்குடி..இந்த கிழவி நான் சொல்லுறேன்டி...”என்று அவர் சொல்லி முடிக்க அவரை கட்டிக் கொண்டு கதற ஆரம்பித்திருந்தாள் தேன்நிலா...இதுவரை அவளை பேத்தியாய் ஒரு முறை கூட பார்க்காதவர் இப்படி பேசியது அவளுக்கு அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது...

அவளது கண்ணீர் மரக்தத்திருக்கு கூட அழுகையை வர வைத்திருந்தது...

“ஏன்டா கண்ணு..இப்படி அழுற பாட்டிகிட்ட சொல்லுடா...உனக்கு என்ன பிரச்சனைன்னு...” என்று அவர் கூறி முடிக்க

“பா...பாட்டி என்னால இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிச தர முடியாது பாட்டி...”என்று அவள்  சொல்லி முடிக்க எல்லாருக்கும் அந்த விஷயம் அதிர்ச்சியை தந்தது...

வேந்தனுக்கு இவளுக்கு எப்படி தெரியும் என்ற எண்ணம் வந்து குழப்ப... மற்றவர்களுக்கு  அவள் கூறியது...பேரதிர்ச்சியை தந்தது...

மரகதம் பாட்டிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவர் தனது அதிர்ச்சியை மறைத்து,”அப்படி யார்டி உன்கிட்ட சொன்னா...யாரோ உன்னோட மனச கலைச்சி இருக்காங்க...அப்படியெல்லாம் எதுவும் இல்லடி என்னோட தங்கம்...”என்று மரகதம் கூற

அவளது பதில் வேந்தனின் குழப்பதிற்கு விடையாய் கிடைத்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.