(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - சிவகங்காவதி - 07 - ஸ்ரீ

sivaGangavathy

வளைப்பத்து

வளை என்ற சொல் சங்கைக் குறிக்கும்; இது நெய்தல் நிலக் கருப்பொருள்களில் ஒன்று. வளை - வளையல் இடம் பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி வளைப்பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

கடற்கோடு செறிந்த வளைவார் முன்கைக் 

கழிப்பூத் தொடர்ந்த இரும்பல் கூந்தல் 

கானல் ஞாழல் கவின்பெறும் தழையள் 

வரையர மகளிரின் அரியளென் 

நிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே.- (191)

பாங்கன், உன் மனத்தைக் கவர்ந்தவள் எத்தகையவள் என்று கேட்க, தலைவன் அவளைப் பற்றிக் கூறிய கருத்தமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது இந்தப் பகுதி.

நெய்தல் திணைப் பகுப்புகளில் தாய், தோழி, தலைவன், பாணன் ஆகிய நான்கு இயல் கொண்டு அதாவது கேட்போரைக் கொண்டு பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஞாழல், குருகு, காக்கை, நெய்தல், வளை ஆகிய ஐந்து கருப்பொருள் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன.தொண்டி நகரத்தைக் கொண்டு ஒன்று தொகுக்கப்பட்டுள்ளது.

ன்றைய இரவு தூக்கம் கண்களைத் தழுவ மறுத்து ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது சிவகங்காவதிக்கு.ஒரு ஓரமாய் அமர்ந்து கண்ணீர் வற்றிவிடும் அளவிற்கு அழுது தீர்த்தாள்.தன் தந்தையை இறுதியாய் ஒருமுறைப் பார்க்கக் கூட முடியாத பாவியாகி விட்டதாகவே எண்ணிணாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதிகாலையில் வழக்கம்போல் அவளுக்கான பணிகளோடு நாளைத் தொடங்க ஆரம்பித்தவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை அன்றைய நாள் இன்னும் மோசமாய் இருக்கப் போகிறது என்று.

நஸீம் காவலாளிகளுக்குப் பலவித ஆணைகளைப் பிறப்பித்திருந்தான்.ஏன் எதற்கு என்றே தெரியாத கோபமும் வன்மமும் அவன் மனதை நிரப்பியிருந்தன.அதை வெளிகாட்டும் வழியறியாமல் சிவகங்காவதியை வாட்டியெடுக்கத் தயாரானான்.

வழக்கமாய் அவள் செய்யும் பணிகளை விட மூன்று மடங்கு வேலைகள் கொடுக்கப்பட்டன.அன்றைய உணவோ அத்துனை காரமாய் வாயில் வைக்க முடியாத அளவு மோசமாய் இருந்தது.சாப்பிடும் நேரம் தவிர இளைப்பாறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மற்ற நாளில் எப்படியோ முந்தைய நாளின் தூக்கமின்மையும் மனதின் சோர்வும் அதோடு சேர்ந்த உடல் சோர்வும் மொத்தமாய் சேர்ந்து அவளை கடும் காய்ச்சலில் தள்ளி விட்டிருந்தது.

பின் மாலைப் பொழுதில் கால்கள் குறுக்கி நினைவின்றி படுத்துக் கிடந்தவளுக்கு நேரம் ஆக ஆக குளிரில் உடல் மொத்தமாய் தூக்கிப் போட ஆரம்பித்திருந்தது.காவலாளிகளுக்கு சிவகங்காவதியைப் பற்றிய எந்த செய்தியானாலும் நஸீமிடம் தான் நேரடித் தகவல் வரவேண்டும் என்ற கட்டளையிடப் பட்டிருந்த காரணத்தால் அவனிடம் சென்று அவளின் நிலையைத் தெரிவித்தனர்.

காவலாளிகளை அனுப்பி சமீராவோடு இரு பணிப் பெண்களையும் அழைத்து வருமாறு பணித்தவன் அங்கு சென்று அவளைக் காண ஒரு பெண்ணாய் இருப்பதால் தொடவும் முடியாமல் எதோ குற்றம் செய்துவிட்டதாய் மனதிற்க்குள் தவித்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் சமீரா இரு பெண்காளோடு அங்கு வர சிவகங்காவதியைக் கண்டவர் ஒரு நொடி அதிர்ந்து விட்டார்.தான் முதன்முதலில் கண்ட பெண்ணா இது எனுமளவிற்கு உடல் எடை குறைந்து கைகள் எல்லாம் காய்த்துப் புண்ணாகி அழுக்கு உடையில் பார்க்கவே பரிதாபமாய் இருந்தாள்.

சூழ்நிலை உணர்ந்தவராய் தன் சிந்தனைகளைப் பின் தள்ளி இருப் பெண்களையும் அவளைப் பிடித்து கால்களைத் தேய்த்து விடுமாறு கூறினார்.அதனைத் தொடர்ந்து தன் கைவசம் கொண்டு வந்திருந்த மருந்தை அவள் வாயில் சிறிது சிறிதாய் புகட்டினார்.

“நஸீம் காய்ச்சல் சிறிதேனும் குறைய வேண்டும் நினைவு திரும்பாமல் இப்படியே இருப்பது உயிருக்கே கூட ஆபத்து விளைவிக்கும்.என்னால் இங்கேயே இருந்து இவளை கவனித்துக் கொள்ள இயலாது.இவளை எனதறைக்கு அழைத்துச் செல்கிறேன்.அவ்வப்போது உடலின் உஷ்ணத்தை கண்டறிந்து மருந்து கொடுக்க வேண்டும்.என்ன சொல்கிறாய்?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனிதா சங்கரின் " காதல் காதலித்த காதலியை காதலிக்கும்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அப்படியே செய்யலாம் தாதி. வீரர்களே இப்பெண்ணை தாதியின் அறைக்கு கொண்டுச் செல்லுங்கள்.”

“தாதி அவர்களே..பயப்படும் அளவு??”

“இப்போதைக்கு எதையும் கூறவிட முடியாது நஸீம்.பார்க்கலாம் அல்லாஹ் அவளுக்குத் துணையிருக்கட்டும்.நீ சென்று உறங்கு நான் பார்த்துக் கொள்கிறேன்.”

அதன்படி அவரது அறையில் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தாள் சிவகங்காவதி.காய்ந்த சருகாய் கிடந்தவளைப் பார்த்தவர்க்கு மிகவும் பாவமாய் இருந்தது.அங்கிருந்த பணிப் பெண்கள் சமீராவிடம்,

“பாட்டி அவர்களே இந்தப் பெண் இந்த நிலையிலும் எத்துனை அழகாய் இருக்கிறாள்.தென்பகுதிக்கே உள்ள களைத் தெரிகிறது முகத்தில்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.