(Reading time: 11 - 22 minutes)

கண்களில் வேதனையை தாங்கிக் கொண்டு தனது நிலாவிற்கு என்று தவிப்புடன் நிற்கும்  அண்ணனை  கீர்த்தனாவால் பார்க்க முடியவில்லை...

 “அசிடென்ட்  ஆகிடுச்சி..வேந்தா...எப்படின்னு தெரியல...பார்த்துட்டு இருக்காங்க...”என்றாள் கீர்த்தனா...

“கீர்த்தி நான் நிலாவ பார்க்க முடியுமா...”என்று தனது  தங்கையிடம் வேந்தன் கேட்க

“இல்ல...இப்ப முடியாது,உள்ள ட்ரீட்மென்ட் போது..இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர்ஸ் வந்துடுவாங்க...வைட் பண்ணுவோம்...”என்று கீர்த்தனா கூற வேறெதுவும்  சொல்லாமல்  தனது தலையை பின்னுக்கு சாய்த்து அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தான் வேந்தன்...

அவனால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதை நம்ப முடியவில்லை...காலையில் தான் வெளியில் கிளம்பும் பொழுது போர்வைக்குள் குட்டி முயலாய் சுருண்டு கொண்டு அசதியாய்  தூங்கியவள் இப்பொழுது இந்த நிலையில் இருப்பதை அவனால் நம்ப முடியவில்லை...

அவள் அவனுக்கு வேண்டாத மனைவி தான் இருந்தாலும் அவளின் இந்த நிலைமை அவனை உயிர் வரை  குதிக்கொல்லாமல் கொன்றுக் கொண்டிருந்தது..

தனது மனதில் ஓடும் குழப்பங்களாலும்,கோபத்தினாலும் அவனால் அவளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை...

என்னதான் அவளை காயப்படுத்தக்  கூடாது என்று நினைத்தாலும் அவனது அடிமனதில் இருக்கும் கோபங்கள் ஒவ்வொரு முறையும் அவளை காய படுத்த செய்துவிடுகிறது...

இவ்வாறு  அவன் தனது எண்ணங்களில் உழன்றுக் கொண்டிருக்க மல்லி தனது தமக்கையின் மொபைலுக்கு அழைத்து இருந்தார்...

தனது மகனுக்கும்,மருமகளுக்கும் அழைத்தவர் அவர்கள் இருவரும் தனது அழைப்புகளை ஏற்கவில்லை என்பதால் தனது தமக்கைக்கு அழைத்திருந்தார்...

சாரதாவால் எதையும் மறைக்க முடியவில்லை...இந்த நிலைமையை எவ்வாறு கூறாமல் இருக்க முடியும்...அதனால் தனது தங்கையிடம் இங்கு இருக்கும் நிலைமையை கூறிவிட்டார்...தாங்கள் கிளம்பிவருவதாய் சொல்லி  மல்லி அழைப்பை துண்டித்து இருந்தார்...

இங்கு கௌதம் தான் தனது பெற்றோரிடம் கூற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்... அவர்களிடம் கூற அவனுக்கு தைய்ரியம் இல்லை...

எப்படியும் மல்லி அத்தை முலம் தெரிந்துவிடும் என்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டான்...

மூன்று மணிநேரம் கழித்து வெளியில் வந்த டாக்டர்கள் கசப்பான உண்மையை தான் கூறினார்கள்... அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பவில்லை என்றாலும் அதன் நிதர்சனம் அங்கு இருந்தவர்களை கலங்க தான் செய்தது...

உடல் முழுவதும் பல இடங்களில் தேன்நிலாவிற்கு அடிப்பட்டு இருக்கிறது எனவும், அவளது  வயிற்றில் பலமாக அபட்டுள்ளதுடி என்றும்,தற்போது அவளது நிலை மோசமாக உள்ளது என்று கூறி சென்றிருந்தனர்...

அவர்கள் கூறியதை கேட்ட கௌதமால் தன்னை கட்டுப்படித்துக் கொள்ள முடியவில்லை...அவனது கண்களை தாண்டி கண்ணீர் வர ஆரம்பித்து இருந்தது... மனதில் இருந்த அழுத்தம்,பயம் எல்லாம் கண்ணீராய் அவன் கண்களை தாண்டி வந்துக் கொண்டிருந்தது...

மருத்துவர்கள் கூறியவைகளை  கேட்ட வேந்தனோ தனது நிலையில் இருந்து மாறாமல் அதே நிலையிலே மீண்டும் அமர...கீர்த்தி தனது உடன் பணிபுரிபவர்களுடன் சென்று தேன்நிலாவின் நிலையை பற்றி ஒரு மருத்துவராகஅறிந்துக் கொண்டாள்...

தேன்நிலாவிற்க்கு சிகிச்சை முடிந்து எட்டு  மணி நேரங்கள் கடந்திருக்க கௌதமின் எண்ணத்தை பொய்யாக்காமல்  வேந்தனின் பெற்றோர்களுடன் வந்திருந்தார்கள் அவனது பெற்றோர்களும்...

அன்னத்தை மல்லி கைதாங்கலாக பிடித்து வர..தேவியை தாங்கிக் கொண்டு வந்தார் கதிரேசன்...அவரது பக்கத்தில் சந்தனப்பாண்டியன் வந்துக் கொண்டிருந்தார்...

அவர்கள் வருவதை பார்த்த சாரதா தனது தங்கையின் அருகில் செல்ல...கௌதம் தனது தாய் தந்தையின் அருகில் சென்றான்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "சுஷ்ருதா..." - வித்தியாசமான காதல் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அவனை பார்த்ததும்,அன்னம்,தேவி இருவரும் அவனை கட்டிக்கொண்டு அழ கௌதமால் அந்த தாய்களை சமாளிக்க முடியவில்லை...

ஏற்கனவே அழுது அழுது கரைந்து இருந்தாலும் அவர்களால் தனது மகனை பார்த்ததும் மீண்டும் அழ ஆரம்பித்திருந்தனர்...

அவர்களை அங்கு இருந்த நாற்காலியில் அமர்த்தியவன் அவர்களுக்கு சமாதானம் கூறி அமைதியாக்கினான்...

மல்லி தனது மகனது அருகில் சென்று அவனது தோள் தொட தனது அன்னையை பார்த்தவன் அவரது தோள் சாய்ந்தான்... அவனது கண்களை பார்த்தே அந்த தாயால் உணர முடிந்தது அவனது மனதில் உள்ள வேதனையை...

தன்னை ஒரு தாயாய் உணரவைத்து,தனது தாய்மையை இந்த ஊருக்கு உணர்த்தி தனது மன காயங்கள் அனைத்திற்கும் மருந்தாய் இருந்த தனது ஆசை மகள் உடல் காயம் பட்டு உயிருக்கு போராடி கொண்டிருப்பதை அன்னத்தால் தாங்கி கொள்ள முடியவில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.