Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகா

en vazhve unnodu thaan

டலூர்

மாலை 6 மணிக்கு ஆதியின் வீட்டை அடைந்த 10 கார்களும் வரிசையாக வீட்டின் போர்டிகோவில் நின்றன. வீட்டில் வேலை செய்பவர்கள் அவசரமாக அந்த கார்களிடம் சென்றனர். கார்களை விட்டு இறங்கிய இரண்டு குடும்பமும் தங்களின் லக்கேஜ்கள் கூட எடுக்காமல் வீட்டுக்குள் தடாலாடியாக நுழைந்தனர்.

ஆதியோ முற்றத்தில் அமர்ந்துக் கொண்டு வெறும் வேட்டியுடன் பனியன் சட்டையில்லாமல் நிம்மதியாக காத்து வாங்கிக் கொண்டிருந்தான்.

வீட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்டபோதே ஆதி வேலைக்காரர்களை வெளியில் அனுப்பி பார்க்கச் சொன்னான். அதற்குள் வரிசையாக ஆட்கள் வரவும் ஆச்சர்யமாக பார்த்தான் ஆதி. சட்டென எழுந்து நின்றவன் சட்டையை தேடுவதற்குள் மகா ஓடிவந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். அவளின் செயலால் அவன் அதிர்ச்சியில் உறைந்தான்.

மகாவோ அழுதுக் கொண்டே

”எங்கடா போன, உன்னை எங்கல்லாம் தேடறது, எனக்கு தெரியுமா நீ யாமினியோட புருசன்னு நீ யார்ன்னு தெரியாமதானே பேசிட்டேன், வாய்க்கு வாய் எனக்காகத்தான் வந்தேன்னு சொன்னியே, ஏன்டா என்னைவிட்டு நீ போன” என அவள் கேட்க ஆதிக்கு சிரிப்பே வந்தது

”நீதானே போன்னு விரட்டினே” என்றான் நக்கலாக

”சொன்னா போயிடனுமா சொல்லுடா, நான் சொல்லியா என்னை தேடி வந்த, என்னை கல்யாணம் செஞ்சிக்கனும்னு ஆசைப்பட்டல்ல வா, இப்பவே நான் உன்னை கல்யாணம் செஞ்சிக்கிறேன், உனக்கு யாமினி வேணாம், அவள் அப்பா பேச்சை கேட்கறவ அவள் வேணாம் உனக்கு நான் இருக்கேன் ஆதி, உனக்காக நான் இருக்கேன்”

“அடிப்பாவி அப்ப சத்யனை விட்டாச்சா”

“உன்னை விட மனசில்ல, இனிமே என்னை விட்டு நீ போகாத”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நான் எங்க போனேன், நீதான்  போன்னு சொல்லி அடிச்சி விரட்டின”

“தப்புதான் என்னை மன்னிச்சிடு சாரி ஆதி”

“சாரி சொன்னா எனக்குப் பிடிக்காது அதுலயும் நீ சொன்னா எனக்கு பிடிக்கவே பிடிக்காது, ஆமா ஏன் அழற இப்ப அதான் என்னை தேடிபிடிச்சி வந்திட்டியே அப்புறம் என்ன”

“இருந்தாலும் நீ போயிருக்க கூடாது, உன்னை நினைச்சி நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா”

“நல்லாவே தெரியுது கொஞ்சம் என் கையை விடறியா நான் சட்டை போட்டுக்கறேன்” என சொல்லவும் மகா கைவிட்டு சற்று விலகவும் அவன் சிரித்துக் கொண்டே அவளுக்கு அடுத்து ஓரமாக நின்றிருந்த தான்யாவை பார்த்தான், அவளோ கண்கள் கலங்கி நிற்கவும் அவளைப் பார்த்து

”தான்யா வந்து சட்டையை எடுத்துக் கொடு” என சொன்னதுதான் தாமதம் ஓடிவந்து அவன் சட்டையை அருகில் இருந்த சேரில் இருந்து எடுத்து தந்தாள். அவளின் அழுகையை துடைக்க துண்டை நீட்டிய ஆதி

”நீ ஏம்மா அழற, என்னாச்சி உன்னை உன் புருஷன் திரும்பவும் அழவைச்சானா”

”இல்லை நீதான் என்னை அழவைச்ச, எதுக்கு வீட்டை விட்டுப் போன, எங்க போறேன்னாவது சொல்லியிருக்கலாம்ல நான் இந்த 1 வாரமா உன்னையே நினைச்சிட்டு இருந்தேன்.”

“என்னையா நினைச்ச, உன் புருஷன் உன்னை திட்டலை, சந்தேகப்படலை”

”அவர் என்ன நினைச்சா எனக்கென்ன, நீ ஏன் போன அப்படி போறதாயிருந்தா என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம்ல”

”ஆமாம் நினைச்சேன், வீட்டை விட்டு வெளிய வந்தப்பின்னாடி முதல்ல உன் ஞாபகம்தான் வந்திச்சி, அப்ப இருட்டா வேற இருந்திச்சா உன் வீட்டுக்கு வந்தா திரும்பவும் உன் புருஷன் சந்தேகப்பட்டு உன்னை டைவர்ஸ் பண்ணிட்டா என்ன செய்றதுன்னு அப்டியே திரும்பி போயிட்டேன்”

”அவர் டைவர்ஸ் பண்ணா பண்ணட்டும் பரவாயில்லை, நீ வரவேண்டியதுதானே பாவி” என அவனது தோளில் அடிக்கவும் சிரித்தான் ஆதி

”தான்யா இரு இரு உன் புருஷன் திட்டப்போறான், அமைதியா இரு அதான் நான் இருக்கற இடத்தை தேடி வந்திட்டியே அப்புறம் என்ன, நீ அழாத எனக்கு பிடிக்கலை, கண்ணை தொடை” என சொல்லவும் அவளும் தன் கண்ணீரை அவன் நீட்டிய துண்டில் துடைத்துக் கொண்டு மகாவிடம் சென்று நின்றுவிட்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் " உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள்..." - நட்பு கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அடுத்து ஆதியிடம் வீரா வந்தாள்

”ஆதி சாரி ஆதி, என்னாலதானே நீ அன்னிக்கு கோபமா போன, நான்தான் உன்னை கிண்டல் பண்ணேன் சாரி ஆதி ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு” என சொன்னவளை கோபமாகப் பார்த்தான் ஆதி

”ஏன் இப்படி கோபமா பார்க்கற ப்ளீஸ் ஆதி சாரி” என அவள் அழவும் ஆதி அவளிடம்

”இப்ப மகாவும் தான்யாவும் என்கிட்ட பேசினாங்களே அதையும் நீ தப்பா பேசி கிண்டல் செய்வியா சொல்லு”

”இல்லை ஆதி இல்லை நான் விளையாட்டுக்குத்தான் அன்னிக்கு உன்னை அப்படி கிண்டல் செஞ்சேன், வேணும்னே சொல்லலை சாரி ஆதி, என் மேல இருந்த கோபம் போச்சா” என கேட்க அவன் இல்லை என தலையாட்டவும்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகாViji. P 2019-03-19 21:33
உங்கள் கதைகளின் சிறப்ேபே அழகான கூட்டுக்குடும்ப வாழ்க்கைதான். வாழ்த்துக்கள் சசி. :clap: :clap: 😀😁👌
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகாsasi 2019-03-18 14:36
கதையை தொடர்ந்து படித்து ஆதரவளித்து கமெண்ட்டும் தந்து என்னை ஊக்கப்படுத்திய அனைத்து வாசகர்களுக்கும் எனது நன்றிகள். இந்த கதையின் முடிவு அனைவருக்கும் பிடித்திருக்கிறது எனக்கு மகிழச்சியாக உள்ளது மிகவும் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகாvijayalakshmi 2019-03-18 14:26
ஒருவழியாக ஆதியும் யாமினியும் ஒன்று சேர்ந்துட்டாங்க இந்த கதை சூப்பர் :clap: ஆதியின் செயல்கள் :grin:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகாராணி 2019-03-18 14:22
எல்லாருடைய பிரச்சனையும் தீர்த்து தன் பிரச்சனையையும் தீர்த்துட்டு வாழ்க்கை ஆரம்பிக்கும் ஆதிக்கு வாழ்த்துக்கள் :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகாmadhumathi9 2019-03-18 12:36
:dance: ellorum ondru sernthu nallapadiya koodivittaarhal.:clap: :thnkx: 4 this epi & story. (y) :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகாAdharvJo 2019-03-18 12:11
Simple and cool finish sasi ma'am 8) :clap: :clap: as usual unga joint family Galata was interesting but bheem.boy edho school boy range scene putting in the climax :D :P thank u for this entertaining series. Keep rocking and wish you all the best.

No poramai potti sandhegam only ottrumai ottrumai ottrumai 😍😍
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகாSrivi 2019-03-18 11:44
Super sissy..sema comedy story.. Enjoyed a lot
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகாதீபக் 2019-03-18 03:57
Great journey with the story with ups and downs. The climax episode is super :clap: . Soon start a new story sis :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top