(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01 - ஸ்ரீ

Unnodu naanirukkum mani thuligal

ஊற காக்க உண்டான சங்கம்

உயிரை குடுக்க உருவான சங்கம்

இல்ல இது இல்ல

நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள

 

நீதி நேர்மை காக்கின்ற சங்கம்

நெஞ்ச நிமிர்த்தி போராடும் சங்கம்

இல்ல இது இல்ல

இதுக்கு மேல என்னத்த சொல்ல

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

இவங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்

 

ஆழம் தெரியாம கால வச்சு

அடியும் சருக்கிருவோம்

ஹேய் ஊரு நடுவால பேனர் வச்சி

பட்டய கிளப்பிருவோம்

போற வழி போவோம்

பெரும் புள்ளிய போல தான் வாழ்வோம்

சென்னையின் பிரபலமான அந்த கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணிணி அறிவியல் பிரிவு வகுப்பறையின் மேஜையில் தாளம் போட்டவாறு மாணவர்கள் பாட்டு பாடி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க முதல் வகுப்பிற்கான கல்லூரி மணி ஒலித்தது கூட தெரியாமல் அலப்பறைகள் அம்சமாய் அரங்கேறிக் கொண்டிருந்தது வகுப்பின் வாசலில் அமைதியாய் நின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாள் ஜீவிகா.

சில நொடிகளில் முதல் வரிசையில் வாசலோரமாய் அமர்ந்திருந்த மாணவன் அவளைப் பார்த்துவிட்டு வேகமாய் நண்பர்களை சுயநினைவிற்குக் கொண்டு வந்தான்.

குட் மார்னிங் மேம்!!!”,கோரஸாக மொத்த வகுப்பும் பாட்டு பாட அனைவரையும் நோட்டமிட்டவாறே தனது இருக்கைக்கு வந்தவள் புத்தகத்தை டேபிளில் வைத்துவிட்டு கைகட்டி டேபிளில் சாய்ந்தவாறு நின்றிருந்தாள்.

சோ பைனல் இயரோட பர்ஸ்ட் க்ளாஸ் அமோகமா ஆரம்பிச்சுருக்கீங்க அப்படிதான?”

மேம் அது வந்து  பர்த் டே செலப்ரேஷன் அதான்..”,முன்னிருக்கை பெண் ஒருத்தி பவ்யமாய் கூறினாள்.

ம்ம் வெரி பேட்..”,என்றவாறு சற்று இடைவெளிவிட்டு முகத்தை சீரியஸாய் வைத்துக் கொண்டு  கீழேயிறங்கியவள் கடைசி பெஞ்சை நோட்டமிட பாதி திறந்த நிலையில் கேக் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்தது.

இங்க வா அதை எடுத்து இப்படி டேபிள் மேல வை.”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஒரு மாணவி பதட்டத்தோடே அவள் கூறியதை செய்து முடிக்க அதை மெதுவாய் திறந்து வைத்தவள்,”யாருக்கு இன்னைக்கு பர்த் டே இங்க வாங்க கொஞ்சம்.”

ஒரு மாணவன் அவளருகில் வந்து நின்றது தான் தாமதம் அவனிடம்,

ஹே கீழே பாரு உன்னோட ரூபா விழுந்துருக்கு எடுத்துக்கோ “,என்று கூற கீழே முழுதுமாய் அவன் குனிவதற்குள் கேக் டப்பாவை அடியிலிருந்து தூக்கியவள் அவனை நிமிர விடாமல் அப்படியே கேக்கிற்குள் முகத்தை அமுக்கியிருந்தாள்.

மொத்த வகுப்பறையும் மீண்டும் கரகோஷத்தோடு ஆரவாரத்தை ஆரம்பித்திருக்க அவசரமாய் அனைவரையும் சத்தத்தை குறைக்குமாறு செய்கை செய்தவள் பதறியவளாய்,

ஏன்டா ஒவ்வொருத்தனுக்கும் இருக்குறது தொண்டையா இல்ல திருவிழால போடுற ஸ்பீக்கர் செட்டா.இவனுக்கு பிறந்தநாள் கொண்டாடுறேன்னு என் வேலைக்கு மூடுவிழா நடத்திருவீங்க போலயே..மெதுவா தெய்வங்களா!!”,என்றவள் சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள்.அங்கு ஆரவாரங்கள் அடங்குவதற்கு சில நிமிடங்கள் எடுத்தது.

எல்லாரும் நம்ம புது மேம்க்கு ஒரு ஓஓ போடுங்க!!!”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

கோகோகோகோ…”

ஐயா ராசா போதும் நீங்க போடுற ஓனால என் வேலைக்கு ஊ ஊதிற போறாங்க..எல்லா ஆட்டபாட்டமும் முடிஞ்சுதா ப்லேஸ்ல உக்காருங்க.பர்த் டே பேபி முதல்ல பாத்ததைவிட இப்போ இன்னும் களையா இருக்க டா இருந்தாலும் முகத்தை போய் துடைச்சுட்டு வந்துரு.இங்க கொசு தொல்லை அதிகம்னு கேள்விப்பட்டேன்.”,என்று கூற மீண்டுமாய் பெரிய சிரிப்பலை உருவானது.

சோ.ஐ அம் ஜீவிகா நா தான் உங்களோட க்ளாஸ் இன்சார்ஜ்.ஆல்சோ ஆரக்கிள் ப்ரொபசர்.ரொம்ப கொடுமையான சப்ஜெக்ட்தான் ஆனாலும் படிச்சுதான் ஆகனும் வேற வழியில்ல.

அண்ட் முதல் நாளே மொக்கையை போட விரும்பல எல்லாரும் உங்களைப் பத்தின இன்ட்ரொடக்ஷனை கொடுங்க கேட்போம்.”

ஒவ்வொருவராய் எழுந்து தங்கள் பெயரைக் கூறிவிட்டு அமர பாதியிலேயே கைநீட்டி அவர்களைத் தடுத்தவள்,”என்னடா பசங்களா என் சப்ஜெக்டை விட ஓவர் மொக்கையை போடுறீங்க!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.