(Reading time: 15 - 30 minutes)

படிப்பு படிப்பாக இருக்க தோழிகளோடு தனக்கான சின்ன சின்ன சந்தோஷங்களையும் தக்க வைத்துக் கொண்டாள்.அதன் பின்னான முதுகலை பட்டத்திற்காக கெஞ்சி அவள் அன்னையை சம்மதிக்க வைத்து இந்த கல்லூரியில் சேர்ந்தாள்.

அதற்கும் ஆயிரம் இல்லை லட்சம் அறிவுரைகள்.படிப்பைத் தவிர வேறு கவனம் இருக்கக் கூடாது.எந்த நட்பாயினும் கல்லூரியோடு நிற்க வேண்டும்.ஆண் நட்பு கூடவே கூடாது.இன்னும் என்னென்னவோ.

ஆனால் எப்போதுமே அவளின் எல்லைகளை அவள் மறந்ததில்லை எனவே தன் வகுப்பில் அனைவரோடும் நட்பு பாராட்டினாள்.அந்த இரண்டு வருடங்களும் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் ஜீவிகாவிற்கு.அதன் பின் பி எட் முடித்த போது சாதாரணமாக ஒரு ஐடி கம்னியின் இன்டர்வியூ அட்டெண்ட் செய்தவளுக்கு வேலையும் கிடைத்துவிட்டது.

வாழ்க்கையே வெறுத்துவிடும் அளவு அவளுக்கும் மஞ்சுளாவிற்கும் வாக்குவாதம் சண்டை அனைத்தையும் தாண்டி வேலைக்குச் சேர்ந்தாள்.அவளின் கெட்ட நேரமோ என்னவோ அவளைத் தவிர அவள் டீம் மேட் அனைவரும் ஆண்கள்.

ஐடி வாழ்க்கையே காலம் நேரம் பார்க்காமல் உழைப்பது தான்.அப்படியிருக்க இவளுக்கு அடிக்கடி வேலை நிமித்தமாய் போன் வந்துகொண்டேயிருக்க அத்தனையும் ஆண்கள் என்பது மஞ்சுளாவிற்கு தூக்கத்தை கெடுத்துவிட்டது.

காலமே கெட்டு கெடக்குது நீ இப்போ வேலைக்கு போகலனு நா கேட்டேனா.பேசாம நா பாக்குற பையனை கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கையை பாரு.”

ம்மா உனக்கு எதுலதான் பயம் இல்ல சொல்லு இப்போ என்ன வேலை தான உன் பிரச்சனை நா வேலையை விட்டுறேன் போ..”,என்றவள் வேலையை விட்டு சில மாதங்களில் நின்றிருந்தாள்.

தன் உயிர் நண்பன் ஆத்விக் மூலமாக தான் தன் கல்லூரியிலேயே வேலைக்கு அப்ளை செய்து இங்கு சேர்ந்திருந்தாள்.இன்று மறுபடியும் அன்னையின் செயல் அவளின் நிம்மதியை சுத்தமாய் போக்கியிருந்தது.

மாலை வரை எப்படியோ பொழுதை கழித்தவளுக்கு வீட்டிற்கு செல்வதற்கே கடுப்பாக இருக்க அப்படியே மரத்தடியில் அமர்ந்துவிட்டிருந்தாள்.அந்த நேரத்தில் அவள் மொபைல் ஒலி எழுப்ப சுரத்தே இல்லாமல் பார்த்தவள் ஆத்விக் என்ற பெயரைப் பார்த்து அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

சொல்லு டா

என்ன டி முதல் நாளே இப்படி டல் அடிக்குற..நம்ம பசங்க வச்சு செஞ்சுவிட்டானுங்களா?”

கிழிச்சாங்க இதுங்கெல்லாம் நம்ம லேவல் இல்ல டா ஆத்வி..என்னமா பம்முறானுங்க தெரியுமா?”

அதான நீதான் ராணி மங்கம்மாவாச்சே உன்ட்ட வால்லாட்ட முடியுமா அப்பறம் ஏன் இப்படி கரண்ட்ல அடிபட்ட காக்கா மாதிரி பேசின

நீ வேற கடுப்ப கெளப்பாத டா எல்லாம் என்னை பெத்த தெய்வம் தான் வழக்கம் போல..”

பேசாம கல்யாணம் பண்ணி தான் தொலையேன் டீ நீயெல்லாம் சம்பாதிச்சு ஒரே பாட்டுல அம்பானியாவா ஆகப் போற?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கைல கிடைச்ச சாவடிச்சுருவேன்..பேசாம போய்டு

ம்ம் எங்கேயோ போற மாரியாத்தா என் மேல ஏறாத்தானானாம்..அம்மாகிட்ட பேச வக்கில்ல என்ட்ட கத்துறியா?”

உன்னையெல்லாம் எவ்ளோ கேவலமா பேசுனாலும் நீயெல்லாம் துடைச்சு போட்டுட்டு சுரணையே இல்லாம என்னடி ஜீனு பேசுவ.ஆனா அந்த மங்கையர் குல மாணிக்கம் நா அம்மா னு இரண்டு பாய்ண்ட் வால்யூம் ஏத்தினாலே கண்ல வாட்டர் டேங்க் ரெடியா வச்சு கொட்டித் தீர்த்து நிம்மதியா போய் சேர்ந்த எங்கப்பாவெல்லாம் தட்டி எழுப்பி என்னால முடியாது டா ஆத்வி..

நாலு அடி அடிச்சா கூட தாங்கிரலாம் இதெல்லாம் பொறுத்துக்கவே முடில கோபால் பொறுத்துக்க முடில.”

மறுபுறம் சத்தமாகவே சிரித்தவன்,”ஆனாலும் உனக்கெல்லாம் இந்த வாய் மட்டும் இல்ல நாய் தூக்கிட்டு போய்டும் டீ..சரி அதுக்காக வீட்டுக்கு போகாம எவ்ளோ நேரம் அங்கேயே இருப்ப கிளம்பு

ம்ம் போகணும் போய்த்தான் ஆகணும் இல்லையென்றால் என் நிலைமை மிகவும் பரிதாபம் ஆகிவிடுமே கோபால்..”

பைத்தியம் முதல்ல எழுந்துபோ”,என்றவனுக்கு புன்னகையில் உதடு விரிந்திருந்தது.

ஆத்விக் சற்றே மேல்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.பெற்றோருக்கு ஒரே மகன்.நினைத்ததெல்லாம் கிடைக்கும் ரகம் தான் நிச்சயமாய்.டிகிரி என்பதே பேருக்கு வாங்க வேண்டிய நிலைமை தான் என்றாலும் கணிணி துறையிலிருந்த அவனது மிகுந்த ஆர்வத்தில் நன்றாகவே படித்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

முதுகலை முடித்த கையோடு தன் தந்தையின் பிஸினஸை கையில் எடுத்துக் கொண்டான்.அதில் குறுகிய காலத்தில் பெயரையும் நிலை நாட்டியிருந்தான்.சட்டென யாரிடமும் நண்பனாகி விடும் அவன் மற்றவர்களைப் போன்று தான் ஜீவிகாவிடமும் ஆரம்பத்தில் நட்பு பாராட்டினான்.

ஆனால் முதலாம் ஆண்டின் சில மாதங்களிலேயே இருவரும் நெருங்கிய நண்பர்களாய் மாறியிருந்தனர்.அவனைவிட அவன் அன்னை கீர்த்தனாவும் தந்தை ஆனந்தும் தான் அவளுக்கு இன்னும் நெருக்கம்.

பெண்பிள்ளை இல்லாத அவர்களுக்கு ஏனோ ஜீவிகாவின் சுட்டித் தனத்தை பார்த்து மிகவும் பிடித்துவிட்டது.அன்றிலிருந்து அவளுக்கு எதுவென்றாலும் ஆத்விக் தான் முதல் ஆளாய் நிற்பான்.

ஆனாலும் மஞ்சுளாவிற்கு அவன் ஜீவிகவின் கல்லூரிகால நண்பன் என்பதை தாண்டி எதுவும் தெரியாத அளவிலேயே அவர்களின் நட்பு இருந்தது.ஆத்விகின் பெற்றோருக்கும் அவள் நிலை புரிந்ததால் ஒன்றும் கூறவில்லை.

தங்களுடைய நட்பை பற்றி எண்ணியவாறே சற்று மலர்ந்த முகத்தோடு வீட்டை நோக்கி தன் இருசக்கர வாகனத்தை இயக்கினாள் ஜீவிகா. 

தொடரும்...

Episode 02

Go to Unnodu naanirukkum manithuligal story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.