(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 02 - ஸ்ரீ

Unnodu naanirukkum mani thuligal

ஒரு பூங்காவனம் புதுமணம்

அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்

உலாவரும் கனாக்கள் கண்ணிலே

ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

 

நான் காலைநேரத் தாமரை

என் கானம் யாவும் தேன்மழை

நான் கால்நடக்கும் தேவதை

என் கோவில் இந்த மாளிகை

எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்

என்னோடு தோழி போலப் பேசிடும்

உலாவரும் கனாக்கள் கண்ணிலே

ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

பாடலை முணுமுணுத்தவாறே தனக்கும் தாய்க்குமாக இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்தாள் ஜீவிகா.பொறுத்துப் பார்த்த மஞ்சுளாவிற்கோ ஒரு எல்லைக்கு மேல் முடியாமல் கோப மூச்சுகளோடு சமையலறைக்கு வந்தவர் அவளிடம் கத்த ஆரம்பித்திருந்தார்.

“ஏன்டி எப்படி உன்னால கொஞ்சம் கூட கவலையே இல்லாம இப்படி பாடிட்டு இருக்க முடியுது.”

“இப்போ கவலை படுற அளவு என்னம்மா ஆச்சு?”

“ஏன் கேக்க மாட்ட பொண்ணு பாக்க வரேன்னு சொன்னவங்க கடைசி நிமிஷத்துல முடியாதுனு சொல்லிடாங்களேனு என் மனசு கிடந்து தவியா தவிக்குது நீ சாதாரணமா என்ன ஆச்சுனு கேக்குற?”

“ம்மா அவங்க வர மாட்டேன்னு சொன்னா அதுக்கு நா என்னம்மா பண்ண முடியும்?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ம்ம் காலையிலே உன்னை சீக்கிரம் வானு சொன்னப்போ அபசகுணம் பிடிச்ச மாதிரி கத்தினல அதான் இப்படி ஆயிடுச்சு”

“இதெல்லாம் நல்லதுக்கே இல்ல சொல்லிட்டேன்.எப்போ இருந்து நீ இப்படி ஆன மா..எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுற..ஏன் மா என்னை துரத்துறதுலயே இருக்க…உனக்குனு இருக்குறது நா மட்டும் தான் என்னையும் கல்யாணம் பண்ணி அனுப்பிட்டு என்ன பண்ணுவ.என் நிலையும் யோசிச்சு பாரு மா..எனக்கும் மனசுனு ஒண்ணு இருக்குல.”

“பெரிய கிழவி மாதிரி பேசாத என்னை பாத்துக்க எனக்குத் தெரியும்.அப்பா நம்மளை விட்டுட்டு போய்ட்றாரு அதுக்காக நம்ம வாழ்க்கை அப்படியே நின்னு போச்சா அது மாதிரி தான் உன் கல்யாணம்ங்கிறது காலாகாலத்துல நடக்க வேண்டியது.”

“…..”

“இனி நா உன்கிட்ட எதுவும் கேக்க போறதில்ல ..இதான் மாப்பிள்ளைனு நிறுத்துவேன் அவ்ளோ தான்.”

“சரி அதை நடக்குற அப்போ பாப்போம்..இப்போ வா சாப்டலாம்.”

“ம்ம் இப்போ சாப்பாடு ஒண்ணு தான் குறைச்சல் நீயே சாப்டு போ”,என்றவர் ஹாலில் சென்று அமர்ந்து கொள்ள ஜீவிகாவோ அலையடித்து ஓய்ந்த உணர்வில் இருதட்டுகளில் உணவை எடுத்துக் கொண்டு அவரிடம் சென்றார்.

அந்த வார சனிக்கிழமை மதியத்திற்கு மேல் தனக்கு வகுப்பு இல்லாததால் ஆத்விக் வீட்டிற்கு செல்லலாம் என்று முடிவு செய்தவள் அவனுக்கு மெசெஜ் அனுப்பிவிட்டு தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

“ஆன்ட்டி!!!நான் வந்துவிட்டேன்..”

“குட்டியேய் எப்படி இருக்க எவ்ளோ நாள் ஆச்சு உன்னைப் பார்த்து..”

“இந்த வார்த்தையை கேட்காமல் நானும் ரொம்ப மிஸ் பண்ணேன்..ஹே அங்கிளும் வீட்ல இருக்காங்களா என்ன அங்கிள் பயங்கர கவனிப்பு போலயே கொஞ்சம் வெயிட் ஏறின மாதிரி இருக்கீங்க?”

“அட ஏன் டா நீ வேற ஒழுங்கா சாப்பாடு போடுறதே இல்ல உங்க ஆன்ட்டி..”

“ஆஹான்..அவசரப்பட்டு வாயைகொடுத்து புண்ணாக்கிட்டீங்களே அங்கிள் நா கிளம்பினப்பறம் நீங்க வாங்க போற அடிகளை நினைச்சா என் கண்ணுல ரத்த கண்ணீர் வருதே அங்கிள்..”

“அதற்குள் அவளின் தலையில் பின்னிருந்து தட்டியபடி உள்ளே நுழைந்த ஆத்விக்,”போதுமே அடிமை சிக்குச்சுனு விடாம ப்ளேட் போட ஆரம்பிச்சுருவியே”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“உனக்கு ஏன் டா எரியுது நா இல்லாம வேற யர் இப்படி பேசுவா..இல்ல அங்கிள்..”

“அப்படி சொல்லு என் தங்க கட்டி..சரி ரொம்ப டயர்டா தெரியுற போ போய் சாப்டு முதல்ல..”

“உள்ளே வரும்போதே ஆன்ட்டியோட காரக்குழம்பு வாசம் ஆளை தூக்குச்சு அதை ஒரு கட்டு கட்டாம எப்படி?வா வா ஆத்வி சாப்டலாம்.”

“அடச்சே ஒரு லேக்சரர் மாதிரியாடி இருக்க ஏதோ வாழ்க்கையிலே சோத்தையே பாக்காத மாதிரி..”

“அடப் போடா ஆன்ட்டியின் கார குழம்பிற்கு நான் அடிமை..ஆலம்பனா இந்த கயவனை என்ன செய்யலாம் என்று கூறுங்கள்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.